காத்தவராயனால் ஒரு கட்டத்தில் தாக்குதல் நடத்த முடியாமல் தவிக்க,இருவர் கண்ணில் இருந்து மறைந்து இருந்தான்.ஆனால் அவன் பக்கத்தில் தான் இருக்கிறான் என அனுவுக்கும்,ஆராதனாவுக்கும் உள்ளுணர்வு சொன்னது…
ஆராதனாவுக்கு பூஜை அறை அருகே இருந்த தட்டில் கொட்டி வைக்கப்பட்டு இருந்த குங்குமம் கண்ணில் பட்டது..ஆராதனா அனுவிடம் குங்குமத்தை கண்ணால் சைகை காட்டினாள்.ஆராதனாவும்,அனுவும் மின்னல் போல் பாய்ந்து கைகளால் அள்ளி கொண்டு குங்குமத்தை நாலாபுறமும் மேலும் கீழும் வீசி எறிய அது காத்தவராயன் மீது பட்டு துடிதுடித்து கீழே விழுந்தான்..மறைந்து இருந்த குண்டலகேசி உருவம் கண்ணுக்கு இப்பொழுது தெரிந்தது.உடம்பில் காத்தவராயன் இருந்ததால் குங்குமம் அவன் உடம்பில் பட்டவுடன் அவனுக்கு தீப்பிடித்தது போல் எரிந்தது.காத்தவராயன் புழு போல் துடித்து அவன் உடலில் இருந்து வெளியேறி இரு பெண்களிடம் தோற்று புறமுதுகிட்டு ஓடினான்.அனு ஆராதானாவை கண்ணீர் மல்க அணைத்து கொண்டாள்..
மயக்கமாய் இருந்த குண்டலகேசி உடலை பார்த்து”ஆமா இந்த டம்மி பீசை என்ன பண்றது”என அனு கேட்க..
ஆராதனா,குண்டலகேசி உடம்பை தோளில் துண்டை போல போட்டு கொண்டு அவன் வீட்டில் வீசி எறிந்து விட்டு அனு வீட்டுக்கு திரும்பினாள்..
“ஆராதனா,பிளீஸ் நீ இங்கேயே இருடி ..எனக்கு அந்த காத்தவராயன் திரும்பி வருவானோ என்று பயமா இருக்கு..”
“நீ கவலைபடாதே அனு,நான் உன் கூட தான் இருப்பேன்..அந்த காத்தவராயனை அழிக்க நாம் கூடிய விரைவில் இன்னும் இருவரை கூட்டி கொண்டு மாயமலை செல்ல வேண்டி இருக்கும்..அதுவரை உன் வீடு தான் எனக்கு ஜாகை.ஆமா சாப்பாடு எல்லாம் நல்லா செய்வீயா நீ”என கேட்க,
அனு சிரித்து கொண்டு”நீ சாப்பிடுகிற ஹோட்டல் சாப்பாட்டை விட நான் சமைக்கிற உணவு நல்லா தான் இருக்கும். ஆமா மாறன் எங்கே”என கேட்க
“சென்னையில் இரவில் திறந்து இருக்கும் ஒரே கோவில் திருவேற்காடு தான் அனு.இரவில் நம் கூட தங்கி இருந்தால் நமக்கு கெட்ட பேர் வரும் என அவர் அங்கே தங்கி இருக்கான்.உனக்கு ஏதாவது பிரச்சினை வருமென தெரிந்து தான் அவன் என்னை அனுப்பிச்சான்..காலையில் அவனும் இங்கே வருவான்..”
“அந்த காத்தவராயன் மீண்டும் இரவு திரும்பி வந்தால்..!அனு கேட்க,
“அவன் நம்மகிட்ட வாங்கிய உதைக்கு இன்னும் ஒரு வாரம் திரும்பி கூட பார்க்க மாட்டான்” என ஆராதனா கூற அனுவின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது..

டேய் போதும் டா, எப்போதான் இந்த கதை முடியும்?