“ஆயா”என்று சகுந்தலா அழைக்க,உள்ளே இருந்து ஒரு பெண்மணி வந்து லிகிதாவின் உடைமைகளை வாங்கி கொண்டார்.
“இங்க பாரு லிகிதா,எக்காரணத்தை கொண்டும் நீ இந்த வீட்டை விட்டு வெளியே வரவே கூடாது.
“ஆன்டி,அப்போ எனக்கு எதுனா தேவையென்றால் யாரிடம் நான் கேட்பது..?என் வண்டி கூட ஹாஸ்டலில் இருக்கு.”
“உன் வண்டிக்கு ஒன்னும் ஆகாது..நான் பார்த்துக்கிறேன்..உனக்கு எதுனா தேவையென்றால் அந்த அம்மாகிட்ட சொல்லு,அந்த அம்மா வாங்கி தரும்..முதலில் உன் போனை எடு”
லிகிதா எடுத்து கொடுக்க,”இங்க பாரு லிகிதா,இந்த ஃபோன் வழியிலேயே ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டேன்..இதை திரும்ப ஆன் பண்ணாதே..”
“ஏன் ஆன்டி….?”
சகுந்தலா வேறொரு போனையும் கொடுத்து,இந்த ஒரு வாரத்துக்கு இதுதான் உன்னோட நம்பர்.உன்னோட போன் நம்பரை டிரேஸ் பண்ணி அந்த ரவுடி வரக்கூடும்..நீ நேற்று தப்பிச்சதே அந்த ஏழுமலையான் புண்ணியம்.நீ ஆஸ்திரேலியா போகும் பொழுது தான் உன் போனை நீ on பண்ணனும் சரியா..! நீ என்கிட்ட பேச வேண்டுமானால் சரி,இல்ல வேறு யார்கிட்ட பேச வேண்டுமானால் சரி,புது போனை மட்டும் யூஸ் பண்ணு..நான் சொல்றது எல்லாம் கவனம்..”
“ஆன்டி இருந்தாலும் இது ஜெயில் போல இருக்கு”
“எல்லாம் ஒரு வாரம் தானேடி செல்லம்.எனக்கு இன்னும் நிறைய வேலை இருக்கு..உன்னோடே யுனிவர்சிட்டி போய் சில பார்மாலிட்டி வேலை எல்லாம் பாக்கி இருக்கு..”என சில விண்ணப்பங்களில் லிகிதாவின் கையெழுத்து வாங்கி கொண்டாள்.
கஜாவின் பங்களாவிற்கு சரியாக பின்புறம் தான் தங்கி இருக்கிறோம் என லிகிதாவிற்கு நன்றாக தெரிந்தது,இருந்தாலும் அதை சொல்லி ஏன் சகுந்தலாவை வீண் களேபரத்திற்கு உள்ளாக்க வேண்டும் என அமைதியாக இருந்து விட்டாள்.
சகுந்தலா ஹாஸ்டலுக்கு திரும்பிய உடன் வாட்ச்மேன் இல்லாததை கண்டு”வாட்ச் மேன்…வாட்ச் மேன்..”என்று அழைத்தாள் ..
பதில் இல்லாமல் போக,தேடி கொண்டு ஹாஸ்டலுக்குள் நுழைய,கஜாவின் வலுவான கரங்கள் அவள் கழுத்தை சுற்றி பின்புறமாக சுற்றி வளைத்தன.
சகுந்தலா மூச்சுவிட முடியாமல் தடுமாற..,”ஒழுங்கா சொல்லு லிகிதா எங்கே”என கஜா மூர்க்கத்தனத்துடன் கேட்டான்..
“இங்கே பாரு,உனக்கு தேவை பொண்ணு தானே..அவளை விட்டு விடு..என்னை எடுத்துக்கோ..”என கெஞ்சினாள்..
கஜா விடாப்பிடியாக,”எனக்கு அவ தான் வேணும்,என்னை அடிச்சி அசிங்கப்படுத்திட்டு போய்ட்டா..அதுக்கு பதிலுக்கு பதில் அவ கற்பை நான் சூறையாடினா தான் சரியா இருக்கும்..ஒழுங்கா அவ இருக்கிற இடத்தை சொல்லு.இல்லை உன்னை இங்கேயே கொன்னுடுவேன்.”என மிரட்டினான்.
