அசுரன் Part 30 36

அக்ரூரர் ஒரு நிமிடம் யோசித்தார்..பின் வேறு வழியில்லை என உண்மையை உரைத்தார்..

“எல்லாம் உன் தந்தை காத்தவராயனால் தான்” என்று அவர் கத்த,அதை கேட்டு விராடன் கடகடவென சிரித்தான்..

“அய்யோ முனிவரே..!உங்களை பார்த்தால் ஏதோ நாலும் அறிந்தவர் என்று நினைத்தேன்..ஆனால் தாங்கள் உலக நடப்புகளை தெரிந்து கொள்வதில் முற்றிலும் பூஜ்யம் என்று இப்போ தான் தெரியுது..!காத்தவராயன் என்னோட தந்தை அல்ல..அவர் என் தாத்தா…மேலும் அவர் இப்போ உயிரோடவே இல்லை..”என சிரித்தான்..

அக்ரூரர் கோபத்துடன்”மூடனே…!நீதான் உன் பிறப்பின் மூலத்தை கூட தெரியாமல் இருக்கிறாய்..உன்னோட அன்னையின் பெயர் தெரியுமா…!”என்று கேட்டார்.

விராடன் உடனே..”சகுந்தலா தேவி”என்றான்.

அக்ரூரர் இப்போ சிரித்தார்..சிரித்து கொண்டே..!”உன்னை வளர்த்தவள் பெயர் தான் சகுந்தலா தேவி..பெற்றவளின் பெயர் மகேந்திரபுரி இளவரசி மதிவதனி.அவள் இங்கு இருக்கும் அனைத்து பெண்களை விட அழகானவள்.”என்று கூற விராடன் நம்ப முடியாமல் பார்த்தான்.

அக்ரூரர் மேலும் தொடர்ந்து பேசினார்.”இன்னும் கூறுகிறேன் கேள் இளவரசே..!எல்லா அழகான பெண்களை கண்டவுடன் பலவந்தமாக அனுபவிக்கும் உன் தந்தை காத்தவராயன், சகுந்தலா தேவியின் கணவனை கொன்ற மதிவதனி அழகில் சொக்கினான்.சகுந்தலா தேவியை விட இளையவளான மதிவதனியை தந்திரமாக அடைந்தான்..அதன் விளைவு..நீ பிறந்தாய்.சகுந்தலா தேவி,காத்தவராயனின்‌ மருமகள்..அவளிடமும் அவன் தகாத உறவு வைத்து இருந்தான்..தெரியுமா..ஒரே நேரத்தில் மதிவதனிக்கும்,சகுந்தலா தேவிக்கும் குழந்தை பிறந்தது..சகுந்தலா தேவிக்கு பிறந்தது பெண் குழந்தை.அதை காத்தவராயன் கொன்று விட்டான்..நீயும் அவனால் கொல்லப்பட வேண்டியது..ஆனால் அங்கு பிரசவம் பார்த்த பெண்கள் மூலம் நீ காப்பற்றபட்டாய்..”

விராடனால் அக்ரூரர் சொன்னதை எதுவுமே நம்ப முடியவில்லை.

“இவை எல்லாம் எப்படி உங்களுக்கு தெரியும்..”என்று அவன் கேட்க..

“அங்கு மதிவதனிக்கு பிரசவம் பார்த்த பெண் எனக்கு மிகவும் வேண்டியவள்..அவள் மூலமாக தான் எனக்கு இந்த ரகசியங்கள் தெரிந்தது..”

“நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால்,எங்கெங்கோ அழகான பெண்களை தேடி செல்லும் காத்தவராயன்,மாயமலை பக்கத்திலேயே இருக்கும் பொன்னமராவதி மட்டும் வராதது ஏனோ..?அதுவும் எதிர்த்து போரிட ஆட்களே இல்லாத பொழுது..?என அவன் அவர்கள் உருவத்தை பார்த்து நக்கலாக கேட்க..,

அக்ரூரரும் அதை புரிந்து கொண்டு,”உண்மையில் எங்களுக்கு சத்திரியரை எதிர்த்து போரிட வலுவில்லை தான்..ஆனால் எங்கள் சமூகத்தின் பெண்களை பாதுகாக்க எங்களிடம் அறிவு உள்ளது..ஆம் இந்த பொன்னமராவதியை எதிர்த்து போரிட யாராலும் முடியாது..ஏனெனில் எங்கள் ஊரை சுற்றி எட்டுதிக்கிலும் நாங்கள் சப்த கன்னியரை பிரதிஷ்டை செய்து வைத்து உள்ளோம்..சப்த கன்னியரை எதிர்த்து யாராலும் போரிட்டு வெல்ல முடியாது.
அது காத்தவராயனுக்கும் தெரியும்..அதனால் தான் எங்கள் ஊர் தப்பியது..”

“எல்லாம் சரி..முனிவரே..!அது தான் காத்தவராயன் இறந்து விட்டாரே..!இப்ப என்ன பிரச்சினை வந்தது..”மீண்டும் ஆரம்பித்த இடத்தில் விராடன் வந்து நின்றான்.

