அதுவரை தியானத்தில் இருந்த முனிவர் கண் விழித்தார் .
அவன் முன் தோன்றி,”மூடனே…உன் அறிவிலித்தனத்தால் ஒரு மாபெரும் அழிவை ஏற்படுத்தி விட்டாய்..உன் முட்டாள்த்தனத்தால் ஏற்பட்ட பேரழிவை நீ தடுக்காவிடில் உன்னை நான் இக்கணமே சபித்து விடுவேன்”என அவர் முழங்க முதல் முறை அவன் மனம் நடுங்கியது.
அவன் வில்லினால் அம்பு விட்டு உருண்டு வரும் பாறையை தடுக்க பார்த்தான்..அவன் விட்ட அம்புகள் அந்த பாறையில் பட்டு ஒடிந்தன..பதட்டத்தில் அவனுக்கு என்ன செய்ய வேண்டும் என்றே தெரியவில்லை..அந்த நேரத்தில் மதிவதனி துணிந்து தன் ரதத்தை முன்னோக்கி செலுத்த சொன்னாள்.. தன் வில்லில் நாணை ஏற்றி வானை நோக்கி ஒரு அஸ்திரத்தை பிரயோகம் செய்தாள்..இந்த வில்லினால் அவளால் தெய்வீக அஸ்திரத்தை பிரயோகிக்க இயலாது என்று தெரியும்.அதனால் மிதமான வருணாஸ்திரத்தை உபயோகித்தாள்..சாதாரண வில்லில் இருந்து அதை எய்த காரணத்தினால் அவள் தோள்களில் இருந்து பெரும் சக்தியை உபயோகிக்க வேண்டி இருந்தது..அந்த வருணாஸ்திரம் ஓடிவந்த எரிமலை குழம்பின் மேல் மழையை பொழிவித்து கல்லாக்கியது.
மதிவதனிக்கு மயக்கம் வருவது போல் இருந்தது..அதை அடக்கி கொண்டு கடைசியாக தன் ஆத்ம பலத்தை ஒன்று திரட்டி அம்பின் நுனியில் அவள் ஆத்மபலத்தை குவித்து ஆத்மாஸ்திரம் (ராம பானம் போல்) எய்த உடன் அது ஒடி வந்த பாறையை அலேக்காக தூக்கி கொண்டு எரிமலை வாயின் மீது கொண்டு போய் சேர்த்தது…அதை பார்த்து முனிவரும்,காத்தவராயனும் பிரமித்து போனார்கள்..மதிவதனி வில்லும் அவளின் சக்தியை தாங்க முடியாமல் ஒடிந்து விழ, அவளும் மயங்கி கீழே விழுந்தாள்.
தன் தவவலிமையால் முயன்று வைத்த பாறையை இந்த பெண்ணால் எப்படி இந்த காரியத்தை அசாதாரணமாக செய்ய முடிந்தது என முனிவர் அதிசயித்து போனார்…
மதிவதனியின் தலையை தன் மடியில் வைத்து குண்டலத்தில் உள்ள நீரை தெளித்து அவளை எழுப்பினார் .
“எழுந்திரு மகளே…!”என முனிவர் சத்தம் எழுப்ப
மதிவதனி முகத்தில் உள்ள நீரை துடைத்து கொண்டு எழுந்து முனிவரின் முகத்தில் உள்ள தேஜஸை பார்த்த உடன் அவள் கண்கள் கலங்கியது.உடனே முனிவரின் காலில் விழுந்து வணங்கி நமஸ்கரித்தாள்..
“எழுந்திரு மகளே..!உனக்கு அநேக கோடி நன்மைகள் உண்டாகட்டும்.செயற்கரிய காரியத்தை நீ செய்து உள்ளாய்.பொங்கி வந்த எரிமலை குழம்பில் இருந்து ஏராளமான உயிர்களை காப்பாற்றி உள்ளாய்..என் ஆசிர்வாதம் முழுக்க உனக்கு உண்டு..இந்த பாறை அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் இருந்து நான் கொண்டு வந்தது..மற்ற பாறைகள் எல்லாம் எரிமலை குழம்பு வெப்பத்தில் உருகிவிடும்.ஆனால் திருவண்ணாமலையோ அக்னிதலமாக இருந்தது..அந்த மலையில் உள்ள பாறைகள் எந்த வெப்பத்தையும் தாங்க கூடிய ஒன்று..இந்த மாயமலையின் நலனுக்காக ஈசனின் அருள் பெற்று இந்த பாறையை நான் இங்கே கொண்டு வந்து வைத்தேன்.ஆனால் இந்த மூடனால் பெரும் அனர்த்தம் நிகழ இருந்தது.நல்லவேளை நீ அதை தடுத்து விட்டாய்.”
