நேரத்தை பார்த்த ஷெட்டி , ஐயோ ரொம்ப லேட் ஆகி விட்டதே ! ஸ்ருதி வேறு வந்து காத்து கொண்டு இருப்பாள். மனதிற்குள்ளே நினைத்து கொண்டு
சரி மது ,எனக்கு நேரம் ஆச்சு நான் கிளம்பறேன் .
டேய் இருடா ,இன்னும் கொஞ்ச நேரத்தில் குழந்தைகளை லக்ஷ்மி அம்மா எடுத்து வந்து விடுவார்கள் ?ஒரேயடியா குழந்தையை பார்த்து விட்டு போ.
இல்ல மது ,இதுவே ரொம்ப லேட் .நான் இன்னொரு நாளைக்கு வந்து பார்க்கிறேன்.see you
என்று அவசரம் அவசரமாக அவள் பதிலை எதிர்பார்க்காமல் வெளியே ஓடினான்.
கீழே சென்று ” டிரைவர் இன்னுமா madam வரல ”
சார் அவங்க வந்து ரொம்ப நேரமாக காத்து இருந்து இப்ப தான் மேலே போனாங்க ,உங்களுக்கு ஃபோன் பண்ணி நீங்க எடுக்கல .அப்புறம் நான்தான் ஒரு madam வந்து உங்களை கூட்டி கொண்டு போனாங்க என்று சொன்னேன்.சரியென்று அவங்க இந்த ஹாஸ்பிடல் MD ஆக இருக்கும் என்று உங்களை தேடி திரும்ப மேலே போய் இருக்காங்க .
என்னது மேலே போய் இருக்காங்களா ? குடி கெட்டது போ ,மொபைலை பார்க்க அது silent mode இல் இருந்தது.ஸ்ருதி இருமுறை அழைத்து இருந்தாள்.(இந்த போனுக்கு என்ன ஆச்சு என்றே தெரியவில்லையே நேற்று நான் கீழே வீசி எறிந்ததில் இருந்து அடிக்கடி ஏதோ கோளாறு கொடுக்கிறது )ஸ்ருதி மொபைலுக்கு திரும்ப அழைக்க அது NOT REACHABLE என்று வந்தது.
உடனே ஸ்ருதியை தேடி மேலே ஓடினான்.அவசரப்படாதே ஷெட்டி ,இவளுக்கு அவள் யார் என்று தெரியாது ,அவளுக்கு இவள் யார் என்று தெரியாது ?ரெண்டு பேர் சேர்ந்து உன்னை பார்த்தால் தான் ஆபத்து.
ஸ்ருதி மதுவின் அறையை தேடி சென்று பார்க்க ,அங்கு இருந்த assistant ” யார் நீங்க உங்களுக்கு என்ன வேணும் ?”
இல்ல என்னோட husband உங்க மேடமை பார்க்க வந்தார்கள் ?
ஆமாம் ஒருத்தரை மேடம் கூப்பிட்டு வந்தார்கள் ,ஆனால் அவர் கிளம்பிட்டாரு. மேடம் இப்போ தான் வெளியே போனார்கள் ?வெயிட் பண்றீங்களா ? மேடம் இப்போ வந்து விடுவாங்க
இல்லை வேண்டாம் என்று ஸ்ருதி திரும்பினாள்.
அந்த நீள வராந்தாவில் ஸ்ருதி,மது அறையில் இருந்து வெளிவந்து திரும்பி நடப்பதை கொஞ்ச தூரத்தில் இருந்து பார்த்த ஷெட்டி , ஸ்ருதி என்று அழைக்க வாயை திறக்க போகும் சமயம் மது அப்பொழுது சரியாக ஸ்ருதிக்கு நேர் எதிரே நடந்து வந்து கொண்டு இருப்பதை பார்த்து அமைதி ஆகி ,டக்கென்று மது பார்வையில் இருந்து தப்பிக்க பக்கத்தில் உள்ள வீல் சேரில் திரும்பி அமர்ந்து கொண்டான் .
ஸ்ருதிக்கு முன்னே மது நடந்து வந்து கொண்டு இருக்க ,சற்று தொலைவில் ஷெட்டி வீல் சேரில் அமர்ந்து கொண்டு இருந்தான்.ஒவ்வொரு நொடியும் திக் திக்கென்று இருந்தது ஷெட்டிக்கு.
ஸ்ருதி ,மது ஒருவரையொருவர் கடக்க போகும் சமயம் ,மது இவளை எங்கேயோ பார்த்து இருக்கிறாமோ என்று தலையை தட்டி யோசிக்க .
ஏய் ஸ்ருதி தானே நீ ? என்று மது கேட்டாள்.
ஆமா நீங்க யாரு ? என் பேர் எப்படி உனக்கு தெரியும் ? என்று ஸ்ருதி கேட்டாள்.
“உன்னை பற்றி எனக்கு நல்லா தெரியும். என்னிடம் இருந்ததை தட்டி பறித்தவள் தானே நீ” என்றாள் மது குரூரமாக
அவ்வளவு தான் ,இதை கேட்ட ஷெட்டிக்கு எது நடக்க கூடாது என்று நினைத்தோமோ அது நடந்தே விட்டது.ஒரு நிமிடம் உட்கார்ந்த இடத்திலேயே பூமியே நழுவியது.”உன் கதை முடியும் நேரமிது என்பதை சொல்லும் ராகம் இது “என்ற பாடல் ஏனோ நினைவில் வந்தது.
சிஸ்டர் நீங்க கேட்ட பல் புடுங்க வந்த patient வெளியே உட்கார்ந்து இருக்கார் பாருங்க. அட்டெண்டர் கூற
சரி உள்ளே கூட்டி கொண்டு வாங்க .
எந்திரித்து ஓடவும் முடியாமல் ,பேசவும் முடியாமல் ஷெட்டி அதிர்ச்சியில் மீள முடியாமல் இருக்க ,அட்டெண்டர் வீல் சேரை நகர்த்தி கொண்டு உள்ளே சென்றான்.
ஏன் சார் போய் பணம் கட்டி விட்டு வருவதற்கு இவ்வளவு நேரமா ? பேச விடமால் வாயில் கிளிப் போட்டார்கள்.லண்டன் படத்தில் வடிவேலுவுக்கு மருத்துவமனையில் போடுவது போல ஷெட்டி மாட்டி கொண்டான்.கைகளும் இரு பக்கமும் handcuff செய்யப்பட்டது.
இப்போது ஷெட்டியின் பல்லை பிடுங்க கருவியை கொண்டு சென்ற போது
ஆங்ங்ங்ங்ங்ங்ஙாஙா என்று கத்த மட்டுமே முடிந்தது.
