எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 3 73

சங்கீதாவின் அறையில் இருந்து ஹாலுக்கு வரும் வழியில்தான் தாத்தா பாட்டியின் அறையும் இருக்கிறது. அவர்கள் அறையை அசோக் கடக்கும்போது, உள்ளே இருந்து பாட்டியின் சத்தம் பெரிதாக ஒலிக்க, அசோக் அப்படியே ப்ரேக் போட்டான். பாட்டி என்ன சொல்லுகிறாள் என்று காதை கூர்மையாக்கி கேட்டான்.

“வாக்கிங் போனா நேரா வீட்டுக்கு வர வேண்டியதுதான..?? வர்ற வழில அங்க நின்னுக்கிட்டு.. அவ கூட என்ன பல்லை காட்டிக்கிட்டு பேச்சு வேண்டி கெடக்கு..??” பாட்டி இந்த வயதிலும் தன் பொசஸிவ் புத்தியால் தாத்தாவை போட்டு படுத்திக்கொண்டிருந்தாள்.

“போனவாரம் அவகிட்ட பல்லுவலின்னு சொல்லிருந்தேண்டி.. இப்போ எப்படி இருக்குன்னு கேட்டா.. அதான் பல்லை காட்டினேன்..!!” தாத்தாவும் பாட்டிக்கு பணிந்து போய்த்தான் பேசிக்கொண்டிருந்தார்.

“ம்க்கும்.. இப்படி பதிலுக்கு பதிலு பேசிட்டே இருங்க.. அப்புறம் இருக்குற நாலு பல்லையும் உடைச்சு போட்டுட வேண்டியதுதான்..!! பல்லும் இருக்காது.. வலியும் இருக்காது..!!”

“ஐயே.. இப்போ என்னாயிடுச்சுன்னு இப்படி கத்துற கோமளா..??”

“இங்க பாருங்க.. எனக்கு அதுலாம் தெரியாது.. இனிமே நீங்க வாக்கிங் போறதா இருந்தா இங்க வீட்டுக்குள்ளயே போங்க.. சொல்லிப்புட்டேன் ஆமாம்..!!”

பாட்டி முடிவாக சொல்லிவிட்டு, மூஞ்சியை திருப்பிக் கொண்டாள். பார்த்துக்கொண்டிருந்த அசோக் ‘ஹ்ம்ம்.. எத்தனை வயதானாலும் பெண்கள் பெண்கள்தான்..!!’ என்று பெருமூச்சு விட்டுக்கொண்டான். வாசலுக்கருகே நின்றிருந்த அசோக்கை பாட்டி கவனித்துவிட்டாள்.

“என்னடா..??” என்று எரிச்சலாகவே கேட்டாள்.

ஒட்டுக்கேட்டதை பாட்டி பார்த்துவிட்டாள் என்று அசோக் முதலில் சற்று தடுமாறினான். அப்புறம் அந்த தடுமாற்றத்தை சமாளித்துக்கொண்டு, குரலில் ஒரு கேலியையும் கலந்துகொண்டு, அவர்களுடைய அறைக்குள் தலையை மட்டும் நீட்டியவாறு கேட்டான்.

“ஏன் பாட்டி.. தாத்தா இத்தனை நாள் பல்லை கடிச்சுட்டு ஓட்டிட்டாரு.. இனிமேலா பல்லுவலின்னு ஓடிடப் போறாரு..??” அசோக்கின் கேள்வியில் இருந்த குதர்க்கம் பாட்டிக்கு புரியவில்லை.

“என்னடா சொல்ற.. மண்டு..??” என்று முகத்தை குழப்பமாய் சுருக்கினாள்.

“புரியலையா..?? சரி விடு..!! தாத்தா உன்மேல உயிரையே வச்சிருக்காரு பாட்டி..
தேவை இல்லாம அவரைப்போட்டு இப்படி டார்ச்சர் பண்ணாத..!!”

“அடப்போடா.. என் புருஷனை பத்தி எனக்கே சொல்ல வந்துட்டான்..?? எல்லாம் எனக்கு தெரியும்.. நீ உன் வேலையை பாத்துட்டு போ..!!”

பாட்டி முகத்தை வெட்டியவாறு சொன்னாள். அசோக் சலிப்பாய் தலையசைத்துக் கொண்டான். ‘இந்தப் பெண்களே இப்படித்தான்.. தனக்குரியவனை தானும் புரிந்து கொள்ள மாட்டார்கள்.. தன்னைமாதிரி அவனை புரிந்து கொள்ள வேறு ஆளே இல்லை என்று அடமும் பிடிப்பார்கள்..!!’ எப்படியோ போங்க என்று மனதுக்குள் முனுமுனுத்தவாறே அசோக் டைனிங் ரூமுக்கு வந்தான். அங்கே அவனுடைய அப்பா அமர்ந்திருந்த நிலையை பார்த்து சற்றே துணுக்குற்றான்.

கன்னத்தில் கைவைத்து.. கவலையே உருவாக.. தட்டில் கிடந்த தோசையை உண்ணக்கூட மனம் இல்லாமல்.. உறைந்து போய் அமர்ந்திருந்தார் மணிபாரதி..!! ‘என்னாயிற்று இந்த அப்பாவிற்கு..?? இப்படி இடிந்து போய் அமர்ந்திருக்கிறார்..?? அம்மா எதுவும் அவரை திட்டிவிட்டாளா..?? இன்று என்ன.. பெண்கள் ஆண்களை வறுத்தெடுக்கிற தினமா..??’

“டாடிக்கு என்னாச்சு மம்மி.. நீ ஏதும் திட்டிப்புட்டியா..??” அசோக் கிச்சன் பக்கமாக திரும்பி அம்மாவிடம் கேட்டான்.

“அட.. நான்லாம் ஒன்னும் அவரை திட்டலை..!!”

“அப்புறம்..??”

“அவரோட அர்ர்ருமை ரசிகர்ட்ட இருந்து லெட்டர் வந்திருக்கு.. அதை படிச்சதுல இருந்து இப்படி ஊமை மாதிரி உக்காந்திருக்காரு..!!”

“யாரு.. அந்த ஸ்ரீனியா..??”

“ம்ம்.. ஆமாம்..!!”

“மறுபடியும் இவரை திட்டி லெட்டர் போட்டிருக்கானா..??”

“ஆமாண்டா..!!”

பாரதி கடுப்புடன் சொல்லிவிட்டு கல்லில் தோசை மாவை ஊற்றி விரவி விட, அசோக் ‘ஹ்ம்ம்ம்..’ என்று பெருமூச்சு விட்டவாறே தன் அப்பாவிடம் சென்றான்.

“என்ன டாடி.. ரொம்ப திட்டிட்டானா…??”

1 Comment

  1. Story Nalla Irukku , Konjam Naarayaa Elluthunga Admin !

Comments are closed.