மயக்கம் என்ன 114

லேசாக திரும்பி பார்க்கும் போது அவனது பார்வை என் இடுப்பிற்கு கீழே இருந்தது. அவன் எதை பார்க்கிறான் என்பதை புரிந்துக் கொள்ள முடிந்தது. அவன் பார்த்துக் கொண்டிருப்பதை நினைக்கும் போது ஒருபக்கம் சந்தோஷமாக இருந்தது. மறுபக்கம் அவனை விட்டு ஏதோ பிரிய போவதை போன்று ஒரு வலி இருந்தது.. ஆனாலும் எப்படியாவது அவனுடன் இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்க என் வீடு வந்துவிட கதவை திறந்து நான் வைத்திருந்த பையை உள்ளே வைத்துவிட்டு வெளியே வந்து நிற்க அவனிடம் இருந்த பையை குடுப்பதற்காக வெளியே நின்றான். அவன் பையை குடுக்கும் இனம் புரியாத ஒரு பிரிவு ஒன்று மனதில் தோன்றியது.. அதை அவனின் கண்களிலும் பார்த்தேன். அவனுடன் இன்னும் சிறிது நேரம் இருக்க விரும்பினேன்.. அதற்கான ஒரு சந்தர்ப்பமும் தானாகவே சூழல் அமைத்துக் கொடுத்தது. அது தானாக அமைந்தாலும் எனக்காகவே அமைந்தது போன்று இருந்தது.. அவனிடம் சில நிமிட மயக்கத்திற்கு பிறகு திரும்பி பேச ஆரம்பித்தேன்..

“சாப்பிட என்ன பண்ண போற?”

“ரொம்ப டயர்ட்டா இருக்கு.. இனி போய் என்ன பண்ண.. ஆடர் பண்ணி தா சாப்பிடனும்..”

“உன் ப்ரண்ட்ஸ் யாரும் இல்லையா?”

“இல்ல. எல்லாரும் வீக் என்ட்ல ஊருக்கு நேத்து நைட் போய்ட்டாங்க..”

“ஓ.. நீ ஆடர் பண்ண வேணாம்.. இங்க வா சப்பாத்தி போட்டு தரேன்..”

“வேணாம்.. உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்.. உங்க ஹஸ்பண்ட் வேற வந்திடுவாங்க.. தேவையில்லாத சந்தேகம், பிரச்சினை வந்திடும்..”

“அதலாம் ஒன்னும் வராது.. நா பாத்துக்கிறேன். நீ வா.. நீ பண்ணின உதவிக்கு ஒரு பதில் உதவி தான..”

“நா என்ன உதவி பண்ணேன்.?”

“என்னைய ஸ்சேபா வீடு கொண்டு வந்து சேத்திருக்கில.. நீ மட்டும் இல்லைனா என்ன நடந்திருக்கும் நினைச்சு பாக்கவே முடியல..”

“நா இல்லைனா நீங்க மட்டும் தனியா லக்கேஜ் தூக்கிட்டு வந்திருப்பீங்க அவ்வளவு தான். சிப்பிள்.” சொல்ல எனக்கு சப்பென்று ஆனது.. இவனுக்கு என்னை பிடித்திருக்கிறதா? இல்லை பிடித்தும் பிடிக்காத மாதிரி காட்டிக் கொள்ள நினைக்கிறானா என்ற எண்ணம் தான் வந்தது.. என் எண்ணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு

“சரி.. சரி.. நீ ஆடர் எதுவும் பண்ணாம வீட்டுக்கு போய் ப்ரஸ்ஆப் ஆயிட்டு இங்க சாப்பிட வந்திடு.. ஒரு பிரச்சனையும் இல்ல.. கண்டிப்பா வர.. இல்லைனா உன் ப்ளாட்டுக்கு வந்து கதவை தட்டி கூப்பிடுவேன்” சொல்ல

“அதலாம் வேணாம்.. நானே வந்திடுறேன்..”

