யாரையும் ஆபிஸ்ல பேசன்னு இல்ல நீ நிமிர்ந்து கூட பாக்க மாட்டிங்குற ஏன் நானே நானா உன் கேபினுக்கு வந்தாதான் பேசுற இல்லாட்டி பேச மாட்டிங்குற .
வருண் கிட்ட விசாரிச்சேன் அவன் கிட்டயும் பேசுறது இல்லையாம் அப்புறம் அவன் பார்ட்டிக்கு கூப்பிட்டா கூட போக மாட்டிங்கிரியாம் என்ன தான் ஆச்சு உனக்கு என்றான் .விக்கி ஒன்றும் சொல்லமால் அமைதியாக இருந்தான் .மச்சான் நீ நான் ஓட்ட வாய் ரகசியம் காக்க மாட்டேன்னு தான் சொல்ல மாட்டிங்குற என்றான் மணி .
அப்படி எல்லாம் இல்லடா என்றான் விக்கி .டேய் நான் ஓட்ட வாய் தான் ஆனா காக்க வேண்டிய ரகசியத்த காப்பேன் என்றான் மணி .விக்கி சின்னதாய் சிரித்தான் .
என்னடா கிண்டல் பண்ற மாதிரி சிரிக்கிற இப்ப டேவிட் கூடதான் ரகசியம் சொன்னான் நான் என்ன அத எல்லார்கிட்டயும் சொன்னேனா என்றான் மணி .
அப்படி என்னடா சொன்னான் என்றான் விக்கி .அது ஒன்னும் இல்ல மச்சான் டேவிட்டுக்கும் ரெஜினாவுக்கும் சரியா வரலையாம் இன்னும் சொல்ல போனா டேவிட்டால சுவாதிய இன்னும் மறக்க முடியலையாம் .சில நேரத்துல ரெஜினாவ டைவர்ஸ் பண்ணிட்டு சுவாதி கூட மறுபடியும் செந்துர்லாம்னு யோசிக்கிறனாம் என்றான் மணி .
என்னது என்று விக்கி ஒரு சின்ன அதிர்ச்சியோடு கேட்க ஐயோ உளறிட்டனா உளறிட்டனா என்று மணி தன்னை தானே சொல்லி கொண்டான் .
ஆமா மச்சான் நீங்க சொல்ற மாதிரி என்னால ரகசியத்த காப்பாத்த முடியாதுடா என்றான் மணி .அது எல்லாருக்கும் தெரியும் சரி அத விடு டேவிட் என்ன நிஜமாவே நீ சொன்ன மாதிரி எல்லாம் சொன்னனா என்று விக்கி கேட்டான் .அட ஆமாடா ரொம்ப வருத்தத்தோட சொன்னான் .
அப்ப நீ சொன்ன மாதிரி அவங்களுக்குள்ள எதுவும் affair இருக்காடா என்று எதுவுமே தெரியாதது போல கேட்டான் .ம்ம் அத நானே அவன் கிட்ட கேட்டேன் என்னடா எதுவும் அவ கூட affair ல இருக்கியா அப்படின்னு என்றான் மணி .
ம்ம் என்ன சொன்னான் அவன் .இல்லடா அவள பாத்தே கிட்டத்தட்ட 5 மாசம் ஆகுதுன்னு சொல்றான் என்றான் மணி .அப்ப அந்த கார்ல அவ ஆபிஸ்க்கு போனது என கேட்டான் விக்கி .
சத்தியாமா நான் அவ ஆபிஸ் பக்கம் இப்பக்குள்ள போகவே இல்ல .ஆனா அவ ஹாஸ்டலுக்கு போனேன் அங்க விசாரிச்சப்ப அவ 4 மாசத்துக்கு முன்னாடியே தமிழ் நாடு போயிருக்காத சொன்னங்கன்னு சொல்றான் என்றான் மணி .சரி வாடா நமக்கென்ன எவன் எவள வச்சுட்டு போன வா போலாம் என்றான் விக்கி .
என்னடா இப்படி சொல்ற அவன் உன் பிரண்டு அவன் வழி தவறி போனா அவன காப்பாத்த மாட்டாயே என்றான் மணி .நானே வழி தவறி போயித்தான் இருக்கேன் என்னையே காப்பாத்தவே யாரும் இல்ல என்று ஒரு வருத்ததோடு சொல்லி விட்டு காரில் போயி உக்காந்தான் .
அவன் அப்படி சொன்னது மணிக்கு அவன் மேல் ஒரு பரிதாபத்தை உண்டு பண்ணியது ஏதோ பிரச்சினைல இருக்கான் .ஆனா என்னனு சொல்ல பயப்புடுறான் சரி இன்னொரு நாள் கேப்போம் இப்ப கேட்க வேணாம் என்று நினைத்து கொண்டு சரி மச்சி நம்ம ஆஸ்பத்திரி போயி டேவிட் டிச்சார்ஜ் பண்ணி வீட்ல சேத்துட்டு போவோம் என்றான் மணி .
சரிடா என்றான் விக்கி .பின் ஆஸ்பத்திரி போயி டேவிட்டை டிஸ்சார்ஜ் பண்ணி விட்டு அவனை விக்கியின் காரில் ஏத்தி கொண்டு டேவிட் வீட்டில் போயி அவனை சேர்த்தார்கள் .
ரொம்ப தேங்க்ஸ்டா என்றான் டேவிட் .டேய் ஏன் பிரண்ட்ஸ்க குள்ள தேங்க்ஸ் எல்லாம் என்றான் மணி .ம்ம் கரெக்ட்டா என்றான் விக்கி .நீங்க பேசிகிட்டு இருங்க நான் போயி காப்பி போட்டு கொண்டு வரேன் என்றாள்
ரெஜினா வேணாமா இருக்கட்டும் நீ ஆஸ்பத்திரில இருந்து டயார்ட் ஆகி இருப்ப நாங்க கிளம்புறோம் என்றான் மணி .ம்ம் ஆமாடா டேவ் நாங்க கிளம்புறோம் என்றான் விக்கி .டேய் இருங்கடா ஒரு காப்பி தான குடிச்சுட்டு போங்க என்றான் .அதுக்குள் ரெஜினா கிச்சனுக்குள் காப்பி போட போயி விட்டாள்
அப்புறம் நீ ஏண்டா ஒரு மாதிரி இருக்க என்றான் டேவிட் ,ஒன்னும் இல்லடா ஆபிஸ்ல சில பிரச்னை அதான் என்றான் விக்கி .ஓகேடா எனக்கு உன்னையே பத்தி தெரியும் நீ இப்ப இங்க சொல்ல கூச்சப்படுவ நான் எனக்கு சரியானதுக்கு அப்புறம் ஒரு நாள் மீட் பண்ணி நிறைய பேசுவோம் இந்த அஞ்சு மாசம் பேச முடியாதத எல்லாம் பேசுவோம் என்றான் டேவிட் .ஓகேடா கண்டிப்பா என்றான் விக்கி .
Going nice, very good well done. Looking for next part
Please upload next post soon
Next part sekiram upload pannunga … Vera level story 🤯.. verithanama waiting for next part…
நண்பா என்ன ஆச்சு கதையை தொடருங்கள்
Continue this story. It is unique
Continue this story. It is unique
Continue