தேங்க் யூ தோழி 205

வணக்கம் நண்பர்களே.. !!

எல்லாரும் எப்படி இருக்கீங்க?
தமிழ் சொன்ன இடத்தை அடைந்தான் நிருதி. பைக்கை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு பாக்கெட்டில் இருந்த மொபைலை எடுத்தான். நெட் ஆன் செய்து வாட்ஸப் ஓபன் பண்ணினான். தமிழிடமிருந்து அவளின் படம் வந்திருந்தது. ஆர்வமாக அதை திறந்து பார்த்தான். அவன் மனசு குதூகலித்தது.. !!

தழிம்.. பிறந்த நாள் உடையில் அழகாக இருந்தாள். ஓவர் மேக்கப் எல்லாம் செய்யவில்லை. ஆனால் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி பார்க்கும் படியாக மேக்கப் செய்திருந்தாள். அவளின் காந்தக் கண்கள் அவனை காதலாகப் பார்ப்பதை.. உற்று நோக்கி சிலிர்த்தான்.. !!

‘நிச்சயமாக இவளும் என்னை மனதார விரும்புகிறாள். அதை அவள் கண்கள் அப்பட்டமாக சொல்கிறது. ஆனால் அதை ஒத்துக் கொள்ள மறுக்கிறாள். இருக்கட்டும்.. எத்தனை நாள் தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டிருப்பாள் என்று பார்த்து விடலாம்’

அவனது மனம் கவர்ந்த தமிழின் அழகு முகத்தை ரசித்தபடி அவள் வரக் காத்திருந்தான். அவளுக்காக காத்திருக்கும் அந்த நொடிகள் அவனுக்கு சுகமாகவே இருந்தது.

ஒரு கால் மணி நேரம் கழித்து செல்பியில் பார்த்த அதே உடையில்.. அதே தோற்றத்தில் முகம் நிறைய சிரிப்புடன் அவனிடம் வந்தாள் தமிழ்.. !! ஆனால் அவள் தனியாக வரவில்லை. அவளுடன் இன்னொரு பெண்ணும் வந்தாள்.. !!

“ஹாய் தமிழ்”
“ஹாய் நிரு அண்ணா..”
“அண்ணாவா?”
“ம்ம்.. ஏன்? எப்பவும் நீங்க எனக்கு அண்ணாதான்..” என்று சிரித்தபடி இயல்பாக நெருங்கி வந்து தன் வலது கையை முன்னால் நீட்டினாள்.

வியந்து அவள் கை பற்றி குலுக்கினான்.
“மேனிமோர் ஹேப்பி ரிட்டன்ஸ் ஆப் தி டே..”
“தேங்ங்க்க் யூ… வெரி மச் அண்ணா”

அவனைப் பார்த்த பரவசத்தில் அவளின் கண்களின் ஓரத்தில் லேசான நீர் தேக்கம் உருவாவதை கவனித்தான். அவள் கையை அழுத்தினான். அவளையை இழுத்து நெஞ்சுடன் சேர்த்து இறுக்கி அணைத்து தழுவிக் கொள்ள வேண்டும் போல் ஒரு தாபம் அவன் நெஞ்சில் மூண்டது.

‘இந்த இரண்டு ஆண்டுகளில் எவ்வளவு அழகாய் வளர்ந்து விட்டாள்.? பெண்மைக்கே உரித்தான உடலின் வளைவுகளும்.. நெளிவுகளும்.. யப்பா..!!’

அவன் நெஞ்சில் ஓடிய அதே எண்ணங்கள் தன் நெஞ்சிலும் ஓடியதைப் போலவே அவன் கண்களை ஆழமாகப் பார்த்து சிலிர்த்து நின்றாள் தமிழ்ச்செல்வி.. !!தன் மனம் கவர்ந்த தமிழின் அழகை கண்களால் பருகினான் நிருதி. அவன் கண்களை உற்றுப் பார்த்த அவள் உதடுகள் ஏனோ மெல்ல நடுங்கின.

“சூப்பரா இருக்க தமிழ்” அழுத்திச் சொன்னான்.

“ம்ம்.. தேங்க்ஸ்..”

“நீ இப்ப ரொம்ப நல்லா வளந்துட்ட”

“நீங்களும் சூப்பரா இருக்கீங்க? ” லேசான வெட்கத்துடன் சொன்னாள் .