ஆனால் சகுந்தலா மிரட்டலுக்கு அஞ்சாமல்”நீ என்னை கொன்னாலும் சரி,கண்டிப்பா அவள் இருக்கும் இடத்தை நான் காட்டி கொடுக்க மாட்டேன்..”என அழுத்தமாக கூற
கஜா,சகுந்தலா தேவி கழுத்தை இறுக்கினான்..அவள் கால்கள் தரையில் துள்ளியது..கண்கள் இருண்டன.மூச்சு குழல் இறுகியது..அவள் கடைசி வரை உண்மை சொல்லாததை உணர்ந்த கஜா பிடியை விட்டான்..
சகுந்தலா தேவி தள்ளாடி கீழே விழுந்து கழுத்தை பிடித்து கொண்டு தொடர்ந்து இருமினாள்.
கஜா அவளை பார்த்து,”நீ சொல்லவில்லை என்றால் என்னால் கண்டுபிடிக்க முடியாது என நினைக்கிறீயா..அவ எங்கே இருக்கிறாள் என ஒரே நாளில் கண்டுபிடிச்சு அவளை ருசிக்கிறேன் பார்த்துட்டே இரு..”என கிளம்பினான்..
கஜா அவள் மொபைலை வைத்து டிரேஸ் செய்தான்,அவள் இருக்குமிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை..வேறுவழியின்றி காத்தவராயன் உதவியை நாட முடிவு செய்தான்..
கஜா எப்படியும் தன்னை கூப்பிடுவான் என நினைத்த காத்தவராயன் ஆவி,அனுவையும், லிகிதாவையும் ஒரு சேர அனுபவிக்க நினைத்து அனுவை தேடி சென்றது..
பூக்களை அனு மாலையாக பின்னி கொண்டு இருந்தாள்.ஒவ்வொரு பூவாக அவள் தொடுத்து கொண்டே இருக்க,தானாக சில பூக்கள் அவள் தொடுத்து கொண்டிருந்த சரத்தில் வந்து தானாக அமர்ந்தன..
காத்தவராயன் அருகில் இருப்பதை அனு உணர்ந்து கொண்டாள்.. அருவமாக இருந்த அவன் அனுவின் கழுத்தில் நக்கினான்..உடனே அனு துள்ளி எழுந்தாள்..கழுத்தை சாய்த்து தோள்களில் துடைத்து கொண்டு பின்வாங்கி நிற்க,
காத்தவராயன் ஆவி”என்ன அனு ஆச்சு உனக்கு..நான் தான் உன் காத்தவராயன் வந்து இருக்கேன்..”
அனு மிரண்ட விழிகளுடன் “நீ எங்கே இருக்கே என எனக்கு தெரியல காத்தவராயா…!என்கிட்ட வராதே…இதுவரை நான் செய்த தப்பே போதும்..என்னை விட்டுடு..தயவு செய்து வெளியே போ”என கத்தினாள்.
காத்தவராயன் தன் உருவை வெளிப்படுத்தினான்..
“என்ன அனு,நான் உனக்கு உண்மையான சொர்க்கத்தை காண்பிக்க வந்து இருக்கேன்..இப்போ போய் விளையாட்டு காண்பிச்சிகிட்டு..வா அனு நாம சுவாசபாசம் பண்ணுவோம்” என நெருங்கினான்.
கத்திரிக்கோலை எடுத்து கொண்டு அனு”காத்தவராயா கிட்ட வராதே..இல்லையெனில் உன்னை கொன்று விடுவேன்..”என அவள் கத்த,
காத்தவராயன் கடகடவென சிரித்தான்.
“ஏற்கனவே செத்தவனை போய் இப்போ கொல்லுவே என மிரட்டற..செம்ம நகைச்சுவை தான்..” என சிரித்தான்..

டேய் போதும் டா, எப்போதான் இந்த கதை முடியும்?