அவளது அடி வயிற்றில்…
‘ சுரீர். .’ என ஒரு மின்னல் தாக்கியது.
அந்த வலியை உணர்வதற்குள்.. அடுத்த. . மின்னல்… அடுத்தடுத்த.. மின்னல்கள் தொடர்ந்து தாக்க..
”அம்மா…ஆ..ஆ..!” என அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டு.. அப்படியே சுருண்டு விழுந்தாள்.
கார்த்திக்…பயந்து விட்டான்.
முகத்தில் வியர்வை வழிய.. பதட்டத்துடன் அவளைத் தாங்கிப் பிடித்தான்.
” எ.. என்ன.. என்னாச்சு.. உமா. .?”
அவளால் நிற்க முடியவில்லை.
மறுபடி… மறுபடி.. மின்வெட்டாய்.. வலி ஊடுருவ.. அழுகை வந்தது. மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு.. கீழே விழுந்து. . புரண்டாள்.
கார்த்திக் ”உமா. . உமா..” எனப் பதறினான்.
செய்வதறியாது.. திகைத்தான்.
இவர்களது.. சத்தம் கேட்டு.. கார்த்திக்கின் அக்கா வந்தாள்
சிம்மீசூடன்..உமா வலியால் துடிப்பது கண்டு.. ஓடிவந்து.. தூக்கிவிட்டாள்.
உமாவின் கால்கள் வழியாக.. ரத்தம் வழிவதைக் கண்டு..
”ஐயோ.. ரத்தம். .” எனக் கத்தினான் கார்த்திக்.
விலகி…அவள் கால்களைப் பார்த்த. . அவன் அக்கா.. சட்டென.. உமாவின் சுடி பேண்ட்டை மேலேற்றிப் பார்த்து விட்டு. ..உடனே.. தன் தம்பியைப் பார்த்து..
”நீ வெளிய போடா..” என்றாள்.
”ரத்தம்… வருதுடி..”
”அதான்டா சொல்றேன்..! நீ வெளிய போ..”
”ஏன் ..?”
” போடான்னா.. போடா..” என அவன் முதுகைப் பிடித்து வெளியே தள்ளிக்கதவைச் சாத்தினாள்.
உமாவிடம் வந்து… ”பேண்ட கழட்டுடி.. பெரிய மனுஷி..!” என்றாள்.
அவள் ஏன்.. கார்த்திக்கை வெளியே அனுப்பினாள்… என்பது உமாவுக்குப் புரியவில்லை.!
உமா பயத்துடன் பார்க்க. .
”ஏய்.. நீ வயசுக்கு வந்துட்டடி..” என்றாள் கார்த்திக்கின் அக்கா.
அதுவரை.. கார்த்திக்தான். .தன்னை என்னவோ செய்து விட்டான் என நினைத்து பயந்து கொண்டிருந்தவளின் முகத்தில்…மெல்ல.. மெல்ல.. பயம் நீங்கியது.. மனசுக்குள்.. மத்தாப்புவாக… ஒரு மகிழ்ச்சி பொங்கியது.
பாத்ரூம் கூட்டிப் போனாள். அவள் பேண்ட்டைக் கழற்றச் செய்தாள்.
தன் உடம்பிலிருந்து இத்தனை ரத்தம் வருகிறதா.. என பயந்தாள் உமா.
இப்போது… வயிற்றில் மின்வெட்டு… அதிர்வுகள் இல்லை… ஆனாலும் அவ்வப்போது.. பொசுக்… பொசுக்கென.. ஒரு வலி வந்து போனது..!!!!
உமா பெரிய மனுஷியாகி விட்டாள். அவளது சடங்குகள் எல்லாம்.. எளிமையாகவே நடந்தது.
கார்த்திக்கைப் பார்க்க அத்தனை ஆவலாக இருந்தது. ஆனால் அவனைப் பார்க்க… அனுமதி கிடைக்கவில்லை.
ஒரு வாரம் கழித்து… அவனைப் பார்த்த போது.. புதிதாக ஒரு கூச்சம் வந்தது. அவனோடு பேச.. தயக்கம் வந்தது. கொஞ்சம் ஒதுங்கி நின்றே பேசினாள்.
ஆனால் அவன் தள்ளி நிற்கவில்லை.. அவளிடம் நெருங்கவே முற்பட்டுக்கொண்டிருந்தான்.
அவள் பூப்படைந்து… ஆறு மாதம் கழித்து..பொங்கலுக்கு இரண்டு நாள் முன்பாக அவளது பிறந்த நாள் வந்தது.
தன் வீட்டில் பணம் திருடி… அவளுக்கு.. பாவாடை தாவணி வாங்கிக் கொடுத்தான் கார்த்திக்.