எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 3 16

“ம்க்கும்.. இதயத்துக்கும் காதலுக்குமே எந்த சம்பந்தமும் இல்ல.. இதுல இதயத்துக்கும் இஞ்சினுக்கும் லிங்க் குடுக்குறியா நீ..?? நான்சென்ஸ்..!!” அசோக் சொல்ல, இப்போது கிஷோர் மற்றவர்களிடம் கேலியாக சொன்னான்.

“ஏய்.. விடுங்கடா.. இதெல்லாம் இவன்ட்ட போய் சொல்லிக்கிட்டு..!! இவனுக்கு இதுலாம் புரியாதுடா.. யாரையாவது லவ் பண்ணிருந்தா.. இதுலாம் புரியும்..!! இவனுக்கு புரியலன்னதும் நம்மள நான்சென்ஸ்ன்றான்..!!”

“டேய்.. ஆரம்பிச்சுட்டீங்களாடா மறுபடியும்..?? இந்த இஞ்சின் ஆயிலுக்காக இப்போ என்னை லவ் பண்ணுன்னு சொல்லப் போறீங்களாடா..??”

“இல்ல மச்சி.. கிஷோர் சொல்றதுல ஒரு பாயின்ட் இருக்கு..!! இப்போ.. எங்கள விடுடா.. நாங்கல்லாம் டெக்னீஷியன்ஸ்.. ஆனா நீ அப்படி இல்லடா..!! நீ ஒரு கிரியேட்டர் மச்சி.. ஆட் ஃபில்ம்ஸ் தாண்டி, சினி ஃபீல்ட் போகவும் ட்ரை பண்ணிட்டு இருக்குற.. எந்த ஒரு க்ரியேட்டருக்குமே காதல்ன்றது ரொம்ப முக்கியமான விஷயம்டா..!!”

“ஓ.. அப்போ லவ் எக்ஸ்பீரியன்ஸ் இல்லாதவன் க்ரியேட்டரா இருக்க முடியாதுன்னு சொல்றியா..??”

“இல்ல.. லவ் எக்ஸ்பீரியன்ஸ் இருக்குற கிரியேட்டர் ரொம்ப சக்ஸஸ்ஃபுல்லா இருக்க முடியும்னு சொல்றேன்..!! உனக்கு லவ் எக்ஸ்பீரியன்ஸ் இருந்திருந்தா.. மோகன்ராஜோட இப்படி நீ அர்த்தம் இல்லாம சண்டை போட்டு வந்திருக்க மாட்டேன்னு தோணுது.. அந்த இஞ்சின் ஆயில் வெளம்பரத்தை எப்படி ரொமாண்டிக்கா எடுக்கலாம்னு தின்க் பண்ண ஆரம்பிச்சிருப்பேன்னு தோணுது..!!”

“ஹையோ.. அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்..!!” அசோக் கேட்க, கிஷோர் இப்போது எரிச்சலாக கத்தினான்.

“ஏய்.. சம்பந்தம் இருக்குதுடா வெண்ணை.. உனக்குத்தான் புரியல..!! உன்னாலலாம் நாங்க சொல்ற எதையுமே புரிஞ்சுக்க முடியாதுடா.. லவ்னா என்னன்னு புரிஞ்சுக்க முடியாது.. லவ் ஃபீலிங் பத்தி புரிஞ்சுக்க முடியாது.. லவ் பண்றவங்க மனசையும் புரிஞ்சுக்க முடியாது..!! உனக்கு அதுலாம் புரிஞ்சிருந்தா.. இப்படி அந்த மோகன்ராஜோட மல்லுக்கட்டிட்டு நிக்க மாட்ட.. உன் தங்கச்சிக்கும் எனக்கும் சண்டை மூட்டிவிட்டு வேடிக்கை பாக்க மாட்ட..!! ஏன்.. என்னைய, வேணுவை, சாலமனை, எங்க லவ்வை.. எதுக்கெடுத்தாலும் நக்கல் பண்ணி சிரிக்கிறல.. அதுலாம் சத்தியமா பண்ணமாட்ட..!! என்னடா.. நான் சொல்றது சரிதான..??”

கிஷோர் அவ்வாறு சொன்னதும், இப்போது வேணுவுக்கும் சாலமனுக்குமே சுருக்கென்று ஒரு விஷயம் மனதை தைத்தது. தங்கள் காதலையும், தாங்கள் படுகிற அவஸ்தையையும், அசோக் அடிக்கடி காமடி பண்ணி கலாய்ப்பது, அவர்களுக்கு எப்போதுமே ஒருவித கடுப்பை கிளப்பும். ‘இவனை ஒன்னும் செய்ய முடியலையே.. இவன் மட்டும் ஜாலியா இருக்கானே..??’ என்பது மாதிரியான கடுப்பு. அவர்கள் மனதில் உறைந்திருந்த அந்த கடுப்பு, இப்போது கிஷோருடன் சேர்ந்து அவர்களிடமிருந்தும் வெளிப்பட்டது.

“சரி விடு மச்சி..!! லவ் பண்றதுக்குலாம் ஒரு தில்லு வேணுண்டா.. அது நம்ம அசோக்கிட்ட இல்லைன்னு நெனச்சுக்க வேண்டியதுதான்..!!” சாலமன் கிண்டலாக சொல்ல, அசோக்குக்கு சுரீர் என்று கோவம் வந்தது.

“ஏய்.. ஓவரா பேசுறடா..!!”

“ஓவரா பேசுறனோ.. விக்கெட்டா பேசுறனோ.. உண்மையை பேசுறேன்.. போ போ..!!”

“ஆமாம் மச்சி.. உனக்கு எங்களோட கஷ்டம்லாம் புரியலடா.. லவ் பண்றவனுக்குத்தான் அதுலாம் புரியும்.. அதை மொதல்ல அக்ஸப்ட் பண்ணிக்கோ நீ..!!” தன் பங்குக்கு கொளுத்திப் போட்டான் வேணு.

“ஏய்.. ரொம்ப பேசாதீங்கடா.. என்னடா பெரிய கஷ்டம், உங்க கஷ்டம்..??” அசோக் ஏளனமாக கேட்க, இப்போது கிஷோர் அவனிடம் சவால் விடுவது மாதிரி சொன்னான்.

“என்ன.. எளக்காரமா இருக்கா உனக்கு..?? மவனே.. ஒரு பொண்ணோட பேசிப்பாருடா.. அவ கூட பழகிப்பாரு.. அப்போ தெரியும் எங்க கஷ்டம்..!! அவளுக்கு புடிச்ச மாதிரிலாம் நடந்துக்கிட்டு.. அவ இழுத்த இழுப்புக்குலாம் வளைஞ்சு குடுத்து.. நம்ம மேல நம்பிக்கை வரவைச்சு.. கொஞ்சம் கொஞ்சமா அவளை அட்ராக்ட் பண்ணி.. ஐ லவ் யூ சொல்ல வைக்கிறதுக்குள்ள.. உன் பருப்பு பரதநாட்டியம் ஆடுதா இல்லையான்னு பாரு..!!”

1 Comment

Add a Comment
  1. Story Nalla Irukku , Konjam Naarayaa Elluthunga Admin !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *