ஸ்ருதி Part 13 25

என்ற பாடலுக்கு ஆடிய ஆட்டத்தில் இருவருமே வசியம்(mesmerize) செய்தார்கள்.உண்மையில் அங்கு இருந்த உயிர்அற்ற பொருட்களான மேசை,நாற்காலிகள் கூட இவர்கள் நடனத்திற்கு சேர்ந்து ஆடின.சூரியன் ஜன்னல் வழியே தான் மறைவதை ஒத்தி வைத்து இவர்கள் நடனத்தை இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தான்.ஒடும் மேகங்கள் நின்று கை தட்டின.வீசும் காற்று ஒரு கணம் மறந்து வீச மறந்து இவர்கள் ஆட்டத்தையே பார்த்து கொண்டு இருந்தது.

வெள்ளத்தைப் பிரிந்த மீனைப் போல்
துடித்து காண்பித்தார்கள்.இருவரது தாமரை பாதங்கள் நடனம் பயில,அதில் அவர்கள் கூந்தல் கடல் அலைபோல் நெளிந்தது.இறைவனும், பெண்களின் இடையும் காண முடியாது என்பார்கள்.அது நூறு சதவீதம் உண்மை தான்.இவர்கள் வளைந்து, நெளிந்து,ஒடிந்து ஆடிய நடனத்தில் இவர்களுக்கு இடையே இல்லை என்று தான் தோன்றியது.காற்சதங்கை பாடியது.அங்கங்கள் ஆலிலை போல் நடனம் புரிந்தது.நாட்டியத்தின் இறைவன் சிவன் இவர்கள் நடனத்தை பார்த்து இருந்தால் அவரே இதை கண்டு மகிழ்ச்சியில் ஒரு ஆனந்த நடனமே ஆடி இருப்பார்.மணிக்கணக்கில் இருவரும் விட்டு கொடுக்காமல் ஆடிக்கொண்டே இருந்தனர்.ஒருவேளை இந்த பூமி இங்கு சுற்றும் வரை தொடர்ந்து ஆடுவார்களோ !நிலவும் உதயமாகி இவர்கள் ஆட்டத்தை பார்த்து தன் குளிர்கதிர்களால் சாமரம் வீசினான்.ஆனால் ஆதவனோ மறைய அடம்பிடித்து கொண்டு இருந்தான்.

அடுத்த பாடலுக்கு இரண்டு அழகு மலர்களும்,அபிநயங்கள் கூட ஆடின.
அழகு மலர் ஆட , அபிநயங்கள் கூட சிலம்பொலியும் புலம்புவது ஏன்?

தத்தித்தரிகிடதோம் தத்தித்தரிகிட தா
தத்தித்தரிகிடதோம் தரிகிட தரிகிடதோ
தத்தித்தரிகிடதோம் தத்தித்தரிகிடதோம்
தத்தித்தரிகிடதோம் தரிகிட தரிகிடதா
தகதகிட தகதகிட
தகதகிட தரிகிட தரிகிடதோம்
தகதகிட தகதகிட
தகதகிட தரிகிட தரிகிடதோம்
தகதகிட தகதகிட
தகதகிட தரிகிட தரிகிடதோம்.

என்று பாடல் முடியும் போது இருவரும் பூமியில் அழுத்தமாக முன்னங்காலை எடுத்து வைக்க ,ஸ்ருதி கால் வைத்த இடத்தில்,இரண்டு பலகையின் இணைப்பிற்காக குத்தி வைத்து இருந்த ஆணி வெளியே நீட்டி கொண்டு இருந்தது.அது அவள் தாமரை பாதத்தையும் கிழித்தது.கிழிந்த பாதத்தில் இருந்து இரத்தம் வழிய தொடங்கியது.அதை பொருட்ப்படுத்தாமல் ஸ்ருதி அடுத்த பாட்டுக்கு தொடர்ந்து ஆட தொடங்கினாள்.

ரா ரா சரசுக்கு ரா ரா என்ற சந்திரமுகி பாடல் வர,வலியை பொறுத்துக் கொண்டு ஸ்ருதி ஆடினாள். ஆனால் ஆட ஆட அவள் பாதங்களில் இருந்து மேலும் இரத்தம் கசிவது அதிகமாகியது.நீர்சத்தும் ஏற்கனவே பல மடங்கு வெளியேறி இருந்ததால் சோர்வடைந்து அவள் உடல் ஒத்துழைக்க மறுத்தது.

பாடல் முடியும் தருவாயில்
தலாங்கு தக்க ஜும் ததீம்த நக ஜும் என்ற ஜதி வரும் பொழுது ஸ்ருதிக்கு முற்றிலும் சக்தி வெளியேறி கண்ணை இருட்டி கொண்டு வந்தது.அதே நேரம்
மதுவின் கால்களில் ஏதோ பிசுபிசுப்பாய் ஒட்ட கீழே குனிந்து பார்த்தாள்.ஒருகணம் இரத்தத்தை பார்த்த மது ,அது ஸ்ருதி பாதங்களில் இருந்து வெளிவருவதை பார்த்து நடனத்தை நிப்பாட்டி ஸ்ருதியை நோக்கி ஓடிவந்தாள்.இதில் மது தோல்வியை மனமுவந்து ஏற்று கொண்டு ஸ்ருதிக்கு வெற்றியை பரிசளித்தாள்.மது நடனத்தை நிப்பாட்டியதை பார்த்த ஸ்ருதி இதழில் புன்னகையுடன் ஆடிக்கொண்டே மயங்கி சரிய,மது ஓடிவந்து தாங்கி பிடிக்கவும் சரியாக இருந்தது.தன் மடியில் ஸ்ருதியின் தலையை வைத்து கண்ணை திற ஸ்ருதி,கண்ணை திற ஸ்ருதி என்று மது அழுதாள்.

