எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 3 74

எரிச்சலாக சொன்ன அசோக் தோசையைப் பறித்து தன் தட்டில் போட்டுக் கொண்டான். பாரதி தயங்கி தயங்கியே கிச்சனை நோக்கி நகர்ந்தாள். கிச்சன் வாசலுக்கு சென்றவள், மீண்டும் திரும்பி அசோக்கை ஒரு நம்பிக்கையில்லா பார்வை பார்க்க, அவன் இப்போது வாயில் தோசையுடன் பரிதாபமாக கத்தினான்.

“ஹையோ… நம்பு மம்மி..!! குளிச்சுட்டேன்..!!”

சாப்பிட்டு முடித்து அசோக் வீட்டை விட்டு கிளம்பினான். தனது பைக்கில் பாலாஜி அட்வர்டைசிங்கை அவன் அடைந்த போது மணி 8.50..!! அவனை ஒன்பது மணிக்கு வர சொன்ன மோகன்ராஜ் பத்து மணிக்குத்தான் ஆபீஸ் வந்தார். பத்தரை மணிக்கு டிஸ்கஷன் ஆரம்பமானது. குளிரூட்டப்பட்ட அறையில்.. மோகன்ராஜும்.. அவருடைய அடிபொடிகள் ஐந்து பேரும்.. பிறகு அசோக்கும்..!!

அரைமணி நேரம் கூட நீடிக்கவில்லை அந்த டிஸ்கஷன்..!! வழக்கம் போல.. மோகன்ராஜ் தனது எண்ணத்தையும் எதிர்பார்ப்பையும்.. மிகுந்த ஈடுபாட்டுடன் அப்படியே உருகி உருகி.. அசோக்கிடம் எடுத்து கூறினார்..!! அசுவாரசியமாய் அனைத்தையும் கேட்டு முடித்த அசோக், ‘கேனத்தனமா இருக்கு ஸார்..!!’என்று கேஷுவலாக கூறினான்..!! கடுப்பான மோகன்ராஜும் ‘கெட் அவுட்..’ என்று தொண்டை கிழிய கத்தினார்..!! அசோக்கும் ‘ஹேரே போச்சு.. போ..’ என்று எழுந்து அறையை விட்டு வெளியேறினான்..!!

அசோக் ஆபீஸை அடைந்தபோது மணி பனிரெண்டை நெருங்கியிருந்தது. அவர்களுடைய அசிஸ்டன்ட்கள் இருவரும் எடிட்டிங் ரூமில் அமர்ந்து, ஹெட்ஃபோன்கள் அணிந்த காதுகளுடன், சிஸ்டத்தில் ஏதோ நோண்டிக் கொண்டிருந்தார்கள். அசோக் அவர்களை கடந்து ஆபீஸ் ரூமுக்குள் புகுந்தான். உள்ளே கிஷோர், வேணு, சாலமன்.. மூவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர்..!! ஏதோ ஃபைனான்ஸ் கம்பனியில் பணத்தைப் போட்டவர்கள் மாதிரி.. கவலை படர்ந்த முகத்துடன் குத்தவைத்திருந்தனர்..!!

அசோக்கிற்கு முதலில் எதுவும் புரியவில்லை. மூன்று பேர் முகத்தையும் மாறி மாறி பார்த்தான். அப்புறம் அவனும் ஒரு சேரில் அமர்ந்து, லேப்டாப் திறந்து மெயில் பாக்ஸ் ஓப்பன் செய்து பார்த்தான். அவன் சென்று சிறிது நேரம் ஆகியும் யாரும் அவனுடன் பேசாமல் போக, அசோக்கே இப்போது அந்த அமைதியை கலைத்தான். வேணுவை சைகையால் காட்டி சாலமனிடம் கேட்டான்.

“என்னடா ஆச்சு.. ஏன் இவன் சோகமா இருக்கான்..??”

“அவன் ஆளு அவனை திட்டிடுச்சாம்..!!” சாலமன் சோகமான முகத்துடனே பதில் சொன்னான்.

“ஏன்..??”

“அவ மூணாவது அண்ணனோட மூத்த பொண்ணுக்கு.. இன்னைக்கு மூக்கு குத்துற பங்க்ஷனாம்..!! காலைலேயே இவன் கால் பண்ணி விஷ் பண்ணலைன்னு கடுப்பு..!! கன்னாபின்னான்னு திட்டிவிட்டுட்டா..!!”

“ஓஹோ..!! சரி.. நீ ஏன் சோகமா இருக்குற..??” அசோக்கின் கேள்விக்கு இப்போது வேணு பதில் சொன்னான்.

“அவனுக்கும் அவன் ஆளுக்கும் சண்டை..!!”

“அதுக்குள்ளயா..?? நேத்து நைட்தான ஒண்ணா சேர்ந்தாங்க..??”

“ஆமாம்.. காலைலேயே புட்டுக்கிச்சு..!!”

“ஏன்.. என்னாச்சு..??”

“அவ ஏதோ புது ஸாரி கட்டிட்டு வந்திருப்பா போல இருக்கு.. இவன் கவனிச்சு பாத்துட்டு நல்லாருக்கு சொல்வான்னு எக்ஸ்பெக்ட் பண்ணிருப்பா போல..!!”

“இவன் நல்லாருக்குன்னு சொல்லலையா..??” அசோக் வேணுவை கேட்க,

“இல்ல மச்சி.. சொன்னேன்..!!” சாலமன் இடையில் புகுந்து பாவமாக சொன்னான்.

“அப்புறம் என்ன..??”

“இவன் நல்லாருக்குன்னு சொன்னது ஸாரியை இல்ல.. சாப்பிட்டுக்கிட்டு இருந்த பூரியை..!! அவ குருமாவை எடுத்து இவன் தலைல கொட்டிட்டு கெளம்பிட்டா..!!” வேணு சீரியஸாக சொல்ல, அசோக்குக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

1 Comment

  1. Story Nalla Irukku , Konjam Naarayaa Elluthunga Admin !

Comments are closed.