ஸ்ருதி Part 2 82

என்னை இந்த ஓட்டலை விட்டு வெளியே கொண்டு போய் விட்டால் போதும்.

சரி நான் உனக்கு உதவி செய்கிறேன்.ஆனால் அவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் சமாளிப்பது கடினம்.ரிசப்ஷன் தவிர்த்து வேறு வழி இல்லை.உனக்கு துப்பாக்கி சுட தெரியுமா ?

இல்லை சார் ,எனக்கு தெரியாது.

கார் ஓட்ட தெரியுமா?

இல்லை சார் அதுவும் தெரியாது

என்னிடம் துப்பாக்கி உள்ளது ,துப்பாக்கி காட்டி தப்பிக்கும் பொழுது காரை யாராவது ஓட்ட வேண்டும்.ஒருவரே இரண்டையும் செய்யும் பொழுது சிறு தவறு நடந்தாலும் இருவருமே மாட்டி கொள்வோம்.சரி நீ இங்கேயே இரு ,நான் கீழே போய் தப்பிப்பதற்கு ஏதாவது வழி இருக்கிறதா என்று பார்க்கிறேன்.

ஷெட்டி கீழே சென்று நோட்டம் விட மொத்தம் ஆறு பேர் இருந்தார்கள்.அதில் இருவர் ரிசப்ஷன் அருகே இருக்க ,அடுத்த இருவர் ஒவ்வொரு floor ஆக check செய்து கொண்டு இருக்க ,மீதி உள்ள இருவர் ஓட்டல் சுற்று சுவர் அருகே அவளை தேடி கொண்டு இருந்தார்கள்.

இதையெல்லாம் பார்த்து கொண்ட ஷெட்டி மேலே வந்து,எனக்கு தெரிந்து ஆறு பேர் உன்னை தேடி கொண்டு இருக்கிறார்கள்.இன்னும் எத்தனை பேர் மறைந்து உள்ளார்கள் என தெரியவில்லை.கொஞ்சம் கஷ்டம் தான் நினைக்கிறேன்.

சார் …….?

இரு கஷ்டம் தான் என்று சொன்னேன்.முடியாது என்று சொல்லவில்லை. நம் நல்ல நேரம் அவர்கள் ஆறு பேர் மூன்று குழுவாக இருக்கிறார்கள் ,முதலில் ஒரு குழுவை மடக்குவோம்.அவர்கள் மூன்றாம் மாடியில் இருக்கிறார்கள் நீ வந்து நான் சொல்ற மாதிரி செய்.

ஸ்ருதி மூன்றாம் மாடியில் ஏறி ,வேண்டும் என்றே அவர்கள் முன் செல்ல ,அவளை பார்த்த முதல் குரூப் ,டேய் குமாரு அதோ அவள் அங்கே போகிறாள் பாருடா என்று அவளை துரத்தினர்.

சரியான இடைவெளியில் அவர்களை பின் தொடர செய்த ஸ்ருதி அவர்கள் கண் முன்னே ஷெட்டி அறைக்குள் நுழைந்தாள்.
அவர்களும் பின் தொடர்ந்து நுழைய தயாராக இருந்த ஷெட்டி இருவரையும் மடக்கி பிடித்தான்.கூடவே சண்டையில் ஸ்ருதியும் துணைக்கு வர எளிதாக அவர்கள் மடக்கி பிடிக்கப்பட்டு வாய் பொத்தி நாற்காலியில் கட்டி போடப்பட்டனர்.

இந்தா ஸ்ருதி ,இது என் மனைவி புடவை இதை கட்டி கொள்.உன்னுடைய உடையை வைத்து அவர்கள் எளிதில் கண்டுபிடிக்கிறார்கள்.

ஸ்ருதியும் சென்று சேலை மாற்றி கொண்டு வர இருவரும் புறப்பட்டனர்.

நல்லா முக்காடு போட்டுக்கோ ,இங்கே வரும் எல்லா பெண்களும் இப்படி தான் வருவார்கள் ,யாருக்கும் சந்தேகம் வராது வா போலாம் என்று ஷெட்டி கூற ,அவளும் தன் முகத்தை மறைத்து கொண்டு வந்தாள்.

இரண்டாம் மாடியில் இருந்து முதல் மாடி வரை எந்த பிரச்சினை இல்லாமல் சென்றனர்.

இன்னும் பத்தடி தூரத்தில் ரிசப்ஷன் அதை கடந்து விட்டால் போதும் ,வெளியே என் கார் உள்ளது அதில் ஏறி தப்பி விடலாம் என்று ஷெட்டி கூற ,

அவள் அணிந்து இருந்த கால் செயின் ஓசை தேவாவின் கவனத்தை ஈர்க்க பின்னே இருந்து தேவா கத்தினான்

டேய் மச்சான்…… ,அந்த orange கலர் saree அவ தான்டா விட்டு விடாதீங்க…….

