கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 11 9

“நடராஜன் குடுத்து வெச்ச மனுஷன். அவர் கட்டிக்கிட்ட பொம்பளை, ஒல்லியா வெட வெடன்னு இருந்தாலும்; பளிச்சுன்னு மனசுல ஒட்டிக்கற முகம்; சிம்பிளா ஒரு மூக்குத்தி, தோடு, கழுத்துல மெல்லிசா ஒரு செயின், வாய் நிறைய சிரிப்பு; தீர்மானமாக ஒரு பேச்சு; கொஞ்சம் முன் கோபியா இருப்பாளோ? அந்தம்மா பார்க்கற பார்வையில பொண்ணும், புருஷனும், பணிஞ்சிப் போயிடறாங்க; இருந்துட்டுப் போவட்டுமே; அவங்க குடும்பம்; அவங்க குடும்பத்தோட நல்லதுக்காகத்தானே மல்லிகா ஸ்ட்ரிக்டா இருக்காங்க; அவங்களுக்கு ஒரு ஆம்பிளைப் புள்ளைன்னாரு நடராஜன்”.

“நல்லவங்களுக்கு பொறந்தவன்; அவனும் நல்லவனாத்தான் இருப்பான்; ரெண்டு பேரு மேலயும் பாசத்தைக் அள்ளிக் கொட்டறாளே இந்த அம்மா!என்னமா ஓடி ஓடி, போதும்ன்னாலும் கேக்காம கை நெறய, அள்ளி அள்ளி என் எலையில போட்டா; முகத்தைப் பார்த்து பரிமாறின விதத்துல தெரியுதே அவ மனசு தாராளம்ன்னு; குமாரசுவாமியின் மனசு வஞ்சனையில்லாமல் வாழ்த்தியது மல்லிகாவை!”
“எனக்கு வாய்ச்சவ மட்டும் எந்த விதத்துல கொறச்சலா இருந்தா? அழகுல கொறையா? இல்லையே? அம்சாம இருந்தா! சுந்தரிங்கற பேருக்கு ஏத்தப்படி சுந்தரியாத்தான் இருந்தா; படிப்புல கொறையா? நல்லாப் படிச்சுட்டு கை நெறைய சம்பாதிச்சா; நான் உன்னை காதலிக்கறேன்னு சொன்ன ஒரு வார்த்தைக்காக அவ அப்பன் ஆத்தாளை பகைச்சிக்கிட்டு எனக்காக என் பின்னால கூப்பிட்ட உடனே ஓடி வந்தா? என் கூடப்படிச்சவன்ல்லாம் பொறாமையில வயிறெரிஞ்சானுங்க …
“மாப்ளே, லாட்டரி விழுந்துடுச்சுடா உனக்குன்னு!”
“சுந்தரிக்கும் தாராள மனசுதான்; என்னக்குறை வெச்சா எனக்கு? கேட்டப்பல்லாம், வாரி வாரி மனசார அவளையும், அவ சம்பாதிச்ச பணத்தையும் எனக்கு அள்ளி அள்ளிக் குடுத்தா; நேரத்துல அழகா தங்க விக்கிரகம் மாதிரி ஒரு பொண்ணையும் பெத்து என் கையிலக் கொடுத்து என்னைப் அப்பனாக்கினா; என் நேரம் சரியில்லாம போனா, நேரம் என்னா நேரம்? நான் புத்திக்கெட்டுப் போய், சேரக்கூடாதவன் கூட சேர்ந்து, குடிக்கக் கத்துக்கிட்டு, என் குடியை நான் அழிச்சிக்கிட்டா அதுக்கு யார் பொறுப்பு? கொடுத்தவன் நல்லாத்தான் குடுத்தான்; நான் அவளை வெச்சி வாழல; அதுக்கு யாரைக் குத்தம் சொல்றது?”
“வேணாம் குமாரு, நாம அழிஞ்சிப் போயிடுவோம்டா; தலைத் தலையா அடிச்சுக்கிட்டா; நம்பளைப் பாத்து ஊர்ல இருக்கற ஜாதி ஜனங்கல்லாம் சிரிப்பாங்கடா? நாம காதல் காதல்ன்னு ஊரு, உறவு மொறைங்களை பகைச்சுக்கிட்டு வந்துட்டோமே? அத்தனை பேருக்கும் நாம இளக்காராமா போயிடுவோம்; இந்த குடிப்பழக்கத்தை விட்டுடான்னு அன்பா சொல்லிப் பாத்தா; கெஞ்சினா; மிரட்டிப்பாத்தா; ரெண்டு வருஷம் நான் அடிச்சக் கூத்தையெல்லாம் பொறுத்துக்கிட்டு இருந்தா.”
“கடைசியா என் குடி வெறியில என் பொண்ணையே நான் கடிச்சுப் புண்ணாக்கினா; எந்தப் பொம்பளைத்தான் சும்மா இருப்பா; அப்புறம்தான் தொடப்பத்தை எடுத்து அடிச்சிப்பிட்டா; என் வீட்டை விட்டு வெளியில போன்னா; அவ தம்பி அரிவாளைத் தூக்கிக்கிட்டு வெட்ட வந்தான். அவனுக்கு மட்டும் உரிமையில்லயா; குடிச்சுப்புட்டு அங்கங்க நான் வாங்கி வெச்ச கடனையெல்லாம் அவன் தானே தீர்த்தான். அவன் வீட்டுலதானே நாங்களே இருந்தோம். சுந்தரி மேல என்னத் தப்பு இருக்கு? ரோஷமா, வீட்டை விட்டு போடான்னு அடிச்சு விரட்டினாளேன்னு நானும் மறு பேச்சு பேசாம போயிட்டேன். பொண்டாட்டி புள்ளையில்லாம தனியா பிச்சைக்காரன் மாதிரி ஊர் ஊராக அலைஞ்சதுக்கு அப்பறம் தான் புத்தி வந்தது; பதினைஞ்சு வருஷமா தனியா வீம்பா, கோபமா வாழ்ந்து என்னத்தைக் கண்டேன்?”
“அப்பா அம்மா என் கூட வந்து இருக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் , வாழ்க்கையில இப்ப ஒரு பிடிப்பு வந்திருக்கு. டேய் எங்க உசுரு போறதுக்கு முன்னே எங்க பேத்தியைப் பாக்கணும்ன்னு அவங்க துடிக்கிறாங்க. போடா, அந்த பொண்ணு கால்லே விழுந்தாவது என் பேத்தியை கூப்பிட்டுக்கிட்டு வாடாங்கறாங்க; உடம்புல ரத்தம் குறைய குறைய இப்ப என் மிச்சமிருக்கற காலத்தை கட்டிக்கிட்டவ கூட கழிக்கணும்ன்னு தோணுது. சுந்தரியை பாக்கணும்ன்னு என் மனசு துடிக்குது. நான் அவ வீட்டுக்குப் போனா வான்னு சொல்லுவாளா? என்னை மன்னிச்சு தன் புருஷனா மீண்டும் என்னை ஏத்துப்பாளா? முதல்ல அவ தம்பி ரகுகிட்ட தான் பேசிப்பாக்கணும். எத்தனை அலைஞ்சு, யார் யாரை விசாரிச்சு, அவன் ஆஃபீசை கண்டுபுடிச்சி, அவன் செல் நம்பர் எனக்கு கிடைச்சிருக்கு. இன்னைக்கு கெஸ்ட் ஹவுசுக்கு போனதும் என் மச்சான் கிட்ட பேசி என் குடும்பத்தை பத்தி முழுசா தெரிஞ்சுக்கணும்.”
“மீனா துறுதுறுன்னு இருக்கா; மணியான பொண்ணு; பெத்தவ பாக்கற பார்வையிலேயே, சொல்றது என்னான்னு புரிஞ்சிக்கிட்டு செய்ய வேண்டிய காரியத்தை கரெக்டா செய்து முடிச்சிடறா! பொண்டாட்டி, புள்ளைங்க, சினேகிதன், வேலைக்காரன் இதெல்லாம் மேல இருக்கறவனா பாத்து கொடுக்கறது. வரம் வாங்கிக்கிட்டு வரணும்.

