லவ் டுடே 261

இருவரும் சென்று மற்ற பொருள்களை இறக்கி கொண்டிருந்தனர். அந்நேரம் அவர்கள் இருவரை பார்த்து கொண்டே வீட்டிற்குள் நுழைந்தாள்.

உள்ளே சென்றவள் அவள் தாயிடம் பேசும் சத்தம் வெளியே கேட்டது.

“ அம்மா யாரு அது புதுசா ரெண்டு பேர். நேத்தே உன்கிட்ட சொன்னேன்ல. அவுங்களை எல்லாம் கூப்பிட வேண்டாம்னு. அவுங்களை எல்லாம் எதுக்கு வீட்டுக்குள்ள விடுற. “

“ ஏய் சத்தம் போடாதடி. அவுங்க காதுல விழுந்துட போகுது. ஹவுஸ் ஓனர் தான் உதவிக்கு வர சொல்லிருக்காங்க. “

“ அவுங்க வந்தா வாசலையே பேசி அனுப்ப வேண்டியது தான. ஆம்பளைங்க புத்தி தெரிஞ்சும் இப்படி வீட்டுகுள்ள விடுற. “

“ ஸ்ஸ்ஸ்ஸ். கத்தாதடி. ஒரு நிமிஷம் இரு. இதோ வரேன் “ என்று வெளிய வந்து பார்க்க அவர்கள் இருவரும் அந்த இடத்தில் காணவில்லை.

“ அய்யோ அவுங்க காதுல விழுந்துடுச்சு. போய்ட்டாங்க. நீ பாட்டுக்கு பேசிட்ட. ரெண்டு பேரும் நல்லா பசங்களா இருந்தாங்க. பாரு இப்போ இதை எல்லாம் யாரு எடுத்து வைப்பாங்க. “

“ நாம ரெண்டு பேரும் எதுத்து வச்சிகிடுவோம். என்கிட்டே கேட்காம இனிமே யாரையும் உள்ள நடை ஏத்துன அப்றம் நடக்குறதே வேற. “

“ சரிம்மா தாயே கத்தாத. வா வா வந்து எடுத்து வைப்போம். “

அந்நேரம் வாசலில் கமலா வந்து நிற்க இருவரும் அவளை உள்ளே அழைத்து விசாரித்தனர்,

தாத்தாவும் பாட்டியும் கமலாவை பற்றி சொல்லி இருந்ததால் அவளை உள்ளே அழைத்து உதவிக்கு வைத்து கொண்டனர். அப்போது தென்றல் கமலாவிடம் கேட்டாள்.

“ ஆமா அக்கா நீங்க எப்படி இங்க வந்தீங்க. நாங்க உங்களை கூப்பிடவே இல்லையே. “

“ நம்ம மதி தம்பி தான் சொல்லிச்சு. இப்படி கீழ வாடகைக்கு வந்துருக்காங்க. நீங்க போய் கூட கொஞ்சம் ஒத்தாசை பண்ணுங்கன்னு. அதான் வந்தேன். “

“ வேற ஒன்னும் சொல்லலையா. “

“ இல்ல பாப்பா. உன்ன பாப்பானு கூப்பிடலாம்ல. “

“ அய்யோ அக்கா. தாராளமா கூப்பிடலாம். “

அதன் பின் வந்த நேரங்களில் மூவரும் ஒன்றாக சேர்ந்து ஒவ்வொன்றாய் எடுத்து வைக்க வேலை முடிந்தது.

அன்று மாலை பொழுதில் மதி கையில் புத்தகத்துடன் மாடியில் அமர்ந்திருக்க தென்றல் குளித்து முடித்து சேலை அணிந்து வீட்டின் பின் புறம் நின்று நீண்ட அடர்த்தியான கருங்கூந்தல் முன்னால் விட்டு அவள் துவட்டி கொண்டிருந்தாள்.

அப்போது தான் அவளது முகத்தை அவன் கவனித்தான்.

அழகான வட்ட முகம். அதில் சோலி போன்ற கண்கள், கருவளையத்தை சுற்றி அழகாக மையிட்டு, காதில் ஆடும் ஜிமிக்கியுடன், அறிவியலில் முடிவிலி என்று சொல்ல கூடிய அழகுடன் இருந்தாள். ஆனால் அவள் முகத்தின் அழகை கெடுக்கும் வகையில் ஒரு சோகம் இழையோடி கொண்டிருந்தது.

அதை பார்த்து விட்டு மீண்டும் புத்தகத்தில் தான் கவனத்தை செலுத்த மாடியில் நிழல் ஆடுவதை கவனித்த தென்றல் மேலே பார்க்க மதி புத்தகத்தில் பார்வையை செலுத்தியிருந்தான்.

அவனை கண்ட தென்றல் பொருக்கி என்று வாயில் முனுமுனுத்து விட்டு கதவை அடைத்து கொண்டு வீட்டினுள் சென்றாள்.

ஒரு தேவதை பார்க்கின்ற நேரமிது ……………..

மிக அருகினில் இருந்தும் தூரமிது ……………….