உடனே வெளியே இருந்து ஓடி வந்த இரண்டு பேரும்,பின்னாடி இருந்து ஓடி வந்த இரண்டு பேரும்(தேவா உட்பட) ஷெட்டி மற்றும் ஸ்ருதியை சுற்றி வளைத்தனர்.

ஷெட்டி ரெண்டு பேரோடு போராட ,ஸ்ருதி ரெண்டு பேரோடு போராடினாள்.ஷெட்டியினால் இரண்டு பேரை சமாளிக்க முடிந்தது.ஆனால் ஸ்ருதியினால் இரண்டு பேரை சமாளிக்க முடியாமல் திணறி கொண்டு இருந்தாள்.
Ncc இல் கற்று கொண்ட தற்காப்பு கலையால் அவளுக்கு ஒருவரை மட்டுமே சமாளிக்கும் அளவு திறன் இருந்தது.அந்த நேரத்தில் தேவா தன் கத்தியை கண்ணிமைக்கும் நேரத்தில் பிரயோகித்து ஷெட்டி தோளில் இறக்கினான்.இதில் இரத்தம் தெறிக்க அவன் போராடும் வலு குறைந்தது.மேலும் ரூம் பாய் ஆக இருந்த இருவர் அந்த நேரத்தில் வந்து சேர ,ஷெட்டி நால்வரால் மடக்கி பிடிக்கப்பட்டான்.ஸ்ருதி இருவரால் தரதரவென்று இழுத்து செல்லப்பட,

சார் பிளீஸ் என்னை யாராவது காப்பாற்றுங்கள்,என்று கதறி கொண்டு இருக்க ,அங்கு இருந்த அனைவரும் வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டே இருந்தார்கள்.

அந்த நேரத்தில் ஒரு அற்புதம் நிகழ்ந்தது. அங்கு இருந்த மூன்று திருநங்கைகள் ஷெட்டியை பிடித்து இருந்த நால்வரை கிடைத்ததை கொண்டு தாக்கினார்கள்.இதில் அவர்கள் பிடியில் இருந்து விடுபட்ட ஷெட்டி உடனே துப்பாக்கி எடுத்து தேவாவின் காலை நோக்கி சுட்டான்.

ஷெட்டி கையில் துப்பாக்கி இருப்பதை பார்த்து அனைவரும் பஞ்சாக பறக்க ,ஸ்ருதி ஓடி வந்து ஷெட்டி அருகே நின்று கொண்டாள்.

அவர்கள் இருவரும் திருநங்கைகளுக்கு நன்றி கூற

திருநங்கைகள் இவர்களை பார்த்து,சார் அந்த பொறுக்கி பய இந்த பொண்ணை பொய் சொல்லி ஏமாற்றி கூட்டி செல்வதை பார்த்தோம் சார்.இந்த பொண்ணை பார்க்க எங்களுக்கு பாவமாக இருந்தது.யாராவது இந்த பொண்ணுக்கு உதவினால் நாங்கள் உதவுதற்கு தயாராக இருந்தோம்.நல்ல வேலை நீங்கள் வந்தீர்கள் .பத்திரமாக இந்த பொண்ணை கூட்டி செல்லுங்கள் சார்.அந்த பொறுக்கிகள் வந்து விட போகிறார்கள்.

அவன் தோள் பட்டையில் வழிந்த இரத்தத்தை பார்த்து , ஐயோ இரத்தம் என்று ஸ்ருதி பதற

பயப்படாதே இதெல்லாம் ஒன்னும் கிடையாது எனக்கு ,வா போலாம் என்று திருநங்கைகளுக்கு நன்றி கூறி புறப்பட்டான்.

ஷெட்டி தனக்கு தெரிந்த மருத்துவமனையில் சென்று முதல் உதவி செய்து கொள்ள சட்டையை கழற்றினான்.அப்பொழுது அவன் உடல் எங்கும் இருக்கும் காயங்களை பார்த்து வியப்பு அடைந்தாள்.

டாக்டர் ஷெட்டியை பார்த்து ,காயம் ஒன்னும் பெரியதாக இல்லை.DRESSING பண்ணி இருக்கேன்.NIGHT கொஞ்சம் வலி இருக்கும்.இந்த வலி மாத்திரை மட்டும் சாப்பாட்டுக்கு அப்புறம் சாப்பிடுங்க .கொஞ்சம் நல்லா தூக்கம் வரும். அடுத்த DRESSING ஒரு வாரம் கழித்து அனிதாகிட்டேயே பண்ணிக்கோங்க.

டாக்டர்,அனிதா படிக்க ரஷ்யா போய் இருக்கா வருவதற்கு எப்படியும் ஒரு வருஷம் ஆகும்.நான் மங்களூர் போய் அங்கே dressing பண்ணிக்கிறேன் ஒன்னும் பிரச்சினை இல்ல .இந்த விசயம் மட்டும் அனிதா கிட்ட சொல்லி விடாதீங்க