எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 3 73

“ஹாஹா.. இதுலாம் வேற யார்ட்டயாவது போய் சொல்லு..!! நேத்துவரைகூட எனக்கு இதுல பெரிய ஐடியாலாம் இல்ல.. ஆனா நேத்து என் அம்மாட்ட பேசுனப்புறம்.. ஒரு விஷயத்துல நான் ரொம்ப கான்ஃபிடன்ட்டா இருக்கேன்..!!”

“எந்த விஷயத்துல..??”

“ஒரு பொண்ணை காதலிக்க வைக்கிறது ரொம்ப ஈஸின்ற விஷயத்துல..!!”

அசோக் அவ்வாறு படுசீரியஸாக சொல்ல, இப்போது அசோக்கை தவிர மற்ற மூவரும் கோரஸாக அவனை பார்த்து கைகொட்டி சிரித்தார்கள்.

“ஹாஹா… ஹாஹா… காமடி பண்ணாத மச்சி.. ஹாஹா…!!!”

“ஏய்.. என்னடா சிரிப்பு..?? நான் சீரியஸாத்தான் சொல்றேன்..!!”

“ஓ..!! ஓகேடா..!! அப்போ ஒன்னு பண்றியா..??”

“என்ன..??”

“இந்த ஃபுட்கோர்ட்ல இருக்குற ஏதாவது ஒரு பொண்ணோட பேசிப்பழகி.. அவளை உன்கிட்ட ‘ஐ லவ் யூ’ன்னு சொல்ல வச்சு காட்டுறியா..??” கிஷோர் கேஷுவலாக ஒரு சேலஞ்ச் ப்ரொபோஸ் செய்ய, அசோக் இப்போது சற்றே மிரண்டான்.

“ஏ..ஏய்.. எ..என்னடா சொல்ற.. லவ்லாம்.. இ..இப்படி..”

“ஏன்.. ஏன் தயங்குற..?? நீதான நேத்து சொன்ன..?? நீ லவ் பண்ணினா.. யாராவது ஒரு பர்ஃபக்ட் ஸ்ட்ரேஞ்சர் டுபுக்கைத்தான் லவ் பண்ணுவேன்னு..!! இங்க இருக்குறவளுக எல்லாரும் ஸ்ட்ரேஞ்சர்ஸ்தான்.. நாங்க யாராவது ஒரு பொண்ணை ச்சூஸ் பண்ணி தர்றோம்.. நீ அவளை லவ் பண்ண வச்சு காட்டு..!! தில் இருக்கா உனக்கு..??”

“இ..இல்ல.. இ..இதுலாம் வேலைக்காகாது..!!”

“ஹாஹா.. அப்போ நீ ஒரு டம்மிபீஸ்னு ஒத்துக்கோ..!!” கிஷோரின் வார்த்தைகள் அசோக்கை சுருக்கென்று தைக்க,

“ஏய்…!!” என்று அவனிடம் எகிறினான்.

“இந்த கோவமசுருக்குலாம் ஒன்னும் கொறைச்சல்மசுரு இல்ல..!!” கிஷோர் கூலாக சொன்னான்.

அசோக் இப்போது வாயடைத்துப் போனான். வகையாக மாட்டிக்கொண்ட மாதிரியான ஒரு உணர்வு அவனுக்கு..!! நண்பர்கள் மூவரும் அவனை ஒரு இளக்கார பார்வை பார்த்தபடி.. அவனுடைய பதிலுக்காக காத்துக்கொண்டிருக்க.. அவர்களுடைய பார்வையை அசோக்கால் எதிர்கொள்ள முடியவில்லை.. அவனையும் அறியாமல் அவனுடைய தலை மெல்ல மெல்ல கீழே தாழ்ந்தது..!! அவனுடைய நிலைமையை உணர்ந்த மற்ற மூவரும், வார்த்தைகளால் அவனை மேலும் சீண்டினர்..!!

“பாத்தியா எப்படி உக்காந்திருக்கான்னு..?? அடுத்தவனை பாத்து ஆயிரம் நொட்டை சொல்லலாம் மச்சி.. அவன் அவனுக்கு வந்தாத்தான் தெரியும் வாந்தியும் வயித்தாலயும்..!!” என்றான் வேணு.

“எங்களுக்குள்ள எத்தனை தடவை பிரேக்கப் ஆனாலும்.. திரும்ப திரும்ப அவளை எங்கிட்ட வரவைக்கிறேன் பாத்தியா.. அதுக்குலாம் ஒரு ஸ்டஃப் வேணும் மச்சி.. அந்த ஸ்டஃப் இல்லாதவன்லாம் இப்படித்தான்..!!” சாலமன் எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தான்.

“விடுங்கடா.. அவன்கிட்ட ஏதோ வாய் இருக்கு.. நம்மகிட்ட ஏதோ காது இருக்குன்னு.. வக்கனையா பேசிட்டான்..!! பேச்சு மட்டுந்தான் அப்படி மச்சி.. அவனால முடியாதுன்னு அவனுக்கே தெரியும்..!!” கிஷோரின் வார்த்தைகள் அசோக்கின் தன்மானத்தை சீண்டிப் பார்த்தன.

‘இப்போது என்ன செய்வது..?? இவர்களுடைய சவாலை கெத்தாக ஏற்றுக்கொள்வதா.. இல்லை.. என்னால் முடியாது என்று நழுவி கேவலப்படுவதா..??’ அசோக் கண்களை மூடி ஒருகணம் நிதானமாக யோசித்தான். அம்மா, அப்பா, தங்கை, பாட்டி, பரந்தாமன், நண்பர்கள், நாய்க்குட்டிகள் என.. அனைவரும் இவனுடைய மனக்கண்ணில் தோன்றி.. இவனை சுற்றி நின்றுகொண்டு.. ‘காதலித்துப்பார்.. காதலித்துப்பார்..’ என்று உரத்த குரலில் கத்தினார்கள்..!!

ஒரு ஐந்தாறு வினாடிகள் அசோக் அந்தமாதிரி விழிகள் மூடி அமர்ந்திருப்பான். அப்புறம் பட்டென இமைகளை பிரித்து, நண்பர்கள் மூவரையும் தைரியமாக ஏறிட்டான். மிடுக்கான குரலில் சொன்னான்.

1 Comment

  1. Story Nalla Irukku , Konjam Naarayaa Elluthunga Admin !

Comments are closed.