காத்தவராயனை பார்த்து முனிவர்,”மூடனே..இந்த தெய்வ மங்கையால் என் சாபத்தில் இருந்து தப்பித்தாய்..உன்னை விட இந்த பெண் சக்தி குறைந்தவள் ஆயினும் தன் சக்தியை நல்லதுக்கு பயன்படுத்தியதால் அவள் பக்கம் இறை அருள் நின்று அவளுக்கு வெற்றியை தேடி தந்தது..ஆனால் நீ அவளை விட பலம் அதிகம் உள்ளவன் ஆயினும் உன் ஆணவத்தால் நீ தோற்று உள்ளாய்.கிடைத்து இருக்கும் வாழ்க்கையை ஒழுங்கா வாழ பார்.இந்த பெண்ணுக்கு நீ விளைவிக்கும் ஒவ்வொரு துன்பமும் உன் ஆயுளை குறைக்கும் என மறவாதே…!நடந்த போட்டியில் நீ வெற்றி பெற்று விட்டாய் என நினைக்காதே..உண்மையில் வெற்றி பெற்றது இந்த பெண் தான்.”என அவர் கூறினார்..
அவர் சொன்ன அறிவுரை மதிவதனிக்கும் தான் இதுவரை செய்த தவறை புரிய வைத்தது..தான் என்ற ஆணவம் கொண்டு இருந்தவரை இவனை என்னால் வெல்ல முடியவில்லையே..தந்தை சொல் மீறினேன்.தேவையில்லாத போர் தொடுத்து ஏராளமான உயிரிழப்புக்கு காரணம் ஆகி விட்டேன்.என்னால் யாரையும் தோற்கடிக்க முடியும் என்ற ஆணவம் எனக்கு இருந்தது.இவனிடம் தோற்ற பிறகு தானே என் ஆணவம் என்னை விட்டு நீங்கி போனது.அதன் பிறகு தானே இவனை என்னால் மீண்டும் மீண்டும் வெற்றி கொள்ள முடிந்தது..நான் வாழ்க்கையின் முக்கியமான பாடத்தை புரிந்து கொண்டேன்.நான் என்ற ஆணவம் ஒழிந்தது..எனக்கு சரியான பாடம் புகட்டியதற்கு நன்றி இறைவா…!என மனதுக்குள் பிரார்த்தனை செய்தாள்.
காத்தவராயனால் முனிவரை எதுவும் செய்யமுடியவில்லை.அவரின் சக்தி பற்றி அவன் அறிந்தே இருந்தான்.அதனால் அமைதியாக இருந்தான்..
முனிவர் மதிவதனி பக்கம் திரும்பி,”மகளே அனைத்தும் காரணத்துடன் தான் உன் வாழ்க்கையில் நடைபெறுகிறது.அதனால் கவலை கொள்ள ஏதும் இல்லை.நீ எண்ணி இருக்கும் காரியம் ஈடேறிவிட்டது.உன் துன்பங்கள் எல்லாம் மறையும் காலம் நெருங்கி கொண்டு இருக்கிறது..நீ அரண்மனை சென்ற உடன் நீ எண்ணிய காரியம் நடந்து இருப்பதை உணர்ந்து கொள்வாய்”என மீண்டும் ஆசிர்வதித்தார்.
காத்தவராயன் மீண்டும் மதிவதனியிடம் தோற்று தலைகுனிந்து அரண்மனை திரும்பினான்..
அவன் நாட்டு மக்களே,மதிவதனியை விரும்ப தொடங்கி இருந்தனர்..மக்களுக்கு தேவையானவற்றை தன் அதிகாரத்தை பயன்படுத்தி முடிந்த அளவு நன்மையை செய்து இருந்ததால்,அவனுக்கு பயந்து கொடுத்த மரியாதையை அவளுக்கு அன்பால் கொடுத்தனர்.
காத்தவராயன் மனதுக்குள்,”இந்திரனை வெற்றி கொண்ட இந்திரஜித் சக்தி மட்டும் எனக்கு கிடைக்கட்டும்,பின் இவளை எளிதாக தோற்கடித்து காட்டுகிறேன்..அப்புறம் இந்த முனிவரே என்னை கண்டு வணங்க தான் வேண்டும்…பிறகு இந்த உலகமே எனக்கு அடிமை”என மனதுக்குள் கொக்கரித்தான்.
நிகழ் காலம்
காத்தவராயன் தோல்வி
கஜா உள்ளே புகுந்து ஹாஸ்டல் முழுக்க தேடினான்..யாருமே அகப்படவில்லை.வெறி கொண்டு கத்தினான்.. லிகிதா மொபைலுக்கு தொடர்ந்து ஃபோன் செய்தான்.அது எடுக்கப்படாமல் ஸ்விட்ச் ஆஃப் ஆனது. வாட்ச்மேனை அடித்து விசாரித்தான்.வார்டன்,லிகிதாவை அழைத்து சென்ற விசயம் மட்டுமே தெரிந்தது.ஆனால் எங்கு அழைத்து சென்றார் என்ற விசயம் தெரியவில்லை.ஒரு விசயம் மட்டும் வாட்ச்மேன் உளறினான்.வார்டன் எந்நேரமும் இங்கு திரும்பகூடும் என்ற தகவல் மட்டும் கிடைத்தது.அது போதுமே என கஜா காத்திருக்க ஆரம்பித்தான்..
லிகிதா அந்த பங்களாவுக்குள் தயங்கி தயங்கி உள்ளே நுழைந்தாள்.

டேய் போதும் டா, எப்போதான் இந்த கதை முடியும்?