அங்க என்ன உன் பொண்டாட்டியா உனக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கா பேசாம இங்கயே சாப்பிட்டு இங்கயே தூங்கிட்டு காலைல எந்திர்ச்சு போடா என்றாள் வள்ளி .அதுக்கு இல்ல இப்ப கொஞ்ச நாளா என் எரியலா திருட்டு இருக்குன்னு சொல்றாங்க நான் நேத்தும் போகல இன்னைக்கும் போகல அதுனால போயி வீடு செப்பா இருக்கான்னு பாக்கணும் என்றான் விக்கி ,
ஓகே போயிட்டு வா ஆனா அது என்ன புதுசா பிளவர்ஸ் எல்லாம் வாங்கி இருக்க ம்ம் அந்த கதைய அடுத்து பாக்கும் போது சொல்ற என்றாள் வள்ளி புத்திசாலி எங்கிட்டு போனாலும் எனக்கு செக் வச்சுருரா என்று விக்கி மனதில் நினைத்து கொண்டு .ம்ம் சரி வரேன் சண்ட போடாம இருங்க என்று சொல்லிவிட்டு போனான் .
போயி காரில் ஏறி உக்காந்து சுவாதி என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்னு கேப்போம் என்று செல்லை எடுத்தான் .அது பேட்டரி டெட் ஆகி இருந்துச்சு .
பாவம் என்ன செஞ்சுகிட்டு இருக்களோ என்று அவளை நினைத்து கொண்டு வண்டியை எடுத்துகொண்டு வேகமாக ஓட்டினான் அங்கு சுவாதி அஞ்சலியிடம் சொல்லி கொண்டு இருந்தாள் ஆமாக்கா நான் விக்கிய லவ் பண்றேன் ரொம்ப லவ் பண்றேன் .
ஒரு நாள் முன்பு விக்கி டேவிட் ஆக்கிசிடன்ட் ஆன பின்பு அவன் அங்கே ஆஸ்பத்திரியில் இருந்ததால் அவன் சுவாதியிடம் அஞ்சலியை வர சொல்லி விக்கி இருந்து கொள்ள சொன்னதால் சுவாதியும் அஞ்சலி அக்காவை போன் பண்ணி வர சொன்னாள் ,அஞ்சலியும் வந்தாள் ஹலோ மதர் எப்படி இருக்கீங்க உள்ள உங்க குட்டி மக்கி எப்படி இருக்கான் என்றாள் அஞ்சலி .
வாங்க அக்கா அது என்ன புதுசா மதர் நான் என்ன கல்யாணம் முடிக்காம கன்னியாஸ்திரியவா போயிட்டேன் என்றாள் ,அது இல்லடி நீதான் ஒரு குழந்தைக்கு தாய் ஆகிட்டாலே அந்த மதர் சொன்னேன் என்றாள் அஞ்சலி . அப்புறம் அது என்ன குட்டி மக்கி என கேட்டாள் .அதான் உன் வயித்துல வளருதே அதான் குட்டி மக்கி என்றாள் . அக்கா first of all அவங்க அப்பா பேரு மக்கீ இல்ல விக்கி விக்னேஷ் இத நான் உங்க கிட்ட பல தடவ சொல்லிட்டேன் என்றாள் சுவாதி .
ஒ சாரி டியர் ம்ம் பரவல அவன பிடிக்கிலன்னு சொல்லிட்டு எல்லா பொண்ணுக மாதிரியும் பேசுற ஒரு குடும்ப பொண்ண மாறிட்ட கிட்டத்தட்ட என்றாள் அஞ்சலி .நீங்க சொல்றது ஒன்னும் புரியல என்றாள் சுவாதி . புரியலையா அதாவது நார்மலா கல்யாணம் ஆன பொண்ணுக கல்யாணம் ஆன புதுசுல புருஷன் பேர சொல்ல கூச்சபட்டுகிட்டு அவரு இவருன்னு சொல்வாங்க .அப்புறம் குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் யார் ஆச்சு புருஷன பத்தி கேட்டா குழந்தையோட பேர சொல்லி அவ அப்பா
for example என்னைய எடுத்துக்கோ நானும் உங்க அண்ணன starting ல அவங்க அப்படின்னு சொன்னேன் . அப்புறம் முதல் குழந்தை ராம் பிறந்ததுக்கு அப்புறமா அவர எங்கன்னு யாருச்சு கேட்டா ராம் அப்பா கடைக்கு போயிருக்காரு ராம் அப்பா குளிக்கிறாரு அப்படிதான் சொல்வேன் நீயும் அதே மாதிரி சொல்ல ஆரம்பிச்சு நார்மல் பொண்ண மாறிட்டியே என்றாள் அஞ்சலி .ஏதோ சொல்றிங்க போங்க எனக்கு இன்னும் புரியல என்றாள் .
சரி என்ன இவன் அப்பா எங்க போனாரு என்று சுவாதி வயிற்ரை செல்லமாக தொட்டு கொண்டே கேட்டாள் .ம்ம் ஏதோ ஒரு மீட்டிங்காம் டெல்லி வரைக்கும் போயிருக்கான் நாளைக்கு தான் வருவானாம் என்றாள் ,ம்ம் என்ன உன்னையே எப்படி வச்சு இருக்கான் என்றாள் அஞ்சலி .ம்ம் அவன் என்ன என் புருசனா நல்லா வச்சு இருக்கிறதுக்கு அவன் ஒரு ரூம்ல இருக்கான் நான் ஒரு ரூம்ல இருக்கேன் .நாங்க ரெண்டு பேரும் ஜஸ்ட் ரூம் மேத்ஸ் அண்ட் ஜஸ்ட் பிரண்ட்ஸ் அவளவு தான் என்றாள் .
ஒ அப்படியா என்று அவள் கண்களை ஊடுருவது போல் ஒரு மாதிரியாக அஞ்சலி கேட்க சுவாதி ஆமாக்கா அதுக்கு ஏன் இப்படி பாக்குறிங்க என்றாள் சுவாதி .ஒன்னும் இல்ல உன் கண்ணுல ஏதோ ஒரு மாறுதல் அதாவது சந்தோசம் பயம் ரெண்டும் கலந்த மாதிரி இருக்கு அதான் அப்படி பாக்குறேன் என்றாள் அஞ்சலி .ஒ அதுவா ஒரு வேல நான் கர்ப்பமா இருக்கிறதால அப்படி தெரியும் போல என்றாள் .
ம்ம் நிஜமாதானா என்று மீண்டும் அஞ்சலி ஒரு மாதிரியாக கேட்க அதற்கும் மேல் அந்த விசாரணை பார்வை பொறுக்க முடியாமல் ஓகே alright என்னால இதுக்கும் மேலயும் உண்மைய மறைக்க முடியல .யார்கிட்டயாச்சும் இதுக்கும் மேல சொல்லாட்டி எனக்கு தலையே வெடிச்சுடும் போல இருக்கு என்றாள் சுவாதி .சரி சொல்லு என்றாள் அஞ்சலி .எனக்கு விக்கி மேல என்று சொல்ல முடியாமல் அஞ்சலியை கட்டி பிடித்து அழுக ஆரம்பித்தாள் .
இவ ஒருத்தி எதையாச்சும் சொல்றதுக்கு முன்னாடி சீரியல் கதாநாயகி மாதிரி அழுக ஆரம்பிச்சுடுவா என்று சொல்லி அஞ்சலி அவளை தட்டி எழுப்பி சொல்லுடி உனக்கு அவன் மேல என்ன என்றாள் .ஏதோ சொல்ல முடியாத பீலிங் வர வர அவன ஏதோ பிடிக்க ஆரம்பிச்சு இருக்கு அவனும் அதுக்கு ஏத்த மாதிரி ரொம்ப நல்லவானா மாறிகிட்டு வரான் என்றாள் .இது எப்ப இருந்து அவன பிடிக்க ஆரம்பிசுச்சு மேடத்துக்கு என்றாள் அஞ்சலி .
தெரியல அன்னைக்கு எனக்கு மாங்கா வாங்க மார்க்கெட் புல்லா அலைஞ்சப்ப அப்புறம் அன்னைக்கே மழை பெஞ்சப்ப எனக்காக ஓடி வந்து என்னைய கூப்பிட வந்தது அப்புறம் ஒரு நாள் முழுக்க கார்ல அவன் கூட இருந்தது .இதலாம் என்னைய அவன் பக்கம் இழுத்துருச்சு அக்கா .அண்ட் உங்களுக்கு தெரியுமா இப்பலாம என் பையனுக்கும் அவன பிடிச்சு போச்சு போலக்கா நான் விக்கிய பாக்குறப்ப எல்லாம் அப்படியே உள்ள பயங்கரமா ஏதோ ரொம்ப சந்தோசமா துள்ளி குதிக்கிற மாதிரி உதைக்கிறான் . இருக்காதடி அவங்க அப்பன பாக்கும் போது அவனுக்கு உள்ள சந்தோசம் வர தான் செய்யும் என்றாள் அஞ்சலி
அண்ட் எனக்கும் இப்பலாம் அவன பாக்கும் போதெலாம் என் இதயம் ரொம்ப பட படன்னு அடிக்குது ஆரம்பத்துல அவன் கூட ரூம்ல இருக்கும் போது ஏண்டா இவன் கூட எல்லாம் இருக்கோம்னு தோணும் .சில நேரங்கள அவன் என்னைய ரொம்ப திட்டும் போது அப்படியே எதாச்சும் கடல குதிச்சு செத்துர்லாம்னு தோணும் .ஆனா என் குழந்தைக்காக பொறுத்து கிட்டேன் . ஆனா இப்பலாம் அவன் என்னையே திட்டவே மாட்டிங்குறான் என்று சொல்லி சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு
Going nice, very good well done. Looking for next part
Please upload next post soon
Next part sekiram upload pannunga … Vera level story 🤯.. verithanama waiting for next part…
நண்பா என்ன ஆச்சு கதையை தொடருங்கள்
Continue this story. It is unique
Continue this story. It is unique
Continue