ஸ்ருதி Part 13 25

நான் விடமாட்டேன் ஸ்ருதி,கண்டிப்பாக இந்த போட்டியில் வெற்றி பெற்று உன்னை என்னுடன் தான் கூட்டி செல்ல போகிறேன்.

All the best மது.

ம்ம் வாங்க வாங்க சீக்கிரம் ஸ்டேஜ் வாங்க மாஸ்டர் கூவினார்.

மாஸ்டர் இருவரையும் பார்த்து,அவ்வளவு தான் warm up எல்லாம்.இதற்கு மேல் மெயின் ஆட்டம் தான்.இதில் ஓய்வு எல்லாம் கிடையாது.Non stop மட்டுமே.இதில் ஆட முடியாமல் கடைசியில் யார் கீழே விழுகிறாறோ ,அவர் தான் தோல்வி அடைந்தவர். ஓகே ரெடி ஸ்டார்ட் என்று அறிவிப்பு மாஸ்டரிடம் இருந்து வந்தது.

அடுத்த பாடல் முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா பாடல் வர,
இருவரும் அந்த பாடலின் ராகம் மற்றும் உருப்படிகளுக்கு ஏற்ப ஆடினர்.அதில் இந்த பாடல் வரிகளில்
மச்சமாக நீரில் தோன்றி மறைகள் தன்னை காத்தாய்,
கூர்மமாக மண்ணில் தோன்றி பூமி தன்னை மீட்டாய்,
வாமனன் போல் தோற்றம் கொண்டு வான் அளந்து நின்றாய்,
நரன் கலந்த சிம்மமாகி இரணியனை கொன்றாய்,
இராவணன் தன் தலையை கொய்ய ராமனாக வந்தாய்,
கண்ணனாக நீயே வந்து காதலும் தந்தாய்,
இந்த பாடலில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களை தத்ரூபமாக வெளிப்படுத்தி ஆடினர்.

அடுத்து jeans படத்தில் இருந்து பாட்டு வர,

தக்ர தக்ர தக்ரதிம்
தக்ர தக்ர தக்ரதிம்
தக்ர தக்ர தக்ரதிம் தகஜம்
தக்ர தக்ர தக்ரதிம்
தக்ர தக்ர தக்ரதிம்
தக்ர தக்ர தக்ரதிம் தகஜம்
என்ற இசைக்கு திரையில் ஐஸ்வர்யா ராய் ஆடிய மின்னல் ஆட்டத்தை இருவரும் கண்முன்னே கொண்டு வந்தனர்.

கண்ணோடு காண்பதெல்லாம் ஸ்ருதி, கண்களுக்கு சொந்தமில்லை என்று மது பாவனையில் கூற

கண்ணோடு மணி ஆனாய் அதனால் கண்ணை விட்டு பிரிவது இல்லை,நீ என்னை விட்டு பிரிவது இல்லை என்று பதில் பாவனையில் ஸ்ருதி கூறினாள்.

சலசல சலசல ரெட்டைகிளவி ,தகதக தகதக ரெட்டைகிளவி,
உண்டல்லோ தமிழில் உண்டல்லோ,
பிரித்து வைத்தல் நியாயம் இல்லை,பிரித்து பார்த்தால் பொருளும் இல்லை,ரெண்டல்லோ,ரெண்டும் ஒன்றல்லோ
என்ற பாடல் வரிகளில் இருவர் சேர்ந்து ஆடியது ,இருவரையும் பிரித்து பார்க்கவே முடியவில்லை. அச்சு அசல் இருவரும் ஒன்று போல் ஆடி ,இருவரும் ஒருவர் தானா என்று நினைக்க வைத்தது.

உடனே படையப்பா படத்தில் இருந்து மின்சார பூவே பாடல் வந்தது.முந்தைய பாட்டுக்கு ஒன்றாக ஆடிய இருவர்,இப்பொழுது தனி தனி சரணங்களுக்கு ஆட தொடங்கினர்.
அதில் ஆணவமுள்ள பெண்ணாக மதுவும்,பதிலுக்கு ஆணாக ஸ்ருதியும் ஆடினர்.

ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன்,
என் பாதத்தில் பள்ளி கொள்ள உனக்கொரு அனுமதி தந்தேன்,
என் ஆடை தாங்கி கொள்ள,
என் கூந்தல் ஏந்தி கொள்ள,
உனக்கொரு வாய்ப்பு அல்லவா,
நான் உண்ட மிச்ச பாலை நீ உண்டு வாழ்ந்து வந்தால்,மோட்சங்கள் உனக்கல்லவா,
என்ற வரிகளில் நடனத்தில் ஒருவகையான திமிரை கொண்டு வந்து புது பரிமாணம் கொடுக்க, உடனே ஸ்ருதி பதிலுக்கு

வெண்ணிலவை தட்டி தட்டி செய்து வைத்த சிற்பம் ஒன்று கண்டேன்,
அதன் விழிகளில் வழிவது அமுதல்ல விஷம் என்று கண்டேன்,
வாள்விழியால் வலை விரித்தாய்,
வஞ்சனை வெல்லாது
வலைகளிலே மீன் சிக்கலாம்,
தண்ணீர் என்றும் சிக்காது,
வா என்றால் நாள் வருதில்லை,
போ என்றால் நான் மறைவதில்லை,
இது நீ நான் என்ற போட்டி அல்ல,
நீ ஆணையிட்டு சூடிக்கொள்ள ஆண்கள் யாரும் பூக்கள் அல்ல

என்று பதில் நடனத்தில் புது அத்தியாயத்தை படைத்தாள் ஸ்ருதி.

வா வாரே வா ,இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்ற ரீதியில் நாட்டியம் ஆட, யார் வெற்றி பெறுவது என்றே தெரியாமல் போய் கொண்டு இருந்தது.

அடுத்து ஒரு அட்டகாச பாடல் வந்தது .
படம் : வருஷம் 16
பாடல்: கங்கை கரை மன்னனடி,

கங்கை கரை மன்னனடி,கண்ணன் மலர் கண்ணனடி
வங்கக்கடல் வண்ணனடி உள்ளம் கவர்
கள்வனடி
நெஞ்சில் எழும் அலைகளிலே நீச்சல் இடும் இளைஞனடி
வஞ்சிக் கொடி மடியினிலே மஞ்சம் இடும் தலைவனடி

1 Comment

Comments are closed.