அசுரன் Part 30 36

“அடப்பாவி,உனக்கு வயசுக்கு வந்த பொண்ணு இருக்கு.நீ ஏதோ உன்னோட வயசுக்கு ஏத்த மாதிரி யாரோ ஒரு முனிவரின் மனைவியை சொல்வே..! என்று பார்த்தா..!விண்வெளியில் இருக்கும் நிலாவுக்கு ஆசைப்படறீயே..!இது கொஞ்சமாவது நியாயமாடா..!”

“அதெல்லாம் எனக்கு தெரியாது..காரி..!ஒருநாள் இல்லை ஒருநாள் அவளை நான் நிச்சயம் அனுபவிப்பேன்..அதற்கான வழியை தான் தேடி கொண்டு இருக்கேன்..”

“டேய் டேய் ஆரா..நான் சும்மா வாய் வார்த்தைக்காக தான்டா சொன்னேன்..மற்றபடி நிஜமா எல்லாம் அனுபவிக்க எனக்கு தைரியம் இல்ல.நீயும் மறந்துடுடா,அதான் உனக்கு நல்லது..அதுவும் அந்த அக்ரூரர் ரொம்ப சக்தி வாய்ந்தவர்..அவர் சபிச்சா நாம அவ்வளவு தான்.”

“போடா பயந்தாங்கொள்ளி,செத்தாலும் அந்த மாதிரி ஒரு பொண்ணை அனுபவிச்சிட்டு சாகணும்..நான் எப்படியாவது அந்த பொண்ணை அனுபவிக்க வழி தேடிட்டு இருக்கேன்..கூடிய விரைவில் அவ என் வலையில் சிக்குவது உறுதி” என கூற காரியின் முகம் பயத்தில் வெளிரியது..

கனிஷ்க நாட்டை சேர்ந்த விராடன் என்ற இளவரசன் தன் பரிவாரங்களோடு வேட்டையாட காட்டுக்கு வந்தான்..அவன் தன் தாயின் அழகையும்,தந்தையின் பலத்தையும் ஒருசேர கொண்டு இருந்தான்..அவள் தாயோ மன்மதனின் மனைவி ரதியை தோற்கடிக்கும் அழகை பெற்றவள்..அவள் இரத்தத்தில் பிறந்தவன் மட்டும் அழகில் சோடை போவானா..!அதே நேரத்தில் அவன் குதிரை ஓட்டும் வேகத்திற்கு யாரும் ஈடு இணையே கிடையாது..வேட்டையாடி கொண்டே இருந்ததில் கூட வந்தவர்களுக்கு களைப்பு மேலோங்கியது..ஆனால் அவனுக்கு சற்றும் களைப்பு இல்லை.இன்னமும் துள்ளி திரிந்து கண்ணில் பட்ட மிருகங்களை வேட்டையாடி கொன்றான்..

“இளவரசே..இவ்வேகத்தில் நீங்கள் மிருகங்களை கொன்றால் இந்த நாட்டில் ஒரு மிருகம் கூட மிஞ்சாது..எங்களுக்கும் களைப்பாக இருக்கு..சற்று ஓய்வு தாருங்கள்..”என கெஞ்சினார்கள்.

தன் அப்பாவின் குணம் அவனிடத்தில் சற்று இருந்தது.. “தான்”என்ற ஆணவம் அவனுக்கு..!,மற்றவர்களை அவன் சற்றும் மதிப்பது இல்லை.

அவர்களை பார்த்து,”நீங்கள் எல்லாம் என்ன பிறவிகளோ..!என்னோட வேகத்திற்கு உங்களால் ஈடுகொடுக்க முடிகிறதா..!நீங்கள் எல்லாம் என் படையின் வீரர்கள் என்று சொல்லி கொள்ளவே எனக்கு அசிங்கமா இருக்கு..நீங்கள் இங்கேயே இருங்கள்..நான் மட்டும் தனியாக சென்று களமாடி விட்டு வருகிறேன்.”என வேட்டையை தொடர்ந்தான்..

வேட்டையின் சுவாரஸ்யத்தில் மூழ்கி இருந்த அவன் சூரியன் மேற்கில் வந்ததை கவனிக்கவில்லை. இருட்ட ஆரம்பித்த பிறகு தான்,நீண்ட தூரம் வந்து விட்டதை உணர்ந்தான்..இங்கேயே தங்கி விட்டு காலை கிளம்பலாம் என குதிரையை பாதுகாப்பான இடத்தில் கட்டி விட்டு உயரமான மரத்தை தேர்ந்தெடுத்து இரவு மேலே தங்கினான்..இரவு முழுக்க விழித்திருந்து காட்டு விலங்குகள் குதிரையை அண்டாத வண்ணம் பாதுகாத்து கொண்டு இருக்க,பிரம்ம முகூர்த்தத்தில் தூக்கம் வந்தது..தூங்கி ஒரு சில நிமிடங்களில் கொலுசு ஒலி கேட்க உடனே விழிப்பு வந்தது.யாரோ ஒரு பெண் நடந்து செல்வதை பார்த்த அவன்,நிலவு ஒளியில் கூட அவள் தேகம் மின்னுவதை பாத்து இலைகளை விலக்கி பார்த்தான்.அவளின் எடுப்பான பின்பக்கம் மட்டுமே தெரிந்தது.உடனே அடுத்த கிளையை தாவி ஏறினான்..

அதற்குள் அந்த பேரழகி ஆற்றங்கரையை நெருங்கி விட்டு இருந்தாள்.அவள் ஆடைகளை ஒவ்வொன்றாய் அவிழ்க்க இலைமறை காயாக அவள் மேனியின் வனப்பு தெரிந்தது.அவள் ஆற்றில் இறங்கி குளிக்க ஆரம்பிக்க இவனுக்குள் பல எண்ணங்கள் ஓடியது.

“யார் இந்த பெண்.!மானிட பிறவி போன்று தோன்றவில்லையே..!தேவலோக மங்கை போல் அல்லவா இருக்கிறாள்..”

குளித்துவிட்டு அவள் ஆற்றங்கரை மேலே ஏறி வர,அவள் முழுமையான அழகை பார்க்கும் ஆர்வத்தில்,கவனிக்காமல் இன்னொரு கிளையின் மீது கால் வைத்தான்.அது ஒரு மெல்லிய கிளை.அவன் எடை தாங்காமல் அது ஒடிந்து விழ,கிளைகளை முறித்து கொண்டு தரையில் விழுந்தான்..கீழே விழுந்த வேகத்தில்”அம்ம்ம்ம்ம்மமா”என்று அவன் ஒலி எழுப்பி மயங்க, அந்த பெண் சத்தம் கேட்டு ஓடோடி வந்தாள்..

அவனுக்கு உணர்வு வர,அவன் வழக்கமா உறங்கும் பஞ்சு மெத்தையை விட மிகவும் மிருதுவான மெத்தையில் தலை வைத்து இருப்பது போல தோன்றியது..கண் விழித்து பார்க்க,அதே தேவ மங்கையின் முகம் மிக அருகில் இருந்தது..அவளின் யெளவனம் அவனை மயக்கியது..நறுமணத்தை சொல்லவே வேண்டாம்.

“யார் நீங்கள்”என்று அவள் கேட்க,அப்போ தான் அவன் தலை வைத்து இருந்தது பஞ்சு மெத்தை அல்ல அது அவள் மடி மீது என்று அவனுக்கு உறைத்தது.

“நான்.. நான்..”என அவன் வார்த்தைகளை விழுங்க,

“அதை நாங்கள் எழுந்து உட்கார்ந்து சொல்லலாமே..”என்று அவள் புன்னகைக்க அவள் வெண்ணிற பற்களின் அழகை கண்டு மயங்கினான்..

அவன் கையூன்றி எந்திரிக்க முயலும் பொழுது வலியில் கத்தினான்..அவனது வலது கை உடைந்து இருப்பது தெரிந்தது.

அவள் மெதுவாக அவன் தோளை பற்றி உட்கார வைத்தாள்..

அவன் கையை அழுத்தி பார்க்க,கை உடைந்து போய் இருப்பது தெரிந்தது..

அவன் மேனியில் உள்ள அலங்காரங்களை வைத்தே அவன் ஒரு ராஜகுமாரன் என்று அவள் உணர்ந்து கொண்டாள்..

“உங்க கை உடைஞ்சு போய் இருக்கு.வாங்க உடனே மருத்துவ உதவி செய்யணும்”என மெல்ல அவனை தூக்கி கைபிடித்து அழைத்து சென்றாள்..

1 Comment

  1. ப்ரோ வேற இருந்தா குடுங்க இது ஏற்கனவே இருக்கு ப்ரோ No

Comments are closed.