குமாரின் மனதில் முதலில் ஒரு பயம் வந்து உட்கார்ந்துக் கொண்டது. என்ன கேட்கப் போகிறாள். இத்தனை நேர முயற்சியனைத்தும் வீணாக போகும் அளவுக்கு எதையாவது விவகாரமாக பேசாமல் இருக்க வேண்டுமே இவள் என்ற கவலையோடு கேளுங்க என்றான் தன் அச்சத்தை வெளிக் காட்டிக் கொள்ளாமல்.
அமுதா அவன் அஞ்சியது போலவே ஒரு விவகாரமான கேள்வியை தான் கேட்டாள்.
இப்ப உங்க மனசிலே எந்த எண்ணமும் இல்லாம ஒரு ப்ரண்டா நினைச்சு தான் என் கூட பழகுறீங்களா?
குமார் தடுமாறினான். இதற்கு என்ன பதில் சொல்வதென்றே அவனுக்கு புரியவில்லை. ஆமாம் என்றால் அதன் பின் அமுதாவை நெருங்க முடியாது. இல்லை உன்னை அடைய தான், உன் உடம்பை அனுபவிக்க தான், இத்தனை முயற்சியும் என்று உண்மையை சொன்னால் அமுதா அதற்கு என்ன மாதிரி ரியாக்ட் பண்ணுவாள் என்று தெரியாது. ஒரு சில நொடிகள் யோசித்த குமார் துணிச்சலாக ஒரு முடிவெடுத்தான்.
இல்லை… ஸாரி டூ ஷே திஸ்… என் மனசிலே வேற மாதிரி ஆசை இருக்கு. ஆனா அதை நிறைவேத்திக்கனும்ன்னு ஆசைப்படலை. ஜஸ்ட் திரும்ப ஊருக்கு கிளம்பற வரைக்கும் உங்க கூட இந்த அளவு பழக முடிஞ்சதே எனக்கு போதும்ன்னு நினைக்கிறேன். அதுக்காக நான் உங்களை ப்ரண்டா மட்டும் நினைச்சு பழகுறேன்னும் பொய் சொல்ல முடியலை என்னாலே என்றான்.
அமுதாவின் மனதில் அவளையும் அறியாமல் வாட் எ ப்ரிலியண்ட் ஆன்சர். திருட்டுப் பயல், தன் மேல் ஆசைப்படுவதையும் அப்பட்டமாக சொல்கிறான். அதே சமயம் ரொம்ப யோக்கியன் மாதிரியும் பேசுகிறான். டேஞ்சரான ஆள் தான் என்ற எண்ணம் ஓடியது.
இப்போது அமுதா அவனை நேராக பார்த்து, ஏன் இப்படி இருக்கீங்க? லாவண்யா என்னை விட யங்க், என்னை விட அழகு. அவளை விட்டுட்டு…
குமார் மனதுக்குள் இப்போது தான் சாமார்த்தியமாக பேசினால் தான் அமுதாவை வீழ்த்த முடியும் என்று முடிவு செய்துக் கொண்டான்.
இதுக்கு நான் லாவண்யாவை விட நீங்க அழகு, லாவண்யாவை விட நீங்க யங்கா இருக்கீங்கன்னு பதில் சொன்னா நீங்க அது உண்மையாவே இருந்தாலும் எப்படியும் ஏத்துக்க போறதில்லை. ஒரு வேளை நான் உங்களை பார்க்காம இருந்திருந்தா என் மனசிலே அப்படி ஒரு எண்ணம் உருவாகி தீயா வளர்ந்திருக்காது… ஆனா பார்த்திட்டேனே….
அமுதா, பார்த்தவுடனே வர இது என்ன காதலா? நாம எல்லோரும் மேரிட் வித் அனதர் பர்சன் என்றாள்.
கண்டிப்பா காதலில்லை. இதுக்கு என்ன பேர் வைக்கிறதுன்னும் எனக்கு தெரியலை.
ம்… ரொம்ப க்ளவரா பேசுறதா நினைப்பு.
சற்று நேரம் இருவரும் அமைதியாக இருந்தனர். குமார் பதட்டத்துடன் அமர்ந்திருந்தான். அமுதா எந்த பதட்டமும் இல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள். ஆனால் உண்மையில் அவள் மிகவும் குழம்பி போயிருந்தாள். கடந்த சில மாதங்களாக அவள் வைத்திருந்த வைராக்கியம் இப்போது போன இடம் தெரியவில்லை. அதே சமயம் அவள் மனமோ உடலோ இப்போது குமாருடன் கூட நினைக்கும் அளவுக்கு தயாராகவில்லை. அதே சமயம் அமுதா செக்ஸ் அனுபவித்தும் சில மாதங்கள் ஆகியிருந்ததால் அவள் உடல் இந்த சூழ்நிலையில் அதீதமாக காமவயப்பட்டிருந்தது.
என்ன நடக்கிறது இங்கே? என்று புரிந்துக் கொள்ள முடியாமல் எதையெதையோ யோசித்தபடி ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்தவள் மனதில் திடீரென்று அந்த கேள்வி உதயமானது. அடுத்த நொடி அவள்…
டேய் என்று குமாரை பார்த்து அதட்டி கூப்பிட்டாள்.
குமார் ஒரு நொடி உடல் அதிர்ந்து அமுதாவை ஏறிட்டு பார்க்க…
அவனை கண்களுக்குள் கண்களால் உற்று பார்த்த அமுதா…
நீ அன்னைக்கு நிஜமாவே குடிச்சிருந்தியா?
குமாருக்கு உடனே விசயம் புரிந்து விட்டது. அவன் எதை மனதில் வைத்து பார்க்காம இருந்திருந்தா என்ற வார்த்தையை உபயோகித்தானோ அது நன்றாகவே வேலை செய்தது. அவனும் அதை எதிர்பார்த்து தானே அந்த வார்த்தையை அழுத்தி சொல்லியிருந்தான். அவன் எதிர்பார்த்த மாதிரியே அமுதா பேசுவது அவனுக்கு நம்பிக்கையை உண்டாக்கியது. இருந்தாலும் புரியாத மாதிரியே…
என்ன அம்மு கேட்கிறே? எனக்கு ஒண்ணும் புரியலை.
டேய் தடிமாடு… உனக்கா புரியலை. எல்லாம் திட்டம் போட்டு செஞ்சிருக்கே. நான் என்ன கேட்கிறேன்னு நிஜமாவே புரியலை உனக்கு?
ம்ஹூம்… புரியலை அம்மு…
பேச்சோடு பேச்சாக அவன் அமுதாவை அம்மு அம்மு என்றே அழைக்க துவங்கினான். அமுதா அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை. அல்லது கவனித்தாலும் அதை பொருட்படுத்தும் நிலையில் இல்லை.
