ஒரு பொண்டாட்டியின் ஏக்கம் 2 107

அவர் ஒன்னும் சொல்லாமல் சிரித்தார். இதுக்கும் சிரிப்பு தான என்று மனதுக்குள் நினைத்தேன். அவர் ஸ்மைல் பண்ணும் போது ரொம்ப ஹேன்சம்மாக இருந்தார். (உண்மையில் சிவாவுடன் ஒப்பிடும் போது என் கணவன் தான் இன்னும் ஹென்சம்) அவர் உயரம் 5′ 10″ நல்ல உடல் காட்டும் உள்ளவர். அவர் அன்று என்னிடம் பேசாகையில் நான் மெல்ல மெல்ல அவரை காதலிக்க துவங்கிவிட்டேன். இது நான் கட்டிக்க போறவன் என்பதால் வந்த உணர்வா இல்லை உண்மையிலே அப்படி இல்லாவிட்டாலும் இந்த உணர்வு வந்து இருக்குமா என்று எனக்கு தெரியவில்லை. அனால் ஒன்று நிச்சயம் எனக்கு அவர் மேல் ஈர்ப்பு இருந்தது. இது இதுவரைக்கும் எந்த ஆணிடமும் எனக்கு வந்ததில்லை. நெடுநாள் பழகிவர்கள் போல் சகஜமாக பேசினோம். அவருடன் இருப்பது எனக்கு மிகவும் கம்போர்ட்டபெல் (comfortable) இருந்தது. நேரம் ஆனதால் எனக்கு டின்னெர் வாங்கி தந்தார். அதற்குள் என் அம்மாவிடம் இருந்து மூன்று காள் வந்து விட்டது. நான் சாய்லேண்ட் டில் போட்டு இருந்ததால் அதை கண்டும் காணாததுபோல் இருந்தேன். அன்றைக்கு வீடு திரும்பும் போது மணி கிட்டத்தட்ட ஒன்பது ஆகிவிட்டது. நான் என் வீட்டின் உள்ளே என் ஸ்கூடி வைத்து விட்டு கேட்டை மூடும் போது பார்த்தேன் அவர் கார் திரும்பி சென்றது. நான் பார்த்ததை கண்டு எனக்கு கை அசைத்து விட்டு சென்றார். எனக்கும் தெரியாமல் நான் பத்திரமா வீடு அடைவதுக்கு உறுதி செய்ய பின் தொடர்ந்து இருக்கிறார்.
நான் வீட்டின் உள்ளே நுழைந்த உடனே அம்மா ஏகப்பட்ட கேள்வி கேட்டல். எல்லா கேள்விகளுக்கும் சுருக்கமாக பதில் சொன்னேன்.

“அவர் பெற்றோர் நாளைக்கு உங்களை கூப்பிடுவார்கள்,” என்றேன்.

“சரி டி குளிச்சிட்டு சீக்கிரம் சாப்பிட வா.”

“உன் வருங்கால மருமகன் டின்னர் வாங்கி கொடுத்துட்டார். செம்ம பில் அவர் தலையில் கட்டிட்டேன்,” என்று சொல்லி சிரித்தேன்.

“இதையெல்லாம் நீ செய்வே டி,” என்று பதிலுக்கு அம்மா சொன்னாங்க.

நாம் பேசுவதை கேட்டுகிட்டு அப்பா ஒன்றும் சொல்லவில்லை அனால் அவர் முகத்தில் பெரும் சந்தோசம் தெரிந்தது.

நான் குளித்தவுடன் என் பெற்றோருக்கு சொன்னேன்,” சரி நான் தூங்க போறேன்.” அப்போது மணி பத்து தான் ஆனது.

“ஆமா டி, இனிமேல் உனக்கு எங்களுடன் பேச எங்க நேரம் இருக்கும்,”என்றல் என் அம்மா.

“புரிஞ்சிகிட்ட சரி,” என்று புன்னகையோடு என் அறைக்கு சென்றேன்.

என் அறையில் என் போனை முறைத்து முறைத்து பார்த்தேன்.

1 Comment

  1. Where are Qatar

Comments are closed.