எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 3 74

அசோக் சைகையாலேயே சொல்ல, சங்கீதா ஓரிரு வினாடிகள் யோசித்தாள். பிறகு காதிலிருந்த ஹெட்போனை கழற்றி அண்ணனிடம் நீட்டினாள். அசோக் அதை வாங்கி தனது காதில் பொருத்திக்கொண்டு,

“ஹலோ..!!” என்று சொல்வதற்கும், அடுத்த முனையில்

“உன் கால்ல வேணாலும் விழறேன்.. ப்ளீஸ்…!!” என்று கிஷோர் பரிதாபமாக கெஞ்சுவதற்கும் சரியாக இருந்தது.

“ஹிஹி.. என்ன மச்சி இது..?? என் கால்ல போய் விழுறேன்ற.. அப்படி என்ன பெரிய
தப்பு பண்ணிட்ட நீ..??” அசோக் கிண்டலாக கேட்டான். உடனே

“ஓ..!! நீயா..???? சொல்லு..!!!”

அடுத்த முனையில் கிஷோரின் வாய்ஸ் உடனடியாய் முருக்கேறுவதை அசோக்கால் உணர முடிந்தது. ‘பையன் என் மேல செம கடுப்புல இருக்கானோ..?’ என்று ஒரு எண்ணம் ஓடியது. இருந்தாலும் அதெல்லாம் வெளியே காட்டிக் கொள்ளாமல், கேஷுவலாகவே பேசினான். சங்கீதா பூஸ்ட் உறிஞ்சிக்கொண்டே, ஒரு கையை இடுப்பில் ஊன்றியவாறு, இவர்கள் பேசுவதை முறைப்பாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஹேய்.. இன்னைக்கு காலைல மோகன்ராஜ் வர சொல்லிருந்தார்டா.. ஏதோ புது ப்ராஜக்ட் போல.. டிஸ்கஷன் கூப்பிட்ருந்தாரு..!! ஒன்பது மணிக்குலாம் வந்திருங்கன்னு சொன்னாரு.. போயிட்டு வந்துடு.. சரியா..??”

“ஓ.. இதை சொல்றதுக்குத்தான் இப்போ அவகிட்ட ஃபோன் வாங்கினியா..??”

“ம்ம்.. ஆமாம்..!! ஒருவேளை நீ மறந்திருப்பியோன்னு நெனச்சேன்.. அதான் ஞாபகப் படுத்தலாம்னு..!! சரி.. நீ போயிட்டு அப்படியே ஆபீஸ் வந்துடு.. அப்புறமா பேசிக்கலாம்..!!”

“இ..இல்ல மச்சி.. என்னால போக முடியாதுன்னு நெனைக்கிறேன்..!! எனக்கு பதிலா நீ போயிட்டு வந்துடுறியா..??”

“ஏ..ஏண்டா.. என்னாச்சு..??”

“இல்லடா.. காலைலேயே ஒரு அன்-எக்ஸ்பெக்டட் பர்சனல் வொர்க் ஆகிப்போச்சு.. எல்லாம் ஒரு பரதேசி பன்னாடை நாயால வந்தது..!! எப்படியும் நான் இன்னும் ஒரு டூ ஹவர்ஸ்க்காவது ரொம்ப பிஸியா இருப்பேன்னு நெனைக்கிறேன் மச்சி..!! ஸோ.. நீயே போயிட்டு வந்துடுடா.. ப்ளீஸ்..!!”

“ஓ.. அப்டியா..!!! ம்ம்ம்ம்.. ஓகேடா.. நான் பாத்துக்குறேன்.. விடு..!! ம்ம்.. ஆமாம்.. அப்படி என்ன திடீர்னு.. அன்-எக்ஸ்பெக்டட் பர்சனல் வொர்க்கு உனக்கு..??” அசோக் அப்பாவியாக கேட்க,

“ஏன்..??? உனக்கு தெரியாதா..???” அடுத்த முனையில் கிஷோர் பற்களை கடித்தவாறு கடுப்புடன் திருப்பி கேட்டான். அசோக் உடனே புரிந்து கொண்டான்.

“ஓ.. புரியுது புரியுது..!! ஓகே மச்சி.. நீங்க ஏதோ இன்ட்ரஸ்டிங் டிஸ்கஷன்ல இருந்தீங்கன்னு நெனைக்கிறேன்.. நான் நடுவுல வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டேன்.. ஸாரி..!! ஓகே.. நீங்க கண்டின்யூ பண்ணுங்க.. நான் அவகிட்ட குடுக்குறேன்..!!”

அசோக் ஹெட்ஃபோன் எடுத்து தங்கையிடம் நீட்டினான். இப்போது அவள் அதை வாங்கி தன் காதோடு பொருத்திக் கொண்டாள். அசோக் அங்கிருந்து நகர முயல, அவனுக்கு பின்னாலிருந்து ‘டேய்..!!’ என்று சங்கீதாவின் குரல் ஒருவித எரிச்சலுடன் ஒலித்தது. முதலில் கிஷோரைத்தான் அவள் அவ்வாறு அழைக்கிறாள் என்று அசோக் நினைத்தான். அப்புறம், சங்கீதா அவனுடைய கையை இறுக்கமாகப் பற்றி நகரவிடாமல் நிறுத்தியிருப்பதை உணர்ந்ததும், தன்னைத்தான் அழைக்கிறாள் என்று புரிந்துகொண்டான். தன் கையைப் பற்றியிருந்த தங்கையின் கையை ஒருமுறை பார்த்தான். அப்புறம் சற்றே குழப்பமாய் அவளுடைய முகத்தை ஏறிட்டான்.

1 Comment

  1. Story Nalla Irukku , Konjam Naarayaa Elluthunga Admin !

Comments are closed.