ஒரு பொண்டாட்டியின் ஏக்கம் 2 107

“அப்படி பார்க்காதீங்க நீங்க வேண்டாம் என்று சொல்ல போறிங்களா பயமா இருக்கு. இவளோ வேகத்தில் என் இதயம் துடித்தது கிடையாது?”

“உங்களுக்கு தெரியுமா, இன்றைக்கு காலையில் எத்தனை கோயில் ஏறி இறங்கினேன் நீங்கள் ஓகே சொல்லணும் என்று.”

நான் ஹா ஹா என்று வாய்விட்டு சிரித்து விட்டேன்.

“உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வருவதற்கு நான் பொறுப்பாக இருக்க போவதில்லை. எனக்கும் சம்மதம்.”

அவர் முகத்தில் அந்த சந்தோசத்தை பார்த்த போது என் இதயத்திலும் ஆனந்தம் நிரம்பி இருந்தது.

அந்த நேரம் எங்கள் ஜூஸ் வந்ததது. இருவரும் இடது குடிக்க துவங்கினோம்.

நான்,” எக்ஸ்கியூஸ் மீ, லேடீஸ் போயிட்டு வந்துடுறேன்.”

அவர் ஓகே சொல்லி புன்னகைத்தார். அவர் இயல்பாகவே அதிகம் சிரித்த முகத்தோடு உள்ளவராக தோன்றியது. லேடீஸ் சென்றதும் முதல் வேலையாக நான் கண்ணாடியில் என் முக தோற்றத்தை ஆய்வு செய்தேன். நல்ல வேலை ஆஃபீஸ் முடிந்ததும் கொஞ்சம் லிப்ஸ்டிக் போட்டேன். இப்போ அதை மீண்டும் கொஞ்சம் பிரெஷ் ஆக்கி முடியை கை விரல்களால் வாறி விட்டு என் தோற்றத்தை இறுதியாக ஒரு முறை கண்ணோட்டம் விட்டு திருப்தியோடு என் அம்மாவுக்கு போன் செய்தேன்.

அம்மா உடனே,” என்ன டி அவரை பார்த்தியா, என்ன சொன்னார், எங்கே இருக்க..” என்று என்னை பேசவிடாமல் தொடர்ந்து பேசினார்.

“கூல் மா கூல் என்னை பேச விடு, நீ இப்படியே பேசினால் நான் எப்படி பதில் சொல்வேன்.”

“சாரி ஸ்வதா, ரொம்ப ஆவலா இருக்கு, இது ரொம்ப நல்ல வரன் டி.”

“ஓகே ஓகே கேளு அவருக்கு என்னை புடிச்சிருக்கம்.”

“கடவுளே நல்ல செய்தி சொன்னே ஸ்வதா.”

நான் சிரித்தபடி சொன்னேன்,” ஓகே நான் லேடீஸ் இருந்து பேசுறேன் அவர் காத்துகிட்டு இருக்கிறார் நான் அப்புறம் பேசுறேன்.”

“சரி ரொம்ப நேரம் வேண்டாம் சீக்கிரம் வந்துடு.”

“வரான் வரான் நான் ஒன்னும் அவர் கூட இப்போவே போய் குடும்பம் நடத்த போவதில்லை.”

“அடி செருப்பால, நீ இப்படி அவர்கிட்ட ஓவர்ரா பேசாம நல்ல பெண்ண அடக்க ஒடுக்கமா பேசு.”

“ஆகட்டும் தாய்யே நான் ஒன்னும் தெரியாத பாப்பா போல அவர்கிட்ட பேசுறேன்,” என்று சிரித்தபடி சொல்லிவிட்டு போன் கட் செய்தேன்.

1 Comment

  1. Where are Qatar

Comments are closed.