கோவம் என் மேல.. கவலை உங்க மேல.. 2 52

“ஆசை தான் …”

“ஆசை கூடாதா … அழகு பொண்டாட்டிகிட்ட…”

“ஹ்ம்ம்ம் ” நாணி சிலிர்த்தேன்…

“அந்த கொலுசு போட்டுக்கோ…”

“ஹ்ம்ம்ம் …” சிலிர்த்து சில்லிட்டேன்…

பேசும்போதே சிலிர்க்கிறதே… எப்படி தாங்க போகிறேனோ…

அவனுடன் கொஞ்சி பேச பிடிக்கிறது… ஆனால் அவன் முன்னால் இப்படி சிலிர்ப்பதை என்னால் தாங்க முடியவில்லை.

“காவ்யா…” அம்மா கூப்பிட்டாள் … சொல்லப்போனால் காப்பாற்றிவிட்டாள் …
அவருக்கு ஒரு மென் புன்னகை காட்டி.. சமையலறை நோக்கி சென்றேன்…

“மாப்பிள்ளையும் நீயும் ரெஸ்ட் எடுங்க.. இன்னைக்கு என்ன நாள் தெரியுமில்ல…”
“தெரியும் தெரியும்..”
“இப்படியே ஏச்சுக்கு பேச்சு எல்லாம் பேசினே, உன்னை நல்லா வளக்கலை னு என்னய தான் திட்டுவாங்க…”
“நாங்க எல்லாம் தானா வளந்தவங்களாக்கும்…”
கரண்டி எடுத்து ஓங்கினாள்…நான் சிரித்துக்கொண்டே சமையலறை விட்டு ஹால் க்கு ஓட்டம் பிடித்தேன்…

அம்மாவுடன் ஏற்பட்ட சம்பாஷணைகளால் என்னுள் என்னவர் ஏற்படுத்தியிருந்த சிலிர்ப்பு குறைந்து, normal ஆகி இருந்தேன்…

ஹால் ல் இருந்த என்னவர்… “என்ன காவ்யா?” என்றார்..

“உங்க பொண்டாட்டிய அடிக்க வராங்க என்னனு கேக்க .மாட்டிங்களா..”
“கேட்டுட்டா போச்சு…” சிரித்தார்…

“ஒண்ணுமில்ல மாப்ளே … ” சமையலறையிலிருந்து எட்டிப்பார்த்து சொன்னாள் .. என்னை பெற்றவள்..

எதார்த்தமாக அவர் தோளில் கை வைத்து.. bye சொல்லி ரூம் க்குள் நுழைந்தேன்…
…………………………………………………………………………………………………………………………………………

சில நாட்களின் பழக்கத்தில் ஒரு நெருங்கிய தோழனை போல் மாறியிருந்தார். எனக்கு வாழ்க்கை முழுதும் தோள் கொடுப்பவர். சில நேரங்களில் ஆச்சர்யமாக என்னையும், பலநேரங்களில் அவரையும் எண்ண தோன்றியது எனக்கு.

இந்த பரவசம் வாழ்க்கை முழுதும் நீடிக்குமா. உடலுறவு அல்லாமல் ஒரு ஆண் தன் இணையை பரவசப்படுத்த முடியுமா என்ற கேள்விக்கு பதிலாக அவன் செய்கைகள் இருந்தன. அவன் பார்வையே என்னுள் பல லட்சம் பட்டாம்பூச்சிகளை பறக்கவிட்டுக்கொண்டிருந்தது. அவனுடைய வியர்வை கலந்த மென் வாசமும் என்னை தூக்கி சாப்பிட்டது.

இரவை நோக்கி நடை போட்ட அந்த நாள், என்னுள் ஏற்படுத்திய மென் கலவரங்கள் ஏராளம். அத்தனைக்கும் அவனே விடை.

“நீ நெருக்கி அணைத்தாள், உன் சதையோடு என்னை தைத்துவிட கடவுளை வேண்டுவேன். உன் ரத்தமும் வியர்வையும் என்னுள் பாய்ந்து என்னை உருக்கி விடட்டும்.”

படுத்தாலும் தூங்காமல் குரங்கு போல அங்கொன்றும் இங்கொன்றுமாய் மனம் தாவியது. பெண்மைக்கே உரிய சாபமாக இருக்கும் அது.

அம்மா அழைத்த போது புரண்டு மணி பார்த்தேன், இரவு 7 மணி.

அவன் நினைவில் சில மணி நேரங்கள் கழிந்தது அப்போது தான் உணர்ந்தேன்.

“குளிச்சிட்டு சாப்பிடு காவ்யா… “, “அப்புறம் சாப்டுட்டு இன்னொருக்க குளிச்சுக்குவியாம்” இது அம்மா .

எரிச்சல் ஆனது. ஒரு மனுஷி எத்தனை தடவை தான் குளிப்பாள் ஒரு நாளில்.

இரவு நீங்க நீங்க இந்த நொடி அப்படியே ஸ்தம்பித்து விடாதா என்றொரு எண்ணம். “ச்சீ .. லூசா நீ … ” மனம் கேட்டது.

அம்மாவிடமே கேட்கலாம். “அம்மா…” நான் வெளியே போக எத்தனிக்க என்னவர் ஹால் டைனிங் டேபிள் ல் அமர்ந்து டீ குடித்துக்கொண்டிருந்தார்.

நான் அறைக்குள்ளேயே தங்கிவிட்டேன்.

என் மன போராட்டங்கள் என்னையே ஆச்சர்யப்படுத்தின. காலையில் பரவசப்பட்ட மனம் மாலையில், அவனிலிருந்து அகன்று நின்று என்னை வெறித்து பார்த்தது.

“அம்மா.. இங்க வா..” இந்த முறை கொஞ்சம் அழுத்தமாக அழைத்தேன்.

அவர் ஏதோ serious என்று நினைத்திருக்கக் கூடும். அறைக்குள் எட்டிப்பார்க்காமல் இருக்க அறைக்கதவை மெல்ல சாத்தினேன்.

என் செய்கையால் பதறிப்போன அம்மா, “என்னடி…” என்று விரைந்து வந்தாள். அவள் குரலில் பதற்றம் தெரிந்தது.

கதவை மெல்ல திறந்து என்னை பார்த்து ஒரு பெருமூச்சு விட்டாள். “கழுதை… நானும் பயந்துட்டேன்..”

கதவை மெல்ல திறந்து வெளியே எட்டிப்பார்த்து, “ஒண்ணுமில்ல மாப்ள… நீங்க பதறாதீங்க”. திரும்ப கதவை சாத்திவிட்டு என்னை பார்த்துவிட்டு ஒரு மார்கமாக சிரித்தாள்.

கசங்கிய nighty ல், சுவரோரமாய் சாய்ந்து நின்ற நானோ மனக்கலவரத்தில் நிற்க.

அவள் பார்வையே, என் பிரச்சனை என்ன என்று அவளுக்கு புரிந்தது என்று காட்டியது.

என் கண்களில் கண்ணீர் அரும்ப, ஓடி வந்து அவளை இறுக்கி கட்டிக்கொண்டேன்.

என் கண்ணீர் துளி அவள் தோளில் விழ. இரண்டு நிமிடம் அவள் எதுவும் பேசவில்லை.