கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 11 9

“வீட்டுக்கு மாப்பிள்ளை வரப் போற நேரத்துல, என் மனசு ஏன் இப்படி தறிகெட்டு ஓடி பழசையெல்லாம் நினைக்குது?” அவள் கன்னங்களில் கண்ணீர்ர் வழிந்தோடி அவள் உதடுகளைத் தொட்டது. மழை நீர் சுத்தமானதுன்னு சொல்றாங்களே, எத்தனை தடவை நான் மழையில நின்னு நனைஞ்சிருக்கேன்? இன்னைக்கு ஏன் எனக்கு மழைத் தண்ணி உப்பு கரிக்குது? நான் அழறேனா என்ன? என் மனசு கல்லுன்னு என் ஃப்ரெண்ட்ஸ்ல்லாம் சொல்றாங்களே?” அவள் மனதுக்கு இதற்கான விடை தெரிந்திருந்த போதிலும், அவள் பரிதவித்துக் கொண்டிருந்தாள். சுகன்யா, பால்கனி கதவு ஏற்படுத்திய சத்தம் கேட்டு, தூக்கத்திலிருந்து சட்டென விழித்து எழுந்தாள். பக்கத்தில் படுத்திருந்த தாயைக் காணாமல் ஒரு நொடி பதறிப் போனாள். பால்கனி கதவு காற்றில் மீண்டும் திறந்து கொள்ள, மின்னல் வெளிச்சத்தில் சுந்தரி வெளியில் மழையில் நின்று கொண்டிருப்பது அவள் கண்ணில் பட்டது. எழுந்து விளக்கைப் போட்டாள்.
“இந்த அம்மாவுக்கு மழை மேல அப்படி என்ன அடங்காத ஆசை? எப்ப மழை பேஞ்சாலும் பயித்தியமாட்டம் ஓடிப்போய் அதுல நனையனும்; ராத்திரி பகல் ஒன்னும் கிடையாது. அவள் மனதில் சலித்துக்கொண்டு சுவரில் மாட்டியிருந்த குடையை கையில் எடுத்துக்கொண்டு வெளியில் ஓடினாள்.
“எம்ம்மா, உள்ளே வாம்மா; யாராவது உன்னைப் பாத்தா பயித்தியம்ன்னு நெனைச்சுக்கப் போறாங்க.” சுகன்யா, சுந்தரியின் கையை பிடித்து உள்ளே இழுத்துக்கொண்டு வந்தாள். தன் மகளின் கரம் அவள் உடம்பில் பட்டதும், சுந்தரியின் உடல் இலேசாக நடுங்கியது.
“தலையைத் சீக்கிரமா துவட்டும்மா; ஜொரம் வரப்போவுது உனக்கு; உடம்பு நடுங்கற அளவுக்கு மழையில நனையறே? … முதல்ல உன் ரவிக்கையை அவுத்துட்டு இதை உடம்புல போடு
“, அலமாரியை திறந்து ஒரு புது நைட்டியை எடுத்து தன் தாயிடம் நீட்டினாள் சுகன்யா. ஸ்டவ்வை பற்ற வைத்து பாலைச் சூடாக்கி, காஃபியை கலக்க ஆரம்பித்தாள்.
“கண்ணு, எனக்கு ஒன்னும் இல்லடா; ஏன் இப்படி பதறிப் போறே நீ?”
“ஆமாம் … பதறிப் போறேன் நான்? … இடியிடிக்குது, அப்படி ஒரு மின்னல் மின்னுது; மழையில போய் நிக்கறே? உனக்கு என்ன ஆச்சு இப்ப? எனக்கு எல்லாம் தெரியும் … இப்ப உனக்கு உன் புருஷன் நினைப்பு வந்துடுச்சு… அதானே?”
“அதெல்லாம் ஒண்ணுமில்லடி” காஃபியை உறிஞ்சிய சுந்தரி போலியாக சிரித்தாள்.
“நான் இன்னும் சின்னக் குழந்தையில்லம்மா; உண்மையை சொல்லு நீ … பொய் பேசக்கூடாதுன்னு மூச்சுக்கு முன்னூறு தரம் எனக்கு உபதேசம் பண்ற நீ; நான் தெரியாத்தனமா சொல்லிட்டேன்; என் அப்பாவை பாக்கணும்ன்னு; அது உன்னை இந்த அளவுக்கு பாதிக்கும்ன்னு நான் நினைக்கலை அப்ப; உனக்கு இஷ்டமில்லேன்னா, நான் அவரைப் பாக்கமாட்டேன்னும் சொல்லிட்டேன்; அப்புறம் எதுக்கு நீ நேத்து ராத்திரி பூரா அழுதுகிட்டு இருந்தே?” பெண்ணின் பேச்சிலிருந்த உண்மை அவளைச்சுட்டது.
