அவன் கேட்கும் கேள்விகளுக்கு நான் பலநாட்கள் பார்த்து நன்றாக பழகிவள் போல் பேசி பதிலளித்தது எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாகவும் அதே சமயம் சந்தோஷமாகவும் இருந்தது. அவனிடம் இந்த பயணத்தில் இன்னும் பேச்சை வளர்க்க விரும்பினேன். அவனுடன் பேசுவது ஏதோ புதுவித வித்தியாசமான உணர்வை தந்தது.. இதற்கு முன் கிராமத்தில் இருந்த போது தெரிந்த ஆணிடம் பேசி பழகியிருக்கிறேன்.
ஆனால் இவனை பார்த்ததிலிருந்து ஒருவித மயக்கம், பேச நினைக்கும் போதெல்லாம் ஒரு தயக்கம், எல்லாம் இருந்தாலும் அந்த தயக்கம் கூட எனக்கு ஒருவித ஆர்வமான மயக்கத்தையே அவன் மீது தந்தது. அது அவன் மீதான காதலா? இல்லை எந்த பெண்ணையும் வசிகரிக்கும் தோற்ற உடலமைப்பின் மீதான ஒரு காம மயக்கமா? என தெரியவில்லை. எது எப்படியோ இன்னும் இருக்கும் சில நிமிடங்களை வீணாக்காமல் அவனுடன் பேசி அவனின் பேச்சை கேட்க விரும்பினேன். இவை எல்லாவற்றையும் சில நொடி பொழுதில் என் மனதிலே நினைத்து முடித்தேன்..
“இங்க டிரெயின் டிக்கெட் எடுத்திட்டு வந்து நிக்கும் போது என் பக்கத்தில தெரிஞ்ச ஆள் யாரும் இல்லாதது கூட கொஞ்சம் பயமா தான் இருந்தது..”
“ஓகோ.. தென்..?”
“உன்ன.. இல்ல.. உங்கள நடந்து வரும் போது பாத்தேன்.” மறுபடியும் தயக்கத்தோடு சொல்ல
“ஓ.. ஐ..சி..” இருவரிடமும் சில வினாடிகள் அமைதி நிலவியது.
“ஆனா அது நீ… இல்ல நீங்க தானா சரியா எனக்கு தெரியல. அதான் அமைதியா கூப்பிடமா இருந்திட்டேன்.”
“ம்ம். இட்ஸ் ஓகே..”
“பின்ன தான் தெரிஞ்சுது அது நீ.. நீங்க தான்..”
“நான் தான் தெரிஞ்சுதும் தென் பேசியிருக்கலாமே?” என ஒரு தயக்கத்தோடு சொல்ல
“ம்ம். பேசியிருக்கலாம் தான். ஆனா நானா வந்து எப்படி என்ன பேசுறது தெரியாம தான் பேசாம இருந்திட்டேன்.”
“எஸ்.. நீங்க சொல்றது கரெக்ட் தான்.. நாம முன்ன பின்ன பேசினது கூட இல்ல.. உங்களோட தயக்கம் கரெக்ட் தான்.”
“ம்ம். ஆமா நாம பாத்திகிட்டது கூட கம்மி தான். பேசினது கிடையாது. அதான் அமைதியா.. அப்படியே..” தயங்கிட்டே சொல்ல..
“ம்ம். பரவாயில்ல. தட்ஸ் நோ பிராப்ளம்..”
“ம்ம். ஓகே..”
“பின்ன ஏன் சன்பாத் மாதிரி ரெயின் பாத் எடுத்தீங்க..? ”
“மழைல நனைஞ்சிட்டு வந்தத சொல்றீங்களா?”
“நோ. நோ.. டிரெயின் ஏறின பிறகு திரும்பி ரெயின்பாத் எடுத்தீங்கள அத சொல்றேன்..”
“ஓஹோ.. அது வந்து மழைனா ரொம்ப புடிக்கும்.. அது இந்த மாதிரி சாரல் மழை பெய்யும் போது பாத்து அதே ரசிச்சிட்டே இருப்பேன்..”
“ம்ம்.. சூப்பர்..”
“வீட்டுல இருந்த இந்த மாதிரி ரசிக்க முடியாது. நா.. நாம இருக்குற அபார்மெண்ட்ல பால்கனியே கிடையாது. சோ ரசிக்க மூடியாது. இப்ப தான் மழைய ரசிக்குறதுக்கு சான்ஸ் கிடைச்சிருக்கு.. அத ரசிச்சிட்டு இருந்தேன்..”
“ம்ம்.. மழைய ரசிச்சிட்டு இருந்தீங்க. தட்ஸ் ஓகே.. பட் எப்படி மழைல குளிச்சீங்க..”
“நா குளிக்கல.. அதுவா குளிப்பாட்டி விட்டு போய்ருச்சு..”
“ஹா.. ஹா..”
“காத்தும் மழையும் சேர்ந்து வந்தது.. வெளியில தலைல வச்சு இருந்ததுனால மழை என்னைய குளிப்பாட்டி விட்டு போய்ருச்சு..”
“ஹா.. ஹா. நல்லா பேசுறீங்க..”