“உன்னை வளர்த்த தாய் சரியாக உன்னை வளர்க்கவில்லை இளவரசே…நீதான் அக்கம் பக்கம் என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் செல்லமாக வளர்ந்து இருக்கிறாய்..காத்தவராயன் அட்டுழீயங்கள் அவன் இறந்த பிறகு தான் அதிகமாகி உள்ளன..அவன் ஆவியாகி கிடைக்கும் நபர்களின் உடம்பில் புகுந்து கொண்டு இப்பவும் பெண்களின் கற்பை சூறையாடி கொண்டு இருக்கிறான்..இதன் காரணமாகவே மாயமலையில் இருந்த மக்கள் எல்லோரும் வெளியேறி விட்டனர்.அவன் உயிரோடு இருந்த பொழுதே என் ஊர் பெண்களின் மீது ஒரு அவனுக்கு ஒரு கண்..ஆனால் அவனால் உள்ளே நுழைய முடியவில்லை.இப்போ ஆவியாக வேறு இருக்கிறான்..என் ஊர் பெண்கள் யாராவது எல்லை மீறி கால் வைக்கும் தருணத்திற்காக காத்து இருக்கிறான். தன் சொந்த மருமகளிடமே தவறாக நடந்த அவன் மீண்டும் ஒருமுறை என் மகள் உனக்கு மனைவியாக வரும் போது மட்டும் சும்மா விடுவானா..!அதனால் தான் சொல்கிறேன்..நீ என் பெண்ணை மறந்து விடு..நீ உடனே இங்கிருந்து சென்று விடு.”என்று அவர் உறுதியாக கூறினார்..

ஆனால் விராடன்,”இல்லை நீங்கள் சொல்வது எல்லாம் பொய்..உங்கள் பொண்ணை எனக்கு தரக்கூடாது என்பதற்காக ஏதோ கட்டுக்கதை சொல்கிறீர்கள்..போதாகுறைக்கு என் தாயை வேறு களங்கபடுத்துகிறீர்கள்”என்று அவன் ஆக்ரோஷமாக கத்த

“நான் சொல்வது முற்றிலும் உண்மை.. இளவரசே..!நீ உன் தாயிடம் சென்று நான் சொன்ன விவரங்களை சரிபார்த்து கொள்ளலாம்..”

விராடனும்”செல்கிறேன்..உடனே செல்கிறேன்..சென்று என் தாயிடம் கேட்கிறேன்..மாயமலையும் உள்ளே சென்று பார்க்கிறேன்..ஒருவேளை நீங்கள் சொன்னது பொய் என்றால் என் தாயை பழித்து பேசிய உங்கள் நாக்கை அறுத்து விடுவேன்..”

அவன் செல்ல போகிறான் அறிந்து மனதில் உள்ள பாரம் நீங்கியவராய் அக்ரூரர்”சரி இளவரசே..நான் சொல்வது பொய்யாக இருந்தால் நானே என் தலையை பலி கொடுக்கிறேன் போதுமா…”

இருவரின் முரட்டு வாக்குவாதத்தை கேட்ட விலாசினி உடல் நடுங்கியது..

விராடன் சென்ற பின் அக்ரூரர் விலாசினியிடம் வந்து,”நான் சொல்வதை கேள் மகளே..!தந்தை சேர்த்து வைத்த சொத்து எப்படி பிள்ளைகளுக்கு சொந்தம் ஆகிறதோ..!அதேபோல் தந்தை செய்த பாவ,புண்ணியங்கள் ஒருபகுதி கண்டிப்பா பிள்ளைகளை வந்து சேரும்..காத்தவராயன் பெரும் காமுகன்..அவன் ஆவியான பிறகும் சற்றும் திருந்தவில்லை..காத்தவராயன் செய்த பாவத்திற்கான பலனை அவன் மகன் விராடனும் சேர்ந்து அனுபவித்து தான் ஆக வேண்டும்..நீ அவன் மனைவி ஆனால் இழக்க கூடாததை நீ இழக்க நேரிடும்” என எச்சரித்தார்..

ஆனால் அவளும் ஏனோ அவர் சொன்ன விசயங்களை நம்பவில்லை..ஆனால் ஒருவன் நம்பினான்..அவன் தான் ஆரா..அவன் மனதில் விலாசினியை அனுபவிக்க திட்டங்கள் உருவாயின..

ஒருபக்கம் ஆராவுக்கு விலாசினி மேல் மோகம்,,விலாசினிக்கோ ராஜ வாழ்க்கை மேல் மோகம்..விராடனுக்கு விலாசினி அழகு மீது மோகம்.இதில் யார் நினைத்தது நடக்க போகிறது..?

எதிர்காலத்தில் பல பெண்களின் கற்பை காப்பாற்ற அக்ரூரரின் சாபம் அவசியம்..அதற்காக விதியே உன்னோட விளையாட்டை விலாசினி போன்ற அழகான பெண்ணிடம் தான் காண்பிக்க வேண்டுமா..!

அதற்காக விலாசினி கொடுக்க போகும் விலை என்ன..?

1 Comment

  1. ப்ரோ வேற இருந்தா குடுங்க இது ஏற்கனவே இருக்கு ப்ரோ No

Comments are closed.