எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 3 16

“அவ..!!” என்றான்.

உடனே மற்ற மூவரும் அடித்துப் பிடித்துக்கொண்டு அவனுடைய விரல் காட்டிய திசையில் திரும்பினார்கள். அந்த திசையில் இருந்த ஐம்பத்து சொச்ச பெண்களையும், பரபரவென பார்வையால் அலசினார்கள். ‘ஏய்.. யாருடா.. யாருடா…’ என்று ஆளாளுக்கு குழப்பமாய் கேட்டார்கள்.

“அவடா.. தனியா நடந்து வர்றா பாரு.. ப்ளாக் டி-ஷர்ட்.. ஷோல்டர் பேக்..!!”

கிஷோர் சொன்னதும் அசோக்கின் பார்வை ‘சர்ர்ர்ர்’ என்று மற்ற பெண்களை ஃபில்டர் செய்தது..!! அந்த ப்ளாக் டி-ஷர்ட் பிம்பத்தை தேடி கண்டுகொண்டு.. ‘ஜிவ்வ்வ்’ என்று ஜூம் செய்தது..!! ஜூம் செய்ததுமே அசோக் இன்ஸ்டண்டாய் ஒரு இன்ப அதிர்ச்சியில் திளைக்க ஆரம்பித்தான்..!! நடப்பது கனவா நனவா என்று நம்ப முடியாமல் திகைத்தான்..!!

அவள்.. அந்தப்பெண்.. நேற்று இரவு இதே இடத்தில் சந்தித்தானே.. அவள்..!! இவனுடைய கனவில் வந்து கங்கனம் ஸ்டைல் டான்ஸ் ஆடினாளே.. அவள்..!! ‘யாருமே உன்னை அட்ராக்ட் பண்ணினதில்லையா’ என்று அம்மா கேட்டபோது மனதுக்குள் வந்து போனாளே.. அவள்..!! பளிச்சிடும் பால்நிலா முகத்துடனும்.. பளபளக்கிற செர்ரிப்பழ உதட்டுடனும்.. காதில் வளையம் அசைந்தாட.. காற்றில் கார்குழல் அலைபாய.. கழுத்துக்கு கீழே கவர்ச்சித் திமிறலும்.. இடுப்புக்கு கீழே இருகுட வீணையுமாய்.. அழகு மொத்தைத்தையும் அபகரித்துக் கொண்டவள் போல.. அரபுக்குதிரை எனவே அடியெடுத்து நடந்து வந்தாள்..!!

‘என்ன ஒரு ஆச்சரியம் இது..?? என் மனதில் ஏற்கனவே ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தவளை.. கிஷோரின் விரல் எப்படி சரியாக சுட்டிக் காட்டுகிறது..?? இவள்தான் எனக்காக விதிக்கப்பட்டவளோ..?? ‘அடிக்கடி உன் கண்ணு முன்னாடி கூட வந்து போயிருப்பா.. உனக்குத்தான் அடையாளம் கண்டுபிடிக்க தெரியல..’ என்று அம்மா சொன்னாளே.. இவள்தான் அவளோ..?? உண்மைதானா..?? இறைவன் எனக்கே எனக்கென அனுப்பி வைத்தவள் இவளேதானா..?? இத்தனைநாள் நான்தான் இமை திறந்து பாராமலே இருந்தேனா..??’

“என்னடா மச்சி.. பேச்சையே காணோம்..?? ஆளு எப்படி..??” கிஷோரின் கேள்விக்கு அசோக் பதில் சொல்வதற்கு முன்பே,

“மச்சீஈஈ… செம்ம்மயா இருக்குறாடா..!!!” ஜொள்ளு விட்டவாறு சொன்னார்கள் சாலமனும் வேணுவும். அசோக் சட்டென கடுப்பானான்.

“தலையை திருப்புங்கடா தறுதலைங்களா.. தங்கச்சி முறை ஆவுது அவ உங்களுக்கு..!!”

என்றவாறு அசோக் அவர்கள் இருவரது தலையையும் பிடித்து வலுக்கட்டாயமாக திருப்பினான். அசோக்கின் வார்த்தையில் இருந்த உண்மை உறைக்கவும், சாலமனும் வேணுவும் முகம் வாடிப் போனார்கள். இப்போது அசோக்கும் திரும்பி அமர்ந்தான். கிஷோர் அதற்காகத்தான் காத்திருந்த மாதிரி அவனிடம் கேட்டான்.

“என்னடா.. ஓகேவா..??”

“ம்ம்… டபுள் ஓகே..!!” அசோக் சொல்லிக்கொண்டிருக்கும்போதே சாலமன் ஒரு சந்தேகத்தை கிளப்பினான்.

“மச்சி.. எனக்கு ஒரு டவுட்டு..!!”

1 Comment

Add a Comment
  1. Story Nalla Irukku , Konjam Naarayaa Elluthunga Admin !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *