“இந்த ராஜகுமாரன் மட்டும் எனக்கு கிடைத்தால் என் ஆசை நிறைவேறி விடும்.பார்ப்பதற்கும் நல்லா திடகாத்திரமாக இருக்கான்”என அவள் மனசுக்குள் பூரித்தாள்
அவன் அவளையே விழுங்குவதை போல பார்க்க,”என்ன ராஜகுமாரரே..!இதற்கு முன் பெண்களை பார்த்ததே இல்லையா..! விட்டால் அப்படியே என்னை கடித்து தின்று விடுவீர்கள் போல இருக்கே..!”என அவள் வெட்கத்தில் சிணுங்க..
அவன் புன்னகையோடு”பெண்களை பார்த்தது உண்டு தேவி..!ஏனெனில் என் தாயும் ஒரு பெண் தானே..! என் நாட்டில் உள்ள பெண்களை காட்டிலும் தாங்கள் மிக மிக அழகாக இருக்கீங்க..உங்களை போன்ற ஒரு அழகான பெண்ணை நான் என் வாழ்நாளில் பார்த்ததே இல்ல..”
அவள் நாணத்துடன்”பொய் உரைக்க வேண்டாம்..ராஜ குமாரரே..!தாங்களும் மிக அழகாக இருக்கீங்க..உங்களை நாடி பல பெண்கள் மொய்த்து இருப்பார்களே..!அவர்களில் ஒருவர் கூடவா என்னை போன்று இல்லை..”
“ஆமாம் தேவி..”என்று சொல்லி கொண்டே அவன் ஒரு கல் மீது காலை வைத்து இடறி விழ அவள் தாங்கி பிடித்தாள்..ஆனால் அவள் தாங்கி பிடிக்கும் பொழுது அவன் தோளை அழுத்தி பிடிக்க அவனுக்கு வலி மீண்டும் உண்டாகி கத்தினான்..
“ஸ்ஸ்ஸ்ஸ்.. மன்னிக்கவும் ராஜகுமாரா..! என அவன் தோளில் இருந்து பிடியை விலக்கி,”கொஞ்சம் வலியை பொறுத்து கொள்ளுங்க..நாம் ஆசிரமத்தை நெருங்கி விட்டோம்..”
அவர்கள் ஆசிரமம் வரவும் பொழுது விடிந்து விட்டது.
ஆசிரம வாயிலேயே அவளின் தந்தை அன்றாட பூஜைக்கு தேவையான அலுவலை செய்து கொண்டு இருந்தார்..
அக்ரூரர் தன் மகளின் தோளில் கை போட்டு நடந்து வரும் நபரின் முகம் பார்த்த உடன் அதிர்ந்தார்.
வலிய சென்று ,பேராபத்தை வீட்டுக்கே, தன் மகள் கூட்டி கொண்டு வந்து இருக்கிறாளே..!என்று உள்ளுக்குள் நொந்தார்.
“விலாசினி….!என்ன காரியம் செய்து விட்டாய்..மகளே…”என அவர் கத்த அவளுக்கு ஒன்றும் புரியவில்லை..
மன்னர் காலம்
நீயா….!..அக்ரூரர் அதிர்ந்து கேட்க,
“நான் கனிஷ்க நாட்டு இளவரசன், விராடன் என்பது என் பெயர்”என்று அவன் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டான்..
விலாசினி குறுக்கிட்டு”தந்தையே..!அவர் யார் என்று பிறகு தெரிந்து கொள்ளலாம்.அவருக்கு கை அடிபட்டு உள்ளது..முதலில் அவருக்கு முதலுதவி செய்ய வேண்டும்”
அக்ரூரருக்கு அவன் யார் என்று பார்த்த உடனே தெரிந்து விட்டது.யார் இங்கு வரவேகூடாது,என நினைத்தோமோ..!இன்று அவனோட மகனே வந்து உள்ளான்.இது எங்கு கொண்டு போய் முடிய போகுதோ என்று தெரியலயே”என்று பயந்தார் .ஆனாலும் ஊர் எல்லையில் காவலுக்கு நிறுத்தி வைத்து இருந்த சப்த கன்னியரை நினைத்து கொஞ்சம் பயம் தெளிந்தது..
அதற்குள் விலாசினி ஆசிரமத்திற்குள் இருந்து அழைத்தாள்.”இன்னும் என்னப்பா வெளியே பண்ணிட்டு இருக்கீங்க.சீக்கிரம் உள்ளே வாங்க..”.
அக்ரூரர் சுற்றும் முற்றும் பார்க்க,அவரோட மகள் அவனை ஆசிரமத்தின் உள்ளே அழைத்து சென்று விட்டது தெரிந்தது..உடனே ஒரே ஓட்டமாக உள்ளே ஓடினார்.
முதலில் இவனுக்கு மருத்துவம் பார்த்து வெளியே விரட்ட வேண்டும் என பச்சிலை மூலிகைளை கொண்டு வந்து,அவன் கையை லேசாக தூக்க அவன் வலியில் கத்தினான்..
அக்ரூரர் அவனிடம்,”இங்கே பாருப்பா நான் உன்னோட உடைந்த கையை நேராக ஆக்க போறேன்..அப்ப தான் கட்டு போட முடியும்..கொஞ்சம் வலி இருக்கும் பொறுத்துக்க..”என்று கூறினார்.
உடனே விலாசினி அவன் இன்னொரு கையை மென்மையாக பிடிக்க அவனுக்கு ஜில்லென்று ஆனது..அவனிடம் அவள்”இங்கே பாருங்க வலி தெரியாம இருக்க ஏதாவது மரம்,செடி,கொடி பச்சையா இருக்கும் பொருளை பாருங்க வலி தெரியாது”என்று நகைத்து கொண்டே அவள் கூற,அவன் அதை விடுத்து கண் கொட்டாமல் அவள் முகத்தையே பார்த்தான்..
“ஆகா.. பவுர்ணமி நிலவை போன்று ஒளி வீசும் முகம் போல் அல்லவா இருக்கு இவள் முகம்..”என அவள் முகத்தையே பார்த்து கொண்டு இருந்தான்..
அவள் முகத்தையே கண் கொட்டாமல் பார்த்து கொண்டு இருக்க,அக்ரூரர் உடைந்த எலும்பை சரி செய்யும் பொழுது விராடனுக்கு வலியே தெரியவில்லை.
அக்ரூரர் கட்டு கட்டுவதற்காக மரக்கிளை எடுத்து வர வெளியே சென்றார்
“என்ன பச்சையா இருப்பதை பார்க்க சொன்னால் என்னையே பார்த்து கொண்டே இருக்கீங்க” என்று அவள் மெல்லிய குரலில் கேட்க,

ப்ரோ வேற இருந்தா குடுங்க இது ஏற்கனவே இருக்கு ப்ரோ No