ஏய் மது ,அவளுக்கு என்ன ஆச்சுடி என் கைகட்டை கொஞ்சம் அவுத்து விடு.ஷெட்டி கட்டை அவுக்க முடியாமல் போராடி கொண்டு இருந்தான்.

டான்ஸ் மாஸ்டர் அதற்குள் நீரை எடுத்து வந்து கொடுக்க,மது ஸ்ருதியின் முகத்தில் நீரை தெளித்தாள்.ஸ்ருதி மயக்கத்தில் இருந்து நினைவுக்கு வர,தண்ணிரை குடிக்க கொடுத்து ,தன் சேலையின் ஒரு பகுதியை கிழித்த மது,அவள் காலுக்கு கட்டு போட்டாள்.

“போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்று அவ்வளவு வெறியாடி உனக்கு?உன்னை …”மது கோபப்பட”சரி உன்கிட்ட இப்போ கோபம் கூட பட முடியல,வா நாம உடனே ஹாஸ்பிடல் போகலாம்,”மது பரபரத்தாள்.

இல்ல பரவாயில்லை மது,சின்ன அடி தான்.சரி ஆகிடும் விடு,ஹாஸ்பிடல் எல்லாம் வேண்டாம்.நான் அவர் கூட இரவு ஊருக்கு வேற கிளம்பனும்.

இது சின்ன அடியா? எவ்வளவு இரத்தம் கீழே போய் இருக்கு,ஊருக்கெல்லாம் இன்னிக்கு போக முடியாது.போறதா இருந்தால் அவன் மட்டும் தனியாக போகட்டும்.நீ மெதுவா எந்திரி.ஸ்ருதி,மதுவின் தோளை பற்றி கொண்டு மெதுவாக நடக்க

ஏய் மது,பிளீஸ் என் கட்டை அவுத்து விடுடி,நான் அவளை தூக்கிட்டு வரேன்.ஷெட்டி கத்தினான்.

முடியாதுடா.உன்னால தான் இவ்வளவு பிரச்சினையும். நான் ஹாஸ்பிடல் போய் திரும்பி வரும் வரை நீ இங்கேயே கிடந்து சாவு மது பதிலுக்கு கத்தினாள்.

ஷெட்டி வெறியோடு பிடித்து இழுக்க ஒரு கைகட்டு அவிழ்ந்தது.ஒரு கை விடுபட்டவுடன்,இன்னொரு கை மற்றும் கால் கட்டையும் அவிழ்த்து கொண்டு ஓடி வந்து ஸ்ருதியை மலர் போல் கையில் அள்ளி கொண்டு காரை நோக்கி ஓடினான்.

இவளுக்கு ஏதாவது ஒன்னு நடந்தால்,நான் பார்த்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டேன் மது,அவ்வளவு சீக்கிரம் யாருக்காகவும் இவளை விட்டு கொடுக்கவும் மாட்டேன் என்று காரை வேகமாக செலுத்தினான்.

ஸ்ருதியை தூக்கி கொண்டு மதுவின் மருத்துவமனைக்கே செல்ல,
டாக்டர் செக் பண்ணி விட்டு,இரத்தம் கொஞ்சம் நிறைய தான் வெளியே போய் இருக்கு.அதனால் pulse வேற கம்மியாக இருக்கு.நான் குளுகோஸ் ஏத்தறேன்.வலிக்கு pain killer injection போட்டு இருக்கேன்.ராத்திரி கண்டிப்பாக observation இல் இருக்கணும்.ஒரு வேளை pulse ரொம்ப கம்மி ஆச்சு என்றால் இரத்தம் ஏத்துகிற மாதிரி இருக்கும் என்று டாக்டர் கூறினார்.

ம்,ஓகே டாக்டர்,நான் இன்னக்கி இவ கூட stay பண்றேன்.என்று மது சொல்லிவிட்டு ஸ்ருதியை பார்த்து,”அடிக்கள்ளி விடாப்பிடியாய் நின்னு நாட்டியத்தில் என்னை ஜெயிச்சிட்ட.”

ஏன் மது உன் கூட நாட்டியம் ஆடியது உன்னை தோற்கடிக்கவா,இல்லவே இல்ல மது ,என் கடமையை நிறைவேற்ற தான் ஆடினேன்.அதுவும் இல்லாம நீ தோற்கவே இல்லை.என் இரத்தத்தை பார்த்து நீ வெற்றியை விட்டு கொடுத்த அவ்வளவு தான்.இல்லையென்றால் இந்நேரம் நீ தான் கண்டிப்பாக வெற்றி பெற்று இருப்ப,

அப்படி பார்த்தால் ஸ்ருதி, உனக்கு ஆணி குத்தாமல் இருந்திருந்தால் நீ தான் தொடர்ந்து ஆடி வெற்றி பெற்று இருப்ப,பதிலுக்கு மது கூறினாள்.

1 Comment

Comments are closed.