“ஹா.. தேங்க்ஸ்..”

தமிழ்.. !! மா நிறம். சின்ன நெற்றி. அழகான வளைந்த புருவம். ஆழமான.. அவனை கொள்ளை கொள்ளும் காந்தக் கண்கள். கூரான மூக்கு. மெல்லிய மேலுதடு. அதை விட சற்றே பெருத்த கீழுதட. அழகான வெள்ளைப் பல்வரிசை. ஆப்பிள் போன்ற கன்னங்கள். மென்மையான மெல்லிய நரம்புகள் ஓடும் கழுத்து. அதன் கீழே சற்று அகன்று விரிந்த நெஞ்சு. அதில் அம்சமாக நிமிர்ந்து நின்றிருக்கும் இரு பருவக் கனிகள். தொப்பை போட முயலும் வயிற்று பகுதி.

காலேஜ் போகிறாள். முதல் வருடம். கடந்த இரண்டு வருடம் முன்புவரை அவன் எதிர் வீட்டில் குடியிருந்தாள். அவளை சிறு வயது முதலே அவனுக்கு தெரியும் . அவனிடம் அவளும் மிக நன்றாக பழகுவாள்.

அவள் பதிணொன்றாம் வகுப்பு படிக்கும் போது அவள் வீடு.. ஊறு எல்லாம் மாறிப் போய் விட்டாள். அதுநாள்வரை அவள் மீது அவனுக்கு காதல் வரவில்லை. ஆனால் அவள் போன பின்.. அவள் நினைவு அவனை அதிகமாய் பாதித்தது. அதன்பின்தான் அவள் மீது தனக்கு காதல் இருப்பதை புரிந்து கொண்டான் நிருதி.. !!

அதே நேரம் அவனுக்கும் வெளியூரில் வேலை கிடைக்க.. அவனும் அவள் நினைவை சுமந்தபடி போய் விட்டான். இரண்டு பேரும் இந்த இரண்டு வருடங்களாக சந்தித்துக் கொள்ளவே இல்லை. கடந்த ஒரு மாதம் முன்புதான் தமிழின் தோழி ஒருத்தியைப் பார்த்து பேசி.. அவளிடம் போன் நெம்பர் வாங்கினான். அதன்பின் இருவருக்குமான நட்பு வாட்ஸப் மூலம் துவங்கியது.. !!

அது இன்று.. இப்போது.. நேரில் சந்திக்கும் அளவுக்கு வந்திருக்கிறது.. !! ” தமிழ் இது?”

தமிழ்ச் செல்வியின் அருகில் நின்று கொண்டிருந்த அவளின் தோழியைப் பற்றிக் கேட்டான் நிருதி.

அந்தப் பெண் உடனே அவனைப் பார்த்து சினேகமாகச் சிரித்தாள். அவள் சிரித்தபோது கண்கள் சுருங்கியது. சிரிக்கும் போது அவள் அழகாக இருந்தாள்.

“என் பிரெண்டு” அவனிடம் இருந்து தன் கையை விடுவித்துக் கொண்டு சொன்னாள் தமிழ் “ரூபா.. நாங்க ரெண்டு பேரும் ஒரே க்ரூப்..”

“ஹாய்..” என்றான்.

அவளும் “ஹாய்..” என்றாள். “தமிழ் உங்களை பத்தி நிறைய சொல்லியிருக்கா”

“அப்படியா? என்ன சொல்லியிருக்கா..?”

“தப்பால்லாம் இல்ல.. ரொம்ப நல்ல அண்ணா. எனக்கு அந்த ஊர்லயே ரொம்ப புடிச்ச அண்ணானு சொல்லுவா.. அடிக்கடி உங்களை பத்தி ஏதாவது பேசிட்டே இருப்பா”

நிருதி தமிழைப் பார்த்தான். அவள் சிரித்தாள். தமிழின் கன்னத்தில் செல்லமாக கிள்ளினான்.
“ம்ம்.. எனக்கும் ரொம்ப ரொம்ப பிடிச்ச ஒரே பொண்ணு இந்த காந்த கண்ணழகி மட்டும்தான்”

“ஹை..” எனச் சிரித்தாள் தமிழ் .

“அப்போ.. லவ் பண்றீங்களா தமிழை?” அவள் தோழி சட்டென கேட்டாள்.

“சாட்சாத்..” என்றான். “பட்.. ஒன் சைடா..”