தேங்க் யூ தோழி 205

“எ.. எப்படி நடந்துப்பாங்க?”
“போங்க உங்களுக்கு ஒண்ணுமே தெரியல”
“ஆமா.. தெரியல. சொல்லேன்”
“நான் என்ன உங்க லவ்வரா?”
“நீ என் லவ்வரா இருந்தா.. இன்னும் சூப்பராத்தான் இருக்கும்”
“ஆஹா…” உதட்டைச் சுழித்தாள “ஆளைப் பாருங்க ”
“நெஜம்மா ரூபா.. பேசாம இவளுக்கு முன்ன நான் உன்னை பாத்துருக்கலாம்..”
“நானும் நெனச்சேன்..” எனச் சொன்னவள் சட்டென்று நாக்கை கடித்துக் கொண்டாள்.
“ஏய்.. நெஜமாவா?”
“சீ.. இல்ல.. சும்மா”
“பொய் சொல்லாத ரூப்ஸ்.. நீ பாக்கற பார்வைலயே நான் சொக்கிட்டேன். அதவிட உன் ட்ரக்ஸர்லாம்… செம்ம… கலக்குற..”
“அய்யோ… இதெல்லாம் என் கிட்ட பேசுங்க. ஆனா பேச வேண்டிய ஆள்கிட்ட பேசாதிங்க.. மக்கு மக்கு…”
“ஏய்…. நான் மக்கா.. ?”
“பின்ன.. மக்கு இல்லாம என்னவாம்?”
“ஏன்.. எப்படி சொல்ற?”
“இங்க வந்து எவ்வளவு நேரம் ஆச்சு.. இப்பவரை அவளை ஒரு கிஸ்ஸு கூட அடிக்கல.. என்ன ஆளு நீங்க? ”
“கிஸ்ஸா….?”
“என்ன கிஸ்ஸா?”
“ஏய்.. நீ இருக்கப்ப.. நான் எப்படிப்பா… உன் முன்னால.. ?”
“அவனவன் பிரெண்ட்ஸ்களை கூட வெச்சிட்டே எவ்வளவோ பண்றான். நீங்க என்னடான்னா ஒரு கிஸ்ஸடிக்க இப்படி யோசிக்கறீங்க..”
“அப்ப கிஸ்ஸடிக்கலாங்குற?”
“ம்ம்”
“உன் முன்னால..”
“நான் வேணா திரும்பிக்கறேன்”
“பரவால.. பாத்துக்கோ..”
“அது நல்லாருக்காது”
“ஏன் நல்லாருக்காது. நான் அவள கிஸ்ஸடிக்கறப்ப உன்னை பாத்துட்டே.. உன்னை கிஸ்ஸடிக்கற மாதிரி அடிக்கறேன். நேச்சுரல் அவளுது. மனசுக்குள்ள உன்னுது..”
“ஐய்ய.. ச்சீ.. ” என்று வெட்கப் பட்டுச் சிணுங்கி அவனை அடிக்க கையை ஓங்கிக் கொண்டு வந்தாள் ரூபா. “உங்கள…”
“அப்படி கிஸ்ஸடிச்சா சூப்பரா இருக்கும்” அவன் சிரிக்க.. அவள் கை அவனை தோளை பட்டென அடித்தது. சட்டென்று அவளின் கையைப் பிடித்தான் நிருதி.. !!ரூபாவின் கையைப் பிடித்து வளைத்து மெல்ல தன் பக்கமாக இழுத்தான் நிருதி. அவள் சிணுங்கியபடி கையை பின்னால் இழுத்தாள்.

“விடுங்க ”
“ஏய் ரூபா”
“கைய விடுங்க”
“விடலேன்னா?”
“என்கிட்ட எதுக்கு வம்பு பண்றீங்க?”
“உன்ன எனக்கு புடிச்சிருக்கு”
“நான் என்ன உங்க ஆளா..?”
“ஆமா.. இனிமே நீயும் என் ஆளுதான்”
“ஆஹா….”
“ஏய்.. உனக்கும் என்னை புடிச்சிருக்குதான?”
“புடிச்சிருந்தா?”
“லவ் பண்ணலாம்?”
“அப்போ அவ?”
“அவளும்தான்.. அவ ஒரு பக்கம். நீ ஒரு பக்கம் ”
“ஆஹா.. ரொம்பத்தான்… ஆளைப் பாருங்க..”
“ஏய்.. நீதான சொன்ன?”
“என்னன்னு?”
“அவனவன் ஒரே நேரத்துல ரெண்டு பேரை லவ் பண்றானு?”
“ஆனா நான் அந்த மாதிரி பொண்ணில்ல”
“சே.. உன்னை நான் தப்பான பொண்ணுன்னெல்லாம் சொல்லவே இல்லையே..”
“ஆஆ.. கைய விடுங்க.. அவ வரப் போறா” பலமாக கையை திருகி அவனிடமிருந்து விடுவித்தாள்.
“சரி… நீ எனன சொல்ற?”
“அதெல்லாம் தப்பு” என்று விட்டு எழுந்து தள்ளிப் போனாள் .
“ஏய் ரூபா… ஸாரி ”

அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
“ஒருவேள.. தமிழ் கூட பிரேக்கப் ஆச்சுன்னா.. அப்படி ஒண்ணு ஆக வேண்டாம்.. பட்… ஆச்சுன்னால்…”

அவனுக்கு தமிழை விட்டுத் தரும் எண்ணம் துளிகூட இல்லை. தமிழின் மீதான காதல் மிக ஆழமானது. ஆனால் இவள் மீது ஏற்படுவது பருவ வயதிற்கே உரிய ஒரு இனக் கவர்ச்சி.

கவரிங் நகையை நம்பி அவன் தங்கத்தை இழக்க விரும்பவில்லை.. !!

“தேங்க் யூ” என்று மட்டும் சொன்னான்.

தமிழின் தோழி என்கிற முறையில் என்றாவது ஒரு நாள் உபயோகப் படலாம்.. !!
நிருதி வீட்டை விட்டு கிளம்பி வெளியே வந்ததும் ஒரு ஓரத்தில் பைக்கை நிறுத்தினான். பேண்ட் பாக்கெட்டில் இருந்த மொபைலை எடுத்து தமிழ்ச் செல்விக்கு போன் செய்தான். ரிங்காகி எடுத்தாள்.

“ஹலோ?” அவனுக்கு முன் அவளே பேசினாள்.

அவள் குரலைக் கேட்டதும் சிலிர்த்தான்.
“ஹாய் தமிழ்.. நான் கிளம்பிட்டேன்”
“ம்ம்.. வாங்க”
“எங்க வரது?”
“என்… என்.. வீட்டுக்கே வந்துர்ரீங்களா?”
“உன் வீட்ல ஆள் இல்லையா?”
“இருக்காங்க..”
“அப்றம் நான் எப்படி வரது .?”
“ஆமால்ல..? சரி.. என்ன பண்றது இப்ப?”
“வெளிய வா..”