ஒரு பொட்டப்புள்ள இப்படியா மேல துணி இல்லாம படுப்ப – Part 2 22

அவன் ஊரிலிருந்து வந்து. . அரைமணிநேரம்தான் ஆகியிருந்தது.
பாக்யாவின் பெற்றோர்.. களத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
பாக்யாவுக்கு எதிரே… உட்கார்ந்திருந்த ராசு.. அன்னாந்து பார்த்தான். எதிர் திசையைப் பார்த்தான்.
”அப்படி தெரியல..” என்றான்.
”கருக்கலா இருக்கு…” என்றாள்.
” ஆனா மழ வர்ற மாதிரி தெரியல..”
” வந்தா.. நல்லாருக்கும் இல்ல.?”
மெலிதாகப் புன்னகைத்தான் ”ஆனா வரனுமே..?”
”பயங்கர உப்பசம்.. ராத்திரில.. தூங்கவே முடியறதில்ல..”

சிரித்தான் ”நீதான் தூக்கத்துல கும்பகர்ணியாச்சே..?”
அவளும் புன் சிரித்தாள் ”என்னாலயே தூங்க முடியறதிவ்லேன்னா பாத்துக்கோ..”
தலைவாரி.. ஜடை பின்னினாள்.

3

அவளையே பார்த்துக்கொண்டிருந்த ராசு கேட்டான்.
”உனக்கும். .ரவிக்கும் நடுல என்ன பிரச்சினை.?”

அவனைப் பாராமல் ” ப்ச்..” என உச் கொட்டினாள். அதைப் பற்றிப் பேச அவள் விரும்பவில்லை.

ராசு கேட்டான் ”அப்ப அவ்வளவுதானா..?”
தலையசைத்தாள் ” ம்..”
”ஏன்னு.. நான் தெரிஞ்சிக்கலாமா..?”

அவனைப் பார்த்தாள். முகம் இருகியது. மார்பகம் விம்மப் பெருமூச்செறிந்தாள்.
” புடிக்கலே..” என்றாள்.
” ஏன். .?”
பேசாமலே இருந்தாள்.
ஆனால் ராசு மறுபடி கேட்டான். ”என்ன பிரச்சினை?”

அந்தப் பேச்சை மாற்றவிரும்பினாள்.
” உங்கக்காக்கு எத்தனை மாசம் இப்ப. .?”
” நாலு..”என்றான்.
” ஏழாவது மாசம்தான வளைகாப்பு..?”
” ம்..! நீ ஏன் பாட்டி வீட்லருந்து வந்துட்ட..?” எனக் கேட்டான்.
அவனது கேள்விக்கு பதில் சொல்லாமல் ” என்ன கொழந்தை பொறக்கும் ராசு.? பையனா இருக்குமா… இல்ல புள்ளையா.. இருக்குமா..?”

கோபமடைந்து விட்டான்.”உம்.. வெங்காயமா இருக்கும்.” என்றான்.
‘ பக் ‘ கெனச் சிரித்து விட்டாள்.”சின்ன வெங்காயமா.. பெரிய வெங்காயமா..?”

அவளை முறைத்தான் ” பேச்ச மாத்தாத.. நா கேட்டதுக்கு பதில சொல்லு..”

சட்டென முகம் மாறினாள் ”இப்ப சொல்ல முடியாது. .”
” ஏன். .?”
அவனை முறைத்தாள்.

ராசு ”சரி.. எப்ப சொல்வ..?”
”சொல்லவே மாட்டேன்.” என்றாள்.
அவளை வெறித்துப் பார்த்தான்.
ஜடையின் முனையில்.. குஞ்சம் போட்டவாறு.. ஒரு பெருமூச்சுடன் சொன்னாள்.
”அது ஒரு கசப்பான அனுபவம்”
” கோமளா சொன்னா..”
” என்ன சொன்னா…?”
” எல்லாமே சொல்லிட்டா..”
” அப்பறம் எதுக்கு என்னைக்கேக்கற..?”
” ம்..ஒருத்தங்க செத்துப்போய்ட்டாங்கன்னு தெரிஞ்சாலும். .. நாம எழவு வீட்ல போய்.. துக்கம் விசாரிக்கறதில்ல..? அது மாதிரிதான். .”

பாக்யா முறைத்தாள்.
ராசு சிரித்தான்.
”உண்மை என்னன்னு நீ சொன்னாத்தான தெரியும். ”
”அதத் தெரிஞசு.. நீ என்ன பண்ணப்போற..?” என்றாள்.

அவளை ஆழமாகப் பார்த்தான். அதில் கோபம் தெரிந்தது.
அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தாள். பின்னல் முடித்த ஜடையைத் தூக்கி. . பின்னால் போட்டாள்.

” அப்ப கோமளா சொன்னது உண்மைதானா..?” எனக் கேட்டான் ராசு.
அவனைப் பார்த்தாள். அவளது உதடு.. லேசாக உலர்ந்தது.
”எ.. என்ன சொன்னா..?”
”கௌரி புருஷனும்.. நீயும்…சேந்து..” அவன் முடிக்கக்கூட இல்லை.
‘ சுர் ‘ ரென கோபம் வந்து விட்டது.
”ச்சீ.. வாய மூடு..” என்றாள்.
” என்னால ஜீரணிக்கவே முடியல..”
” அதப்பத்தி.. எதும் பேசாத..”
” அப்ப.. அவ சொன்னதெல்லாம்…”
” இதுக்கு மேல பேசினா… அப்பறம் நான் அழுதுருவேன்.” என உடைந்த குரலில் சொன்னாள் பாக்யா. ..!!!!

இரவு…!
வீட்டுக்குள் இடப்பற்றாக்குறை காரணமாக.. பாக்யாவின் பெற்றோர் பக்கத்தில் இருந்த.. காலி வீட்டில் போய் படுத்துக் கொண்டனர்.
பாக்யா.. அவள் தம்பி.. ராசு மூவர் மட்டும்தான் வீட்டினுள் படுத்தனர்.
தம்பி தூங்கிவிட்டான். ராசு தலைமாட்டில் விளக்கை வைத்து… ஏதோ ஒரு புத்தகம் படித்துக்கொண்டிருந்தான்.
பாக்யா மெதுவாக. ”ராசு ” என்றாள்.

அவளைப் பார்த்தான் ”ம்…?”
” கோமளா என்ன சொன்னா..?”
”ஒன்னும் சொல்லல..”
சிறிதுநேரம் அவனையே வெறித்தவள்.. சட்டென எழுந்து. . அவன் கையிலிருந்த புத்தகத்தை வெடுக்கெனப் புடுங்கினாள்.
ராசு முறைத்தான்.

”உன்கிட்ட நெறைய பேசனும்” என்றாள்.
எதுவும் பேசாமல் அவளையே பார்த்தான்.
புத்தகத்தை மூடிய பாக்யா. . சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்தாள்.
” நா ஒரு தப்பும் பண்ணல..?”
” அப்ப ஏன் நான் கேட்டப்ப.. அத்தனை கோபம் வந்துச்சு..?”
”தப்பா பேசினா கோபம் வராதா.?”
” நா எங்க தப்பா பேசினேன். .? கௌரி புருஷனும் நீயும் சேந்து…னுதான் சொன்னேன். அதுக்குள்ள கோபம் பொத்துகிட்டு வந்தாச்சு..”