எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 3 16

“ஆமாண்டா.. கன்னாபின்னான்னு திட்டுறான்.. கண்கொண்டு பாக்க முடியலை அந்த லெட்டரை..!! டாடி இத்தனை வருஷமா கதை எழுதிருக்கேன்டா அசோக்.. இந்த அளவுக்கு எவனும் என்னை கேவலமா திட்டுனது இல்ல..!!” மணிபாரதி மிகவும் சோகமாக சொன்னார்.

“ஹ்ம்ம்.. அவனுக்கு என்னதான் பிரச்னையாம்..??”

“என்னத்த சொல்றது.. நான் இனிமே லவ் ஸ்டோரியே எழுதக் கூடாதாம்.. எழுதுன வரை போதுமாம்..!! இனிமேயும் எழுதினா.. பப்ளிக் ந்யூஸன்ஸ்னு என் மேல பொதுநல வழக்கு போடப்போறதா மிரட்டுறான்..!! நான் கதை எழுதுற பேனாவை.. கூவத்துல தூக்கி கடாச சொல்றான்.!!”

“இதுலாம் ரொம்ப ஓவர் டாடி.. உங்க ஸ்டோரி பிடிக்கலைன்னா படிக்காம விட வேண்டியதுதான.. ஏன் இப்படிலாம் பண்றான்..?? நீங்களும் பதிலுக்கு அவனை தாறுமாறா திட்டி ஒரு லெட்டர் போடுங்க..!!”

“இல்ல அசோக்.. அவனை அப்படி திட்டுறதுக்கு எனக்கு மனசு வரலை..!!”

“ஏன்..??”

“ஒருகாலத்துல இந்த ஸ்ரீனி என்னை எப்படிலாம் பாராட்டுவான் தெரியுமா..?? என்னை தெய்வம்னுவான்.. என்னை மாதிரி எழுத ஆளே இல்லைன்னு சொல்வான்..!!”

“ஓ.. அப்புறம் ஏன் இப்போ இப்படி திட்டுறான்..??”

“ஹ்ம்ம்… அப்போ லவ் பண்ணிட்டு இருந்தான்.. பாராட்டுனான்..!! இப்போ லவ் ஃபெயிலியர் ஆகிப்போச்சு.. திட்டுறான்..!!”

“இது என்ன டாடி அநியாயமா இருக்கு..?? அவனுக்கு லவ் ஃபெயிலியர் ஆனதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க..?? விட்டா.. படிக்கிறவங்க வீட்டுல பவர் ஃபெயிலியர் ஆனா கூட உங்களை திட்ட ஆரம்பிச்சுடுவாங்க போல..??” அசோக் கிண்டலாக கேட்க மணிபாரதி மகனை ஏறிட்டு முறைத்தார்.

“ஏன்டா உனக்கு இப்படி ஒரு கெட்ட எண்ணம்..??”

“என்னாச்சு டாடி..??”

“பின்ன.. ஒருத்தன் திட்டுறதையே தாங்க முடியல.. பவர் ஃபெயிலியர்குலாம் திட்ட ஆரம்பிச்சா.. மொத்த தமிழ்நாடேல என் மொகத்துல காறி துப்பும்..!!”

“ஹாஹா..!! ஹ்ம்ம்.. என்னவோ போங்க..!! எனக்கு டைம் ஆச்சு.. உங்க தோசையை நான் எடுத்துக்குறேன்.. நீங்க அப்புறமா சாப்பிட்டுக்கங்க..!!”

அப்பா முன்பிருந்த ப்ளேட்டை இப்போது அசோக் எடுத்துக் கொண்டான். அப்படியே நின்றவாறே சாப்பிட ஆரம்பித்தான். தோசையை விண்டு சட்னியில் நனைத்து தொண்டைக்குள் போட்டான். ஆவி பறக்கிற தோசையை தாங்கிய கரண்டியுடன், டைனிங் ரூமுக்குள் நுழைந்த பாரதி, மகன் சாப்பிட்டுக்கொண்டிருப்பதை பார்த்ததும் பட்டென்று முகம் மாறினாள். அவனுடைய தலையில் நறுக்கென்று குட்டியாவாறே சொன்னாள்.

“அறிவு கெட்டவனே..!!”

“ஆஆஆஆ..!! இன்னைக்கு என்னாச்சு.. யாராவது யாரையாவது திட்டிட்டே இருக்கீங்க..?? நீ எதுக்கு இப்போ என்னை திட்டுற..??” அசோக் தலையை தேய்த்தவாறே அம்மாவிடம் திரும்பி கேட்டான்.

“எத்தனை தடவை சொல்றது.. குளிச்சுட்டுத்தான் சாப்பிடனும்னு..!!”

“ஐயோ.. குளிச்சுட்டேன் மம்மி..!!”

“குளிச்சுட்டியா..?? பொய் சொல்லாத.. பாத்தா அப்படி தெரியல..!!” பாரதி குழப்பமாய் அசோக்கையே மேலும் கீழும் பார்த்தாள்.

“ஆமாம்.. உனக்கு ஒன்னும் தெரியாது..!! தோசையை குடு.. போய் இன்னும் ரெண்டு போட்டு எடுத்துட்டு வா.. போ..!!”

1 Comment

Add a Comment
  1. Story Nalla Irukku , Konjam Naarayaa Elluthunga Admin !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *