ஸ்ருதி Part 13 25

ஷெட்டி வந்தவுடன் அனைவரும் ஒன்றாக உணவருந்தினர்.பின் ஷெட்டி,ஸ்ருதி இருவரும் கிளம்பினர்

நான் சொன்னது ஞாபகம் இருக்குல்ல,மது ஷெட்டியை பார்த்து சொல்ல,

ம்ம் இருக்கு மது,ஷெட்டி சொன்னான்.

என்ன மது நீ சொல்லி இருக்கே ! ஸ்ருதி கேட்க,

ஒன்னும் இல்ல ஸ்ருதி,உன் கால் infection ஆகாம இருப்பதற்கு சில tablets சரியான நேரத்திற்கு கொடுக்க சொன்னேன்.வேற ஒன்னும் இல்ல,மது சொன்னாள்.அப்புறம் நீ சீக்கிரமாகவே திரும்ப சென்னை வர வேண்டி இருக்கும்.

ஏன் மது?

அது அப்படி தான்.நீ என்னிடம் என்ன சொல்லி இருக்கே ஞாபகம் இருக்குல்ல,எந்த கஷ்டம் வந்தாலும் நீ என்னிடம் தான் வர வேண்டும்.தப்பான முடிவுக்கு ஏதும் போக கூடாது.மது சொல்ல,

சரி மது,சத்தியமா நான் போக மாட்டேன்.

ஆனால் மதுவின் கணக்கு மீண்டும் தப்பாக தான் போகிறது.சாதாரண பெண்ணாக இருந்தால் இனி ஷெட்டி கொடுக்க போகும் கஷ்டங்களுக்கு திரும்பி வருவாள்.ஆனால் இவள் ஸ்ருதியாயிற்றே!காலம் போட போகும் கணக்கு என்ன?

விமானம்,மங்களூர் நோக்கி பறந்து கொண்டு இருக்க,வழக்கம் போல் ஸ்ருதி,ஷெட்டி தோளில் தலை சாய்க்க,ஷெட்டி பார்த்தான்.

ஆகா இந்த பட்டு கன்னம் என் தோளில் சாய,நான் எவ்வளவு கொடுத்து வைத்தவன்.அவள் உதடுகளை பார்க்கும் பொழுது இந்த பூவிதழ் ஈரத்தில் மெய் மறந்து ,சுவைத்த தேனின் ருசியை மறக்க முடியுமா?,ஷெட்டி மனதில் மீண்டும் காமம் எழுந்தது.அவன் கையோடு ,ஸ்ருதி தன் கையை பிணைத்து கொள்ள,மதுவின் எச்சரிக்கை ஞாபகம் வர ஷெட்டி அவள் கையை உதறினான்.

கொஞ்சம் நேரம் சும்மா வர மாட்டே,உன் கூட ஒரே தலைவலியா போச்சு.என்று ஷெட்டி முதல் முறை ஸ்ருதியை பார்த்து கத்தினான்.

இதைக்கேட்டு ஒருகணம் ஸ்ருதி அதிர்ந்தாலும்,இந்த மாதிரி வசவுகள் ஒன்றும் ஸ்ருதிக்கு புதிது அல்லவே.இதை சாதாரணமாக எடுத்து கொண்டாள்.

ச்சே,என்ன வாழ்க்கைடா இது!கொடியிடை,பொன் எழில்மேனியாக,அருகே இருந்தாலும் தொடகூட கூடாது என்ற விதி எனக்கு.கெட்டவனாக இருப்பது சுலபம் ,ஆனா நல்லவனாக வாழ்வது எவ்வளவு கடினம் என்று மனசுக்குள்ளே ஷெட்டி பொருமினான்.

விமானம் தரை இறங்கியவுடன், காரில் இருவரும் பயணிக்க,ஸ்ருதி ஷெட்டியை பார்த்து நாம இப்போ எங்க போறோம் ?

கிராமத்திற்கு

இங்க போகிற வழியில் உங்க வீட்டுக்கு போய்விட்டு,மதனை கூட்டி கொண்டு சொந்த கிராமத்திற்கு போலாமே,மதனுக்கு சில பொருட்கள் மணாலியில் வாங்கி இருக்கிறேன்.அவன் கிட்ட கொடுக்கணும்.

நான் உன்னை கிராமத்தில் விட்டு விட்டு மறுபடியும் நான் நாளை நகரத்திற்கு வருவேன்.நீ என்கிட்ட அந்த பொருளை கொடு,நான் அவன்கிட்ட கொடுத்து விடுகிறேன்.உனக்கு கிளாஸ் ஸ்டார்ட் ஆகுது,அதை மட்டும் நீ பாரு.

அப்போ நான் நாளை உங்க கூட வர வேண்டாமா ?

இல்லை வேண்டாம்.நீ இதற்கு மேல் கிராமத்தில் தான் தங்க போற,நான் வாரத்திற்கு ஒருமுறை வந்து உன்னை பார்த்து கொள்கிறேன்.மதனை நீ பார்க்க கூடாது.

ஏன்,குழந்தை மதனை பார்க்க எனக்கு உரிமை இல்லையா?

அவன் அனிதாவுக்கும் எனக்கும் பிறந்த குழந்தை ஞாபகம் இருக்கட்டும் ஸ்ருதி

நான் உங்க மனைவி,உங்க குழந்தை என் குழந்தை மாதிரி.

இங்க பாரு ஸ்ருதி நான் வீண் விவாதம் செய்ய விரும்பல.நான் சொன்னது சொன்னது தான்.நீ அனிதாவாக நடிக்க வந்தவ,வேஷம் களைந்து விட்டால் திரும்பி போக ரெடி ஆக இருக்க வேண்டும்.உன் எல்லை எதுவென்று தெரிந்து அங்கேயே நிற்பது உனக்கு நல்லது.இல்லை என் சொல் பேச்சை கேட்கவில்லை என்றால் இப்பவே சென்னை கிளம்பு.என்று அவள் முகம் பாராமாலே பேசினான்.

ஏன் இவன் நம் முகத்தை கூட பார்த்து கூட பேச மாட்டேங்கிறான்.ஏதோ ஒன்னு மனசில் வச்சிக்கிட்டு பேசறான்,இருக்கட்டும் கண்டுபிடிக்கலாம் என்று மனசுக்குள் ஸ்ருதி நினைத்து கொண்டாள்.

இரவு உடை மாற்றி கொண்டு வந்த ஸ்ருதி கட்டிலில் ஷெட்டி அருகே படுத்து கொள்ள,ஷெட்டி தலையணை மட்டும் எடுத்து கொண்டு ஹாலுக்கு செல்ல முயன்றான்.

இப்ப எங்க போறீங்க?

நான் ஹாலுக்கு போறேன்.

ஏன் இங்கேயே படுக்கலாமே?

இல்ல நான் கொஞ்சம் டிவி பார்க்கணும்!

ஏன் ரூமில் இருக்கிற டிவியில் பார்த்தால் தெரியாதா?

1 Comment

Comments are closed.