கோவம் என் மேல.. கவலை உங்க மேல.. 2 52

மணி 8:30

குறுக்கும் நெடுக்குமாக நடந்தவரை காணவில்லையே என்று அறைக்குள் இருந்து எட்டிப்பார்த்தேன். நிஜமாகவே காணவில்லை! முகம் கழுவி Towel ல் துடைத்து, அறைக்கு வெளியே வந்தேன். சமையலறையில் காலடி எடுத்து வைக்கவும், பால் குக்கரின் விசில் சத்தம் அடிக்கவும் சரியாக இருந்தது.

Gas ஐ சிம் ல் போட்ட அம்மா, திரும்பி பார்த்தாள். உணர்ச்சிகளற்ற பார்வையை திருப்பிக்கொண்டாள்.

“குளிக்கலயா…” திரும்பிப் பார்க்காமலேயே கேட்டாள்.

“ப்ஸ்… ” வெறுமையான பதிலை நானும் தந்தேன்

“மாப்ள குளிக்க போயிட்டாரு, சாப்டாரு, இனிமே கீழ வரமாட்டாரு. நீ கேக்குறதுக்கு முன்னாடி நானே சொல்றேன்…” சிரித்துக்கொண்டே சொன்னாள்.

“சீ.. போ ” நான் வெட்கப்பட்டுக்கொண்டே அடிப்பது போல கை ஓங்கினேன்.

“போடி.. போயி குளிச்சிட்டு அவரை போயி பாரு…”

“பாத்து?…” எள்ளி நகைத்தேன்

“ஹ்ம்ம்.. சாமிய தொட்டு கும்பிடுறமாதிரி, தொட்டு கும்பிட்டுட்டு படுத்து தூங்கிடு…” நாக்கை நீட்டி உதட்டை கோணி சிரித்தாள்.. “சரி போ போ…” விரட்டினாள்.

அதற்குள் என்னவரை miss பண்ண ஆரம்பித்திருந்தேன்….

……………………………………………………………………………………………………………

அறைக்குள் நுழைந்து, செல்போன் எடுத்து பார்த்தேன். நினைத்தது போல் அவரிடமிருந்து குறுந்தகவல்.

“ஹாய் கண்ணுகுட்டி…”

நான் வாய் பொத்தி சிரித்தேன்… எத்தனை செல்ல பெயர் …

“I am waiting”

‘Wait பண்ணு’ மனதுக்குள் ஒரு சின்ன குதூகலம்.

“ஹ்ம்ம் :-)” என்று பதிலளித்தேன்.

“Saree கட்டிக்கோ.. ”

“Comfortable ஆ இருக்காது பா…”

“Please காவ்யா…”

“Try பண்றேன்…” சிரித்தேன்.. Saree கட்ட தான் நினைத்திருந்தேன்.. ஆனால் அவனாகவே கேட்கவேண்டும் என்று தோன்றியது..

“கொலுசு போட்டுக்கோ…”

“ஹ்ம்ம் ok ” அவன் ஆசைக்கு அணை போட விரும்பவில்லை..

…………………………………………………………………………………………………………..