“சுகா … நீ சொல்றது சரிதாம்மா … நான் யோசனைப் பண்ணிப் பாத்தேன்”
“என்னம்மா சொல்றே நீ”
“தீராத கோபம் யாருக்கு லாபம்? தங்கமான மனுஷந்தாண்டி உன் அப்பா. அந்த குடிப்பழக்கம்தான் அவரை ஒரு மனுசனா இல்லாம ஆக்கியிருந்தது. நானும் உன் மாமாவும் சேர்ந்து தானே அவரை அடிச்சு விரட்டினோம். என் புருஷன் நல்லவர்தான் ஆன ரொம்ப ரோஷக்காரர். யாருக்குத் தெரியும்? நீ சொல்றது மாதிரி உங்கப்பா ஒருவேளைத் தன் குடிப்பழக்கத்தை விட்டுட்டு திருந்தி வாழ்ந்துகிட்டு இருக்கலாம்? திருந்தியே இருந்தாலும் உங்காப்பாவா எப்படி திரும்பி வருவார்? உன் மாமாவுக்கு அவர் இருக்கற இடம் தெரிஞ்சு இருக்குன்னு நினைக்கிறேன் … நானே உன் அப்பாகிட்டே பேசறேன் … திரும்பி வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிடறேன் …” சுந்தரி சுவரைப் பார்த்துக்கொண்டு பேசினாள்.
“நிஜம்மாவாம்மா சொல்றே?” சுகன்யா தன் தாயின் தோளில் தன் கையைப் போட்டுக்கொண்டாள்.
“நிஜம்மாத்தாண்டா கண்ணு சொல்றேன்.”
“தேங்க்ஸ்ம்மா… ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்ம்மா … உனக்கு … கஷ்டமாயிருந்தா நான் வேணா அப்பாக்கிட்ட பேசறேனேம்மா … அவருக்கு என் மேல என்ன கோபம் இருக்க முடியும்?” சுகன்யா தயங்கி தயங்கிப் பேசினாள்.
“சரிடா கண்ணு … நீ தான் பேசு … எனக்கு ஒண்ணும் பிரச்சனையில்லம்மா … இப்ப லைட்டை நிறுத்து … செத்த நேரம் தூங்கலாம் … மணி ரெண்டாவாகப் போகுது …” தெரு விளக்குகள் பளிச்சென்று எரிந்து கொண்டிருந்தன. பண்புள்ள ஒரு குடும்பத்துடன், மாலை நேரத்தை கழித்ததானல் உள்ளத்தில் பொங்கிய உவகையுடன், அந்த இனிமையான சுவையை அசைபோட்டவாறே, மனம் நிறைய குதூகலத்துடன் குமாரசுவாமி கெஸ்ட் ஹவுசை நோக்கி மெதுவாக நடந்து கொண்டிருந்தார். தன் மனசிலிருந்த மகிழ்ச்சியை பதட்டமில்லாமல் அனுபவிக்க விரும்பி ஆட்டோவைத் தவிர்த்துவிட்டு, தான் தங்கியிருந்த இடத்திற்கு அவர் நடந்து செல்ல விரும்பினார். நடப்பது அவருக்கு மிகவும் பிடித்தமான பொழுது போக்கு. கடந்த பதினைந்து வருடங்களாக, தன் ஓய்வு நேரத்தை நடப்பதிலேயே அவர் கழித்துக் கொண்டிருந்தார். குளிர்ச்சியாக வீசிக்கொண்டிருந்த காற்றும், வரப்போகும் மழையும், அவருடைய உள்ளத்தில் பொங்கிய மகிழ்ச்சியை ரெட்டிப்பாக்கிக் கொண்டிருந்தன. குமாரசுவாமியின் நிழல், அவருடன் சேர்ந்து சென்றது, பின்னாலிருந்து அவரைத் துரத்தியது, வேகமாக முன்னால் சென்று, மீண்டும் பின்னால் வந்து அவரைத் துரத்தியது. முன்னேயும் பின்னேயும் ஓடி ஓடி … ம்ம்ம் … களைப்பே இல்லையா இதுக்கு; என் மனசை மாதிரி; அவர் சிரித்துக் கொண்டார். கால்கள் மெதுவாக நடை போட அவர் மனம் வேகமாகப் பறந்தது.

Updated: March 28, 2021 — 9:30 am