ஸ்ருதி Part 11 75

அழாதே சாரு ,அப்பாக்கு ஒன்னும் ஆகாது .அக்கா நான் இருக்கேன் இல்ல. பணம் எவ்வளவு கட்டணும் என்று சொல்றாங்க

தெரியலக்கா ,அம்மாவுக்கு தான் தெரியும்.அம்மா உங்களை தொந்தரவு பண்ண கூடாது என்று சொன்னார்கள்.இப்போ கூட அம்மாக்கு தெரியாமல் தான் நான் ஃபோன் செய்யறேன்.

நீ அம்மாகிட்ட போய் ஃபோன் கொடு .

இதோ ஒரு நிமிஷக்கா ,

ஸ்ருதி பெரியம்மா லைனில் வர ,

ஸ்ருதிகுட்டி நீ நல்லா இருக்கியாடா

ஸ்ருதி கோபமாக ,ஏன் பெரியம்மா உங்களுக்கு ஒன்று என்றால் நான் செய்ய மாட்டேனா ?

இல்லை குட்டி,நீயே இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு இப்போ தான் உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைச்சு இருக்கு.உதவி பண்ணுபவரிடம் போய் மேலும் மேலும் உதவி கேட்டால் அப்புறம் தப்பாக நினைத்து கொண்டு உன்னையும் விரட்டி விட்டால் என்ன செய்வது ?.

இல்ல பெரியம்மா ,அவர் நான் கேட்டால் எந்த உதவி வேண்டுமானால் செய்வார்.

இல்ல குட்டி அவரை பொறுத்தவரை நாம் மூன்றாம் நபர் தான் .உனக்கு அவர் உதவி செய்வதே பெரிய விசயம்.

இல்லை அவர் எனக்கு மூன்றாம் நபர் அல்ல என்னை தொட்டு தாலி கட்டிய புருஷன் பெரியம்மா என்று தொண்டை வரை வந்த வார்த்தையை விழுங்கினாள்.இல்லை இப்பொழுது எனக்கு கல்யாணம் நடந்த விசயம் என் பெரியம்மாவிற்கு தெரிய வேண்டாம்.அனிதா வந்து ஏற்று கொள்ளும் வரை பெரியம்மாவிற்கு இந்த விசயம் தெரிய வேண்டாம்.ஒரு வேளை அனிதா ஏற்றுகொள்ளா விட்டால் தன் பெண்ணோட வாழ்க்கை வீணாய் போய் விட்டதே என்று அந்த அன்னையின் மனம் மிகவும் துன்பப்படும்.

பெரியம்மா ,நான் வேலைக்கு போய் அதை சம்பாதித்து திருப்பி கொடுத்து விடலாம்.நீங்க எவ்வளவு பணம் கட்டணும் ,எந்த ஹாஸ்பிடல் என்று மட்டும் சொல்லுங்க

தலையில் அடிபட்டு இருப்பதால் இன்று இரவே opertion பண்ண வேண்டும் என்று சொல்றாங்க குட்டி,ஆபரேஷன் பண்ண வேண்டும் என்றால் 5,00,000 பணம் கட்ட வேண்டும் என்று சொல்றாங்க.

ஹாஸ்பிடல் பேரு ?

மது பல்நோக்கு மருத்துவமனை. என்று பெரியம்மா கூறினார்.

மது பல்நோக்கு மருத்துவமனை யாருடையது,அங்கே யார் வேலை பார்த்தார்கள் என்று இந்த கதையை தொடர்ந்து வாசிக்கும் வாசகர்களுக்கு தெரியும்.

என்னங்க , என்று ஸ்ருதி பேச

அதற்குள் ஷெட்டி வேட்டி கட்டி கொண்டு இருந்தான்.அவளை கையமர்த்திய ஷெட்டி “எனக்கு எல்லாம் புரிந்தது எவ்வளவு பணம் கட்டணும் ”

5,00,000 ரூபா கட்டணும் ,நீங்க என்கிட்ட ஏற்கனவே போட்டு இருக்கிற காண்ட்ராக்ட்டிற்கு தருவதாக சொன்ன பணத்தை இப்போ கொடுத்தால் போதும்.

வாயை மூடு ஸ்ருதி ,i am your husband now.உனக்கு வருகிற நல்லதோ கெட்டதோ அது என்னையும் சேரும்.காண்ட்ராக்ட் போடும் போது நான் உன் கழுத்தில் தாலி கட்டவில்லை ,அது கூட உன் நன்மைக்காக மட்டும் தான்.நீ ஹாஸ்பிடல் அக்கவுண்ட் details மட்டும் வாங்கி கொடு .மற்றதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்.

ஸ்ருதி போன் செய்து details வாங்கி கொடுக்க

ஐந்தே நிமிடங்களில் ஷெட்டி தனது லேப்டாப்பை எடுத்து நெட்பேங்கிங் மூலம் பணம் transfer செய்தான்.

ஸ்ருதி பணம் transfer செய்ததிற்கான e recepit அனுப்பினாள்.

ஸ்ருதி கண்களில் நன்றியோடு வந்து ,”இப்போ என்கிட்ட என்ன வேண்டுமோ அதை எல்லாம் எடுத்துக்கடா ” போர்வையை விலக்க முற்பட்டவளை தடுத்து

இப்போ வேண்டாம் ஸ்ருதி,வெறும் உடல் மட்டும் இணைவது போல் நாம் இணைய வேண்டாம்.இப்போ உன் மனசு வேதனையில் இருக்கும்.முழு ஈடுபாட்டுடன் உன்னால் sex செய்ய முடியாது.உன் மனசு சந்தோசமாக இருக்கும் போது நாம் இணையலாம்.நாம் நாளை சென்னை போறோம்.போய் உன் பெரியப்பா நல்லா இருப்பதை பார்த்து விட்டு பிறகு நம் ஊருக்கு போய் கச்சேரியை அங்கு வைத்து கொள்ளலாம் என்று கண்சிமிட்டி சொல்ல

ஸ்ருதி வெட்கத்தொடு சரி என்று தலையாட்ட ,” நாளைக்கு நாம சென்னை போகும் முன் இங்கே போகும் வழியில் அன்னை பார்வதிதேவி தவம் செய்த கோவில் மணிகரன் என்ற இடத்தில் இருக்கு.அங்கே போய் பெரியப்பா நல்லா ஆக வேண்டும் என்று வேண்டி கொண்டு போகலாம்.

“மகாராணி உத்தரவு எப்படியோ அப்படியே ஆகட்டும் “என்று இரு கையை கீழே இறக்கி தோளை குலுக்கி ஷெட்டி சொல்ல

வெட்கத்தில் சிரித்த ஸ்ருதி அவன் கன்னத்தில் முத்தம் இட்டு தன் மெத்தையை நோக்கி நடந்தாள்.

ஸ்ருதி உன்னோட ட்ரெஸ் எல்லாம் உன் மெத்தைக்கு கீழேயே இருக்கு ,

எல்லாம் தெரியும் போடா களவாணி பயலே .நான் போய் எடுத்துக்கிறேன்.

அடிக்கள்ளி, எல்லாம் தெரிந்து கொண்டு என்னை அலைய வைக்கிற ,நீ மட்டும் களவாணி இல்லையா ஷெட்டி கிண்டலாக கூற

போடா போய் தூங்கு , காலையிலேயே சீக்கிரம் கிளம்பனும்

இருக்கட்டும் இருக்கட்டும் ஊருக்கு போய் கச்சேரியை வச்சுக்கிறேன்