“டேய் மடையா! என்னப் பேசறே நீ; உன் பொண்ணுக்கு என்னடா குறைச்சல்; உன் மேல அப்பா அப்பான்னு உசுரை வுட்டாளே; உன் மடியிலதான் உக்காந்து சாப்பிடுவேன்னு தினம் ஒரு அமக்களம் பண்ணுவா! நீ குடிச்சுட்டு வர ஆரம்பிச்சதிலேருந்து எல்லாம் போச்சு; உன்னைப் பாத்தாலே அந்த குழந்தை பயந்து நடுங்க ஆரம்பிச்சிடுச்சி.” குமாரசுவாமியின் கண்கள் கலங்கியது. இப்ப அழுது என்ன பிரயோசனம். இன்னும் என் சுந்தரி கும்பகோணத்துலதான் வேலை செய்யறாளா? என் சுகன்யா … என் குழந்தை சுகா என்னப் பண்ணிக்கிட்டிருப்பா? என்னைப் பாத்தா அவளுக்கு அடையாளம் தெரியுமா? அவளுக்கு இருபத்தி மூணு வயசாயிருக்கும்; என் பொண்ணுக்கு கல்யாணம் ஆகியிருக்குமா? அப்படியே ஆகியிருந்தாலும் என்னை என் பொண்ணு கல்யாணத்துக்கு சுந்தரி கூப்பிட்டிருக்கணும்ன்னு என்ன அவசியம்? நான் என் குழந்தைக்கு இதுவரைக்கும் என்ன பண்ணியிருக்கேன்? அவர் மனம் வெட்கத்தில் துவண்டது. கடவுளே ஒரு சான்ஸ் … ஒரே ஒரு சான்ஸ் எனக்கு குடு … என் மனைவியை … என் குழந்தையை, என் கண்ணுல வெச்சு நான் பாத்துக்குவேன். என்னை நம்பி வந்தவளுக்கு, நான் பண்ண கொடுமைக்கு; அவ மனசு சந்தோஷப் படற மாதிரி நடந்துக்கறதுக்கு ஒரே ஒரு வாய்ப்பு குடு; அவர் மனது இறைந்தது. மழை தூறத் தொடங்கியது. என் இறைஞ்சுதல்

Updated: March 28, 2021 — 9:30 am