தேங்க் யூ தோழி 205

“வரேன்.. ஆனா என்ன சொல்லிட்டு வரதுனுதான் தெரியல”
“புவி வீட்டுக்கு போறதா சொல்லிட்டு வா..”
“அவ வீட்டுக்குன்னு சொன்னா அம்மா திட்டுவாங்க.. பொறந்த நாளும் அதுவுமா எனக்கு திட்டு வாங்க விருப்பம் இல்ல..”
“ம்ம்.. சரி.. இப்ப நான் என்ன பண்ண? நான் உனக்காகத்தான் லீவ் போட்டேன்”
“ஹையோ.. சரி வாங்க..”
“எங்க வரது? உன் வீட்டுக்கேவா?”
“நோ.. நோ.. வீட்டுக்கு வேண்டாம். அதுவும் வம்பாகிரும்”
“……”
“அலோ…?”
“சொல்லுடி செல்லம்.. இப்ப நான் என்னதான் பண்ண?”
“வரேன்ன்ன்.. டென்ஷனாகிடாதிங்க..”
“இல்ல.. வா..”
“வந்து… எங்க ஏரியா பஸ் ஸ்டாப்… இல்ல இல்ல அங்க வேண்டாம்.. அந்த ஸ்கூல் இருக்கில்ல? அங்க பக்கத்துல வெய்ட் பண்ணுங்க.. நான் வீட்லருந்து வெளிய வந்ததும் உங்களுக்கு கால் பண்றேன்”
“உன்ன பாக்க ரொம்ப ஆசையா இருக்கேன் செல்லம்”
“ம்ம்.. வரேன்ப்பா..”
“ஏய் தமிழ்..”
“ம்ம்? ”
“பக்கத்துல யாராவது இருக்காங்களா?”
“இல்ல.. ஏன்?”
“ஒரு செல்பி எடுத்து அனுப்பி வை..”
“ம்கூம்.. அதான் நேர்ல பாக்க போறோம்ல?”
“நேர்ல ஓகேமா.. இப்ப நீ எப்படி இருக்கேனு ஒரு செல்பி.. ப்ளீஸ்”
“இப்ப என்ன அவசரம்? ”
“அவசரமில்லாம நீ மெதுவாவே வா.. அதுவரை நான் என் தேவதையை ரசிச்சிட்டிருக்கேனே?”
“ஓகே.. வெய்ட்..” காலை கட் பண்ணினாள்.

நிருதி மொபைலை சட்டை பாக்கெட்டில் திணித்தான். பைக்கை ஸ்டார்ட் செய்து சாலையில் கலந்தான். முறுக்கிப் பிடித்தால் பத்து நிமிடத்தில் தமிழ் சொன்ன ஸ்கூலை அடைந்து விடலாம். ஆனால் அங்கே போய் நிறைய நேரம் காத்திருக்க வேண்டியது வரலாம் என்பதால் மெதுவாகவே பைக்கை ஓட்டினான்.. !!

அவன் எண்ணம்.. சிந்தனை.. மனசு எல்லாம் தழிழைப் பற்றியே ஓடிக் கொண்டிருந்தது.. !!