ஸ்ருதி Part 2 82

பார்த்து பார்த்து மெதுவா சாப்பிடு உன்கிட்ட இருந்து பிடுங்கி ஒன்னும் சாப்பிட மாட்டேன் .தோசை வேறு ஆர்டர் பண்ணி இருக்கேன்

எல்லாம் கணக்கு வச்சிகோங்க சார்,நாளைக்கு எங்க பெரியம்மா கிட்ட திருப்பி வாங்கி தந்து விடுகிறேன்

ஷெட்டி இதை கேட்டு சிரிக்க

ஆர்டர் செய்த மண மணக்கும் நெய் மசாலா தோசையும் வந்தது.
கடைசியாக பாலும் குடிக்க ஸ்ருதியின் பசி முற்றிலும் பறந்து போனது.

டேப்லெட் எடுத்து கொண்ட ஷெட்டி ,சரி எனக்கு கொஞ்சம் tired ஆக இருக்கு,நான் தூங்க போறேன்.

உள்ளுக்குள் இருந்த மற்றொரு அறையை திறக்க ,

அறைக்குள் இன்னொரு அறையா சார்?

ஆமா ,இந்த ரூமில் சென்று நீ படுத்து கொள்.

Good night .

சார் என்று ஸ்ருதி அழைக்க

எதுவாக இருந்தாலும் காலை பேசி கொள்ளலாம் good night.

அவன் சென்ற பிறகு விலை உயர்ந்த மெத்தையில் உட்கார அது மெத்து மெத்தென்று இருந்தது.சிறு குழந்தை போல் ஆசை ஆசையாக அதன் மேல் எக்கி எக்கி ஸ்ருதி குதித்தாள்.

போதும் போதும் எகிறி குதிப்பது படுத்து தூங்கு வெளியே வரை ஸ்பிரிங் சத்தம் கேட்குது என்று ஷெட்டி கூற

ஸ்ருதிக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.
மெத்தையின் சுகமும் ,நிம்மதியும் மனதில் வர உடனே தூக்கத்தை வர வைத்தது.

நாளை அவள் வீட்டில் ஒரு பெரிய பூகம்பம் வெடிக்க போவதை தெரியாமல் ஸ்ருதி நிம்மதியாக உறங்கி கொண்டு இருந்தாள்.

சுட்டும் சுடர் விழி நாள் முழுதும் தூங்கலயே கண்ணா

தங்க நிலவுக்கு ஆரிரரோ பாட வந்தேன் கண்ணே

கனவில் உன்னை நான் சேர்ந்திட இமையே தடையா

விரிந்தால் சிறகே இங்கு சிலுவையாய்

ஷெட்டி கண் விழித்த போது கையின் வலி சற்று குறைந்து இருந்தது.
இடது பக்கம் பார்க்கும் போது,கட்டில் அருகே ஸ்ருதி நாற்காலியில் தூங்கி கொண்டு இருந்தாள்.

ஏய் ஸ்ருதி எழுந்திரு ,

தூக்கம் கலைந்த ஸ்ருதி, சாரி சார் உங்களுக்கு ஏதாவது வேண்டுமா ?

நான் உன்னை உள்ளே தானே போய் படுக்க சொன்னேன்.
இங்கே நாற்காலியில் உட்கார்ந்து தூங்கி வழியிற என்று அதட்டலாக கேட்க

சார் ,நீங்க நேற்று இரவு வலியில் முனகி கொண்டு இருந்தீர்கள்,அதனால் நேற்று dressing பண்ண இடத்தை தவிர்த்து கொஞ்சம் சுடு தண்ணீ ஒத்தடம் கொடுத்தேன்.மறுபடியும் வலி வந்தது என்றால் ஒத்தடம் கொடுக்க இங்கேயே தூங்கி விட்டேன்

இங்கே பாரு ,நீ எனக்கு மூன்றாம் மனுஷி தான் .ரொம்ப உரிமை எல்லாம் எடுத்துக்க கூடாது. உன் வேலையை மட்டும் பார் .

சார் நீங்க என் மானத்தையே காப்பாற்றி கொடுத்து இருக்கீர்கள் ,நீங்க எதை கேட்டாலும் என்னால் தரக்கூடியதாக இருந்தால் நான் கண்டிப்பாக தருவேன்.

என்ன கேட்டாலும் தருவீயா?

என்னால் கொடுக்க முடிந்ததை கேட்டால் தருவேன் சார் என்று உணர்ச்சிவசமாக கூற

அப்போ உன்னை என்கூட படுக்க கூப்பிட்டால் என்ன பண்ணுவ

இந்த கேள்வியை கேட்டு ஸ்ருதி விதிர்விதிர்த்து போக

ம் ,சொல்லு என்ன பண்ணுவ,

ஒரு மனைவியாக ,என் கணவனுக்கு நான் தரும் பரிசு சார் அது. அதை நீங்கள் கேட்டால் நான் உங்களுக்கு என்னை தருவேன்.ஆனால் அதற்கு பிறகு நான் உயிரோடு இருக்க மாட்டேன்.

ஏய் லூசு ,நான் சும்மா தான் கேட்டேன் .போய் குளித்து விட்டு ரெடி ஆகு.நான் உன்னை உன் வீட்டில் விட்டு விடுகிறேன்.ஆமா நீ நேற்று இரவு ஏதோ கேட்க வந்தாய் ? என்ன அது .