அவன் போறதா இருந்தால் தனியாக போகட்டும்,நீ என்கூட நாலு நாள் இருந்து விட்டு போ.
மது என்ற சொல்ல வந்த ஸ்ருதியை கை அமர்த்திய ஷெட்டி,மது உன் வீட்டுக்கு வரணும் அவ்வளவு தானே! நாளைக்கு ஸ்ருதி கிளாஸ் ஸ்டார்ட் ஆகுது..Night 8 மணிக்கு தான் flight.உங்க வீட்டுக்கு வந்து போற அளவுக்கு நிறைய நேரம் இருக்கு.நீ இங்க இருந்து டிஸ்சார்ஜ் பண்ணி ஸ்ருதியை வீட்டுக்கு கூட்டிட்டு போ.நான் ஓட்டல் போய் check out பண்ணிவிட்டு நேராக வீட்டுக்கு வரேன்.அங்கு இருந்து Direct ஆக airport போய் விடலாம்.
That sounds great,உன் புருஷனே உத்தரவு கொடுத்து ஆச்சு.இல்லை இதற்கும் உனக்கு ஏதாவது objection இருக்கா ஸ்ருதி.
இல்லை என்று ஸ்ருதி சிரித்துக் கொண்டே தலையாட்ட
ஸ்ருதி முதல்முறை மது வீட்டுக்குள் செல்ல,அதன் பிரமாண்டத்தை பார்த்து ஆச்சரியமாய் பார்த்தாள்.
என்ன ஸ்ருதி அப்படியே ஆச்சரியமாய் பார்க்கிற,
மது,உன் வீடு ரொம்ப அழகாக பெருசா இருக்கு,
ஏன் ஸ்ருதி ,அவன் வீடு கூட தான் நல்லா பெருசா ஆடம்பரமாக இருக்குமே,
ஆமா மது, ஆனா உன் வீட்டை compare பண்ணும் போது கொஞ்சம் கம்மி தான்.அதுவும் இல்லாம உன் வீடு கலைநயமாக அழகா இருக்கு. அவன் வீட்டில் வெறும் ஆடம்பரம் மட்டும் தான் இருக்கும்.ஆனால் உன் வீட்டில் மாமல்லபுர சிற்பங்கள்,கோவில் கோபுரங்கள் எல்லாம் சுவற்றில் வரைந்து இருப்பது எல்லாம் சூப்பராக இருக்கு.அதுவும் வீட்டுக்கு அடித்த paintings மற்றும் இந்த granites எல்லாம் பக்கா matching ஆ இருக்கு.எல்லாம் உன் கைவண்ணம் தான் நினைக்கிறேன்.
ஆமா,எல்லாம் என்னோட செலக்சன் ஸ்ருதி.
மது ,இது ஶ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் தானே!
ஆமா.மது உள்ளே பார்த்து லக்ஷ்மி அம்மா என்று அழைக்க,
அங்கு இருந்து ஒரு வயதான அம்மா வர,நீங்க போய் விஷ்ணு கூடவே விஷாலையும் கூட்டிட்டு வாங்க.அப்படியே கிச்சனில் ராமு இருப்பான்,அவனை ரெண்டு மாதுளை ஜூஸ் எடுத்துட்டு வர சொல்லுங்க சீக்கிரம்..
சரிங்க அம்மா ,
லக்ஷ்மி அம்மா கையில் ஒரு குழந்தையும்,இடுப்பில் ஒரு குழந்தையும் வைத்து கொண்டு வர ,விஷ்ணு மட்டும் அம்மாவை பார்த்த உடன் ஓடி வந்து மதுவை கட்டி கொண்டது.
விஷ்ணுவை மதுவின் கையில் இருந்து வாங்கி கொண்ட ஸ்ருதி, அவன் கன்னத்தில் முத்தம் இட்டு மடியில் அமர்த்தி கொண்டாள்.
ஆச்சரியமாக இருக்கு ஸ்ருதி,என்கிட்டயேயும் லக்ஷ்மி அம்மா கிட்ட மட்டும் தான் இவன் ஒட்டுவான்.உன்கிட்ட அமைதியாக இருக்கான். ஆமா ஏன் அவனை அப்படி உத்து பார்க்கிற.
மது,விஷ்ணுவையும் ,அனிதா குழந்தை மதனையும் ஒண்ணா வைச்சு பார்த்தால் ரெண்டு பேரும் அப்படியே ரெட்டை பிறவி போல் இருப்பாங்க.ஸ்ருதி சொல்ல
அப்படியா,அனிதாவின் குழந்தையை ஆறு மாத குழந்தையாக இருந்தப்ப பார்த்தது.அப்புறம் அவளும் வீடியோ காலில் வருவாளே ஒழிய,குழந்தையை காண்பித்தது இல்ல.நானும் என் குழந்தையை அவளுக்கு காண்பித்தது இல்லை.இந்த விசயத்தில் மட்டும் எங்களுக்குள்ள ஒரு சின்ன ஈகோ
மது அவனும் நானும் சேர்ந்து விட்டால் எனக்கும் இதே போல தான் முக ஜாடையோடு குழந்தை பிறக்குமா?..
மது ஒரு நிமிடம் இதை கேட்டு அதிர்ச்சி அடைந்தாளும் உடனே சுதாரித்து,இங்க பாரு ஸ்ருதி என் நிலைமையும்,அனிதா நிலைமையும் வேற.எனக்கு என் ஃபேமிலி பேக்கிரவுண்ட் இருக்கு.அனிதா already டாக்டர்.ஆனால் உன் நிலைமை அப்படி இல்ல.உன் கனவு IAS ஆவது,அதில் மட்டும் உன் கவனம் இருக்கட்டும்.
ஏன் மது,குழந்தை உருவானால் என்ன?சூரியவம்சத்தில் வருகிற மாதிரி குழந்தை பெற்று கொண்டு IAS ஆகி விட்டால் ஆச்சு என்று ஸ்ருதி சிரிக்க,
சினிமா வேற,நிஜம் வேற இப்போ இந்த பேச்சை விடு ஸ்ருதி, ஜுஸ் எடுத்துக்கோ.அப்பப்ப மாதுளை ஜுஸ் சாப்பிடு உனக்கு இரத்தம் நல்லா ஊறும்.
சரி மது,ஆனால் விஷ்ணு செய்யும் சேட்டைகளை பார்த்து ஸ்ருதி மனதை பறிகொடுத்து இருந்தாள்.மேலும் ஊருக்கு சென்று குழந்தை மதனிடம் நிறைய நேரம் செலவிட வேண்டும் என்ற ஆசையும் பற்றி கொண்டது.
மது கவலையுடன் மனதில் ஐயோ,ஏன் இப்படி எதிர்காலத்தை பற்றி பயமே இல்லாமல் இருக்கிறாள்? நான் என் புருஷனை பிரிந்து வந்ததற்கே என்னையே நாலு பேர் நாலு விதமாக முகத்திற்கு நேராக இல்லாவிட்டாலும் பின்னே பேசுகிறார்கள்.ஆனால் ஒருவேளை இவள் கர்ப்பமாகி விட்டால் இவளை சும்மா விடுமா இந்த சமூகம்,கடித்து குதறி எடுத்து விடுவார்களே!மயக்கத்தில் இருக்கும் இவளிடம் என்ன சொன்னாலும் வேஸ்ட் தான்.ஷெட்டியிடம் நான் முன்பே சொன்னதை செயல்படுத்துவது தான் ஒரே வழி என்று எண்ணி கொண்டாள்.

Waste