“ம்ம். தட்ஸ் குட் பாய்..” சொல்ல அவன் குழப்பத்தோடு சென்றான். அவனுடன் இன்னும் சில மணி நேரம் இருக்க போவதை நினைத்து எனக்கு சந்தோஷமாக இருந்தது.

அவனிடம் இருந்த பையை எடுத்து உள்ளே வைத்துவிட்டு மொபைலை எடுத்து என் கணவருக்கு கால் செய்தேன். ரீங்க் போய் கொண்டே இருந்தது. நான் கட் செய்வதற்கு முன் அவர் காலை அட்டன் செய்ய

“நா வீட்டுக்கு வந்துட்டேன்.. நீங்க எப்ப வருவீங்க.. சப்பாத்தி பண்ணலாம் இருக்கேன்.. உங்களுக்கு எத்தனி போட்டு வைக்க..” என அடுக்கடுக்கா கேட்க..

எதிர்முனையில் இருந்து, “ஏய்.. இருடி.. என்ன கொஞ்சம் பேசவிடு.. உனக்கு எத்தினி கால் பண்ணியிருக்கேன் பாரு.. ஒரு தடவை கூட நீ கால் அட்டன் பண்ணல..”

“கால் பண்ணிங்களா..?”

“ஆமா.. மொபைல செக் பண்ணி பாரு..” சொன்னதும் கால் ஹிஸ்டரி செக் பண்ண 10மிஸ்டு கால் இருந்தது..

“மழை பெய்து இருந்ததால நா பேக்குள்ள மொபைல போட்டவ இப்ப தான் எடுக்குறேன்..”

“சரியா போச்சு.. வீட்டுக்கு வந்திட்டியா?”

“ஆமாங்க வந்துட்டேன்.. இப்ப வீட்டுல தான் இருக்கேன்.. ஏங்க?”

“இங்கையும் நல்லா சரியான மழை.. என்னால கிளம்பி வர முடியல அத சொல்ல தான் கால் பண்ணேன்.. நீ எடுக்கவே இல்ல..”

“அச்சச்சோ அப்ப இன்னும் நீங்க கிளம்பலையா? இப்ப நா மட்டும் எப்படி தனியா இருப்பேன்.. நா தான் தனியா இருக்கமாட்டேன் உங்களுக்கு தெரியும்ல..”

“நீ இந்த மாதிரி எதாவது சொல்லுவ தெரியும் அதான் கால் பண்ணேன் நீ எடுக்கல நா என்ன பண்ண முடியும்.. ஒரு நைட் தனியா தூங்கு.. பேய் எதுவும் வந்து தூக்கிட்டு போய்டாது..” சொல்ல

“என்ன பாத்த கிண்டலா இருக்கா” சொல்ல

“நீ கால் அட்டன் பண்ணல.. தப்பு உன்னத தான். சோ அனுபவி..” அவர் சொல்ல கடுப்பில் கட் பண்ணிட்டு சோபாவில் தலையில் கை வைத்து உட்காந்திருந்தேன்.. சட்டென்று அவனின் நியாபகம் வந்து எட்டி பார்க்க மனதிற்குள் மீண்டும் பரவசம் பரவ தொடங்கியது..

நான் சோபாவில் உட்கார்ந்து இருக்கும் போது சட்டென்று அவனின் நியாபகம் வர எனக்குள் இருந்த சோகம் நீங்கி ஒரு பரவசம் வந்து பரவ தொடங்கியது.. அவனிடம் சாப்பிட வர சென்றது அப்போது தான் நியாபகம் வர அதுவே தனி உற்சாகத்தை தந்தது. கணவர் வேறு இல்லாததால் அவனை முழு சுதந்திரத்தோடு ரசிக்க முடியும்.. முயற்சி செய்தால் தயக்கத்தை உடைத்து மயக்கத்திற்கான மருந்தினை அவனிடமிருந்து பெறலாம் என்ற எண்ணங்கள் மனதிற்குள் வந்து சென்றது.. அந்த எண்ணத்துடனே வேகமாக சென்று பாத்ரூமக்குள் நுழைந்துக் கொண்டேன்.. அவன் சாப்பிட வருவதற்குள் குளித்து ரெடியாகிட வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *