அசுரன் Part 30 36

“வலியை மறந்து கவனத்தை திசை திருப்ப மெய்மறக்க செய்யும் பச்சை நிற இயற்கை அழகை பார்க்க சொல்லுவது முன்னோர்கள் வழக்கம்..என் முன்னாடி தான் பூத்து குலுங்கும் நந்தவனமே உள்ளதே..!உன் பொன் எழில் முக அழகை பார்த்து நான் மெய் மறந்து போனேன்.அதற்கு சாட்சி இப்போ எனக்கு வலியே தெரியவில்லை பார்…”என்று அவன் கூற அவள் முகம் வெட்கத்தில் சிவந்தாள்.

அக்ரூரர் உள்ளே வர இருவரும் பேசுவதை நிறுத்தி பாடல் பாட கணவுலகம் சென்றனர் ..

அக்ரூரர் மடமடவென்று அவனுக்கு பச்சிலை வைத்து கட்டு போட்டு,அவன் தன் மகளையே பார்ப்பதை அறிந்து அவர்,”ம்க்க்உம்..என்று குரல் கனைக்க,இருவரும் பாட்டை பாதிலேயே விட்டு விட்டு அப்பொழுது தான் நனவுலகுக்கு வந்தனர்..

அக்ரூரர் அவன் பரிதாபமான நிலையை பார்த்து கொஞ்சம் இரக்கத்துடன்”இங்க பாருங்க..!இளவரசே..நீங்கள் இரவு முழுக்க கண் விழித்து இருப்பதாலும்,காயம் அடைந்த கைக்கு கட்டு போட்டு இருப்பதாலும் சற்று ஓய்வு எடுங்கள்..வலி மறந்து தூங்குவதற்காக மருந்து தயாராக உள்ளது..அதை அருந்தி கொஞ்சம் உறக்கம் கொள்ளுங்கள்.நான் தங்கள் படையை தேடி கொண்டு செல்கிறேன்..அவர்கள் வந்த உடன் நீங்கள் கிளம்புவது உத்தமம்..”என சொல்லிவிட்டு அவர் விடுவிடுவென வெளியே சென்றார்..

தேனை எடுத்து கொண்டு ஆரா முன்னே வர,”ஆரா,நீ தேனை ஆசிரமத்தில் உள்ளே வைத்து விட்டு என்னுடன் உடனே வா..”என்று அக்ரூரர் கூற,அவன் ஆசிரமம் உள்ளே சென்றான்..

ஆரா உள்ளே வருவதை பார்த்து, விலாசினி உடனே துணித்திரையின் பின்னால் மறைந்து கொண்டாள்.. ஆராவின் கண்கள் விலாசினியை தேடியது…
துணித்திரை பின்னால் நின்று கொண்டு இருந்த அவள் சிற்ப அழகை பாத்து,அவனுக்கு ஆண்மை தூக்கியது..உடனே ஓடிச்சென்று அவளை கட்டியணைக்க அவன் தோள்கள் தினவு எடுத்தன..ஆனால் இது சரியான சமயமல்ல என்று அவன் உணர்ந்தான்..

அப்பொழுது தான் அவன் கீழே படுக்க வைக்கப்பட்டு இருந்த விராடனை கண்டான்..

யார் இவன்?என்னவாயிற்று இவனுக்கு..?ஆள் வேற பார்க்க திடகாத்திரமாக இருக்கானே..முகம் வேறு கலையா இருக்கு..பார்க்க ஏதோ நாட்டின் அரசன் போல இருக்கே..இவன் இங்கிருந்தால் என் ஆசை எப்படி நிறைவேறும்..? என பல எண்ணங்கள் அவன் மனதில் ஓடின..

“ஆரா…”என்று அக்ரூரர் சத்தம் கேட்டதும் வெளியே ஓடி வந்தான்.

“தேனை வைத்து விட்டு வர இவ்வளவு நேரமா உனக்கு” என அவர் கேட்க,

“தப்பா நினைக்காதீங்க சாமி..! அங்கு படுக்க வைக்கப்பட்டு இருக்கும் நபரின் முகத்தில் ராஜகலை தெரியுது..அதை பார்த்து நான் கொஞ்சம் மதிமயங்கி நின்று விட்டேன்..மன்னித்து கொள்ளுங்கள்..”

“சரி சரி பரவாயில்லை..!நான் உன்னை அழைத்ததே அதற்காக தான்..!அவன் ஒரு நாட்டின் இளவரசன்,அவனை உடனே இங்கிருந்து வெளியேற்ற வேண்டும்..அவன் இங்கிருக்கும் ஒவ்வொரு நொடியும் நமக்கு தான் ஆபத்து. அவன் படை பரிவாரங்கள் இங்கே தான் காட்டில் எங்கேயாவது இருக்கும்.அதை கண்டுபிடித்து அவனை உடனே அவர்களிடத்தில் ஒப்படைக்க வேண்டும்.உடனே என்னுடன் வா..”என்று அவர் சொல்ல, ஆரா காதில் இன்பத்தேன் வந்து பாய்ந்தது..ஆவலுடன் அவருடன் நடந்து சென்றான்.

விராடன் கொஞ்சம் நேரம் தான் தூங்கினான்.கனவில் கூட விலாசினி முகமே திரும்ப திரும்ப வந்தது..என்ன செய்வது எல்லாம் அவன் மரபணு படுத்தும் பாடு…அழகான பெண்களை கண்டாலோ,அவர்களின் அழகை ஒருவர் வர்ணிப்பதை கேட்டாலோ உடனே அந்த நாட்டின் மேல் போர் புரிந்து அந்த பெண்களை ஆசைதீர அனுபவித்து விடும் ஒருவனுக்கு பிறந்து விட்டு,இந்த உணர்வு கூட தோன்றவில்லை என்றால் எப்படி..?

“என்ன அதற்குள் விழித்து விட்டீர்கள்..” விலாசினி கேட்க..,

“ம்ம்….ஒரு அற்புதமான கனவு,அதில் தேவகன்னிகை நீராட வந்தாள்..அவள் நீராடுவது ஆற்றில் தென்றல் குளிப்பது போல் இருந்தது.நான் உடனே அவள் அழகை காண மரத்தின் மீது ஏற அதில் இருந்து தவறி விழுந்து விடுவது போல கனவு.உடனே திடுக்கிட்டு விழித்தேன்.”

“ம்ம்..இது கனவு போல தோன்றவில்லையே..காலையில் உண்மையாக நடந்த நிகழ்ச்சி போல் அல்லவா உள்ளது..”என்று அவள் செல்ல கோபத்துடன் கேட்க,

“ம்ம்ம்…பாதி உண்மை..தேவி..ஆனால் உன் மேனி அழகை என்னால் காண முடியவில்லை.அதை காண ஆவலோடு முயற்சிக்கும் பொழுது தான் கால் இடறி கீழே விழுந்தேன்..”

‘வேண்டும்..வேண்டும் நன்றாக வேண்டும்..திருட்டுத்தனமாக ஒரு பெண் குளிப்பதை பார்ப்பவருக்கு இது தான் தண்டனை..”என அவள் சொல்ல

“அப்போ நான் இந்த தேவ கன்னிகையின் அழகை காணவே முடியாதா..!”என அவன் ஏக்கத்துடன் கேட்டான்.

அவள் சற்று நாணத்துடன்”காணலாம்..அதற்கென்று சில வரைமுறைகள் இருக்கு..!ஊரறிய என் கழுத்தில் திருமாங்கல்யம் கட்டி சொந்தமாக்கி கொள்ளுங்கள்…பிறகு எல்லாம் பார்க்க மட்டுமல்ல தொட்டடு அனுபவிக்கவும் கிடைக்கும்..”

அவள் கூறிய வார்த்தைகளை கேட்டு அவன் முகம் மலர்ந்து”அப்போ தேவி,உனக்கு சம்மதம் தானா..!என்று அவன் ஆவலுடன் கேட்க..

அவளும்”முறைப்படி என் தந்தையிடம் பேசுங்கள்”என்று அவள் சொல்லிய மறுகணம்,”அது ஒரு பொழுதும் நடக்காது..”என அக்ரூரர் வாசலில் இருந்து கத்தினார்…

அவர் இருவர் அருகே வந்து”நான் எது நடக்க கூடாது என நினைத்தேனோ,அது நடந்தே விட்டது..இளவரசே..! உங்கள் படை பரிவாரங்கள் வெளியே காத்து கொண்டு இருக்கு..நீங்கள் உடனே இங்கிருந்து கிளம்புங்கள்..!”என அவனை விரட்டினார்.

விராடன் புரியாமல்”என்ன ஆயிற்று முனிவரே..!நான் உங்கள் பெண்ணை முறைப்படி தானே கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன்…மேலும் உங்கள் மகளும் அல்லவா என்னை விரும்புகிறாள்..இருவர் மனம் சங்கமித்த பிறகு தடை என்ன ?

அக்ரூரர் அவனிடம்”இளவரசே..!நாங்கள் இந்த ஊரில் உள்ள ஆட்களை தவிர்த்து வேறு யாரிடமும் திருமணம் செய்து கொள்வது இல்லை..அதனால் தாங்கள் கிளம்பலாம்..”என்று அவர் வெடுக்கென்று பேசினார்.

விராடன் பொறுமையுடன் “ஏன் முனிவரே..!நாங்கள் சத்திரிய வம்சம்,நீங்கள் பிராமண வம்சம் என்பதால் பெண்ணை தர மறுக்கிறீர்களா..?

“அய்யோ அதெல்லாம் கிடையாது..! எங்க வம்சத்தின் மூதாதையர் விசுவாமித்திரர் கூட ஷத்திரிய வம்சம் தான்.இதோ இங்கு நிற்கிறானே ஆரா..!அவனோட சமூகத்தில் இருக்கும் ஒருவனை என் பெண் விரும்பி இருந்தால் கூட நான் என் பெண்ணை மணம் முடித்து கொடுத்து இருப்பேன்..ஆனால் உனக்கு மணம் முடித்து கொடுக்க முடியாது..”

இதை கேட்ட ஆரா மனது றெக்கை கட்டி பறந்தது..

விராடன் புரியாமல் “ஏன்..?அப்படி எந்த விதத்தில் நாங்கள் தாழ்ந்து போய் விட்டோம்..”என கேட்டான்

“நீங்கள் தாழ்ந்து போக வில்லை.என் பெண்ணை கட்டி கொண்டால் தாங்கள் இந்த ஊரை விட்டு செல்லவே கூடாது..இங்கேயே தங்க சம்மதமா..!என அக்ரூரர் கேட்டார் .

இதை கேட்டவுடன் விலாசினி மனம் அதிர்ச்சி அடைந்தது..”ஆகா நான் ஆசைப்பட்ட ராஜபோக வாழ்க்கை கிடைக்காமல் போய் விடும் போல் இருக்கே.”என அதிர்ச்சி அடைந்தாள்.

விராடனும் தயங்கி நின்றான்..

“ஏன் இந்த நிபந்தனை..?என்று நான் அறிந்து கொள்ளலாமா…? முனிவரே..!”என்று அவன் கேட்க..

1 Comment

  1. ப்ரோ வேற இருந்தா குடுங்க இது ஏற்கனவே இருக்கு ப்ரோ No

Comments are closed.