கமலி 736

கமலி குளித்து விட்டு வேறு நைட்டி போட்டுக் கொண்டு வெளியே வந்து வாசலில் நின்று வெயிலில் தலை துவட்டியபடி நிருதியின் வீட்டில் எட்டிப் பார்த்தாள். அவன் மனைவி கிச்சனில் இருந்தாள்.
“அக்கா” என்றழைத்தாள்.
“வா கமலி” அவன் மனைவி நைட்டியில் ஈரக் கையைத் துடைத்தபடி வெளியே வந்தாள்.
“என்ன ஸ்பெஷல்ங்க?”
“சிக்கன்தான் கமலி. நீ என்ன பண்ண?”
“இனிமேதாக்கா எடுத்து செய்யணும். போன வாரம் தலைக்கறி செஞ்சோம் இந்த வாரம் பையன் சிக்கன்தான் வேணுங்கறான். பிரியாணி பண்ணலாம்னு ஐடியா” பொதுவாக பேசிவிட்டுக் கேட்டாள் “அந்தண்ணா இல்லீங்களா?”
“இருக்காரு கமலி. ஏன்?”
“இல்லக்கா.. சும்மாதான் கேட்டேன்” ஈரத் துண்டால் மூக்கைத் துடைத்து குரலைத் தழைத்தாள். “உள்ளருக்காருங்களா?”
“படுத்துட்டு டிவி பாத்துட்டிருக்காரு”
“ஒரே பிரச்சினைக்கா. பிரச்சனையே ஓய மாட்டேங்குது. அதான் நேரம் எப்படி இருக்குன்னு அண்ணாகிட்ட கேக்கலாம்னு”
“சொல்லுச்சே இப்போதைக்கு அப்படித்தான்னு”
“ஆமாக்கா. டைம் செரியில்லேனுதான் சொன்னாரு. அப்படித்தான் இருக்குது. ஆனா இது எப்ப தீரும். ஏதாவது மாறுமானு தெரிஞ்சுக்கணும். ஜாமீன் கெடைக்கவே மாட்டேங்குதுக்கா. கட்ட ஆரம்பிச்ச வீடும் பாதிலயே நிக்குது. லோனும் இழுத்தடிச்சிட்டே இருக்குது. நகை எல்லாமே அடமானத்துல இருக்கு. இப்ப என் ஒருத்தி வருமானத்துல குடும்பம் நடத்தறதும் ரொம்ப கஷ்டமாருக்குக்கா..”
“உங்க மாமனார் ஹெல்ப் பண்றாரில்ல?”
“ஆமாக்கா.. ஆனா ஏகப்பட்ட கடனாகி போச்சு. இதெல்லாம் நேத்து பாக்க போனப்ப சொன்னேன். சரி ரெண்டு எடத்துல ஒரு எடத்தை வித்ரலாம்னு சொல்றாரு. அதான் அண்ணாகிட்ட கேக்கலாம்னு.. ஏற்கனவே வீடு, இப்ப கட்ட வேண்டாம்னு சென்னாரு. நாங்கதான் கேக்கல.. இப்ப ஜாமீனாவது எப்ப கெடைக்கும்னு தெரியணும்”
“கேளு வா..”
“நீங்க எங்காவது போறீங்களா?”
“ஆமா. எங்கம்மா வீட்டுக்கு போகணும். கொரோனா வந்ததுலருந்து போகவே இல்ல. அதுவே ஒரு சண்டை. அதான் இன்னிக்கு போய் பாத்துட்டு வந்துரலாம்னு”
“அண்ணாவும் வராருங்களா?”
“அவரு நல்ல காலத்துலயே வர மாட்டாரு. இதுல இன்னிக்கு சன்டே வேற. சொல்லவா வேணும்”
“ஜாலினா அது அண்ணாக்குத்தான்” என்றவள் முடியை உதறி “ஆத்துல இன்னிக்கு பயங்கர கூட்டம்க்கா. தொவைச்சுட்டு வந்து காயப் போடுறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிருச்சு” என்றாள்.
“ஆமா ஏன் கண்ணெல்லாம் ஒரு மாதிரி இருக்கு?”
“என்னக்கா?”
“நைட்டு தூங்கலயா செரியா?”
“ஆமாக்கா. தூக்கமே வரல. தூங்கறப்ப நாலு மணி இருக்கும். ஆறு மணிக்கு எந்திரிச்சு ஆத்துக்கு வேற போயிட்டேன். சோறாக்கி தின்னுட்டு படுத்து நல்லா தூங்கணும்க்கா”