“என்னது நான் உனக்கு சக்களத்தியா…!”
“ஆமா..ஒரு ஆளை ரெண்டு பேரு கல்யாணம் பண்ணிக்கிட்டா மட்டும் சக்களத்தி இல்ல..ஒரே ஆளை ரெண்டு பேரு விரும்பினா கூட சக்களத்தி தான்..”
“என்னடி சொல்றே.. லிக்கி..!நீயும் அந்த கார்த்திக்கை விரும்பறீயா…!”என பிரியங்கா சொல்ல வந்து நாக்கை கடித்து கொண்டாள்.
“இப்போ என்ன சொன்னே….என்ன சொன்னே..!பிரியா..!நீயும் விரும்புகிறாய் என்றால் அப்போ அவன் மேல உனக்கு ஆசை இருக்கு தானே..”
“அது வந்து…”என பிரியங்கா ராகம் இழுக்க,
“உண்மையை சொல்லுடி..அவன் இன்னமும் உன்னை தான் விரும்பிட்டு இருக்கான்.நீ ஆஸ்திரேலியா போகும் பொழுது அவன் உன்கிட்ட வந்து எவ்வளவு ஆசையா வந்து காதலை சொன்னான்..நீ ஏண்டி அப்போ நிராகரிச்சிட்டு போனே..”
“என் நிலைமை புரியாம பேசாதே லிக்கி..நான் கார்த்திக் மட்டும் கிடையாது,வேறு யாரையுமே காதலிக்க முடியாது..அப்படி ஒரு வேலையை என் மேல் உள்ள பிரியத்தால் என் அப்பா பாத்து வச்சி இருக்கார்..”
“அப்படி என்ன தான் பண்ணி வச்சி இருக்கார் என்கிட்ட சொல்லு…”
“லிக்கி..கார்த்திக் என்கிட்ட லவ் சொன்னதுக்கு அப்புறம் என்ன நடந்தது தெரியுமா…!என்னவென்று தெரியாத உருவமில்லாத ஒன்று என் கண் முன்னாடியே வந்து கார்த்திகை போட்டு புரட்டி எடுத்து விட்டது..வெறும் சத்தம் மட்டும் தான்டி கேட்டுச்சு.என் காதலை கூட சொல்ல முடியல..அப்புறம் அவனை கொண்டு போய் ஹாஸ்பிடலில் சேர்த்தேன்.நடந்ததை அப்படியே என் அப்பாகிட்ட போய் சொன்னால்,அப்போ தான் எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சது..”
“என்ன அது..?பிரியா..!
“ஏதோ என்னை பாதுகாக்க ஒரு யட்சியை,ஒரு மாந்த்ரீகன் மூலமா ஏவி விட்டு இருக்காங்க என்றே தெரிய வந்தது..உடனே அதை விலக்கி கொள்ள சொல்லி அந்த மாந்த்ரீகன்கிட்ட சொன்னால்,அவன் முடியாது என்கிறான்..அவன் ஏவி விட்டது சாதாரண யட்சி இல்ல..யட்சிகளின் அரசி சகோச்சி என்கிறான்.அது வந்த வேலையை முடிக்காமல் திரும்பாது என்கிறான்.முதல் தடவை என்கிட்ட யாராவது வந்து காதல் சொன்னால் அது எச்சரிக்கை மட்டும் செய்யும்..ஆனால் இரண்டாவது தடவை அவனே வந்து காதல் சொன்னால் உடல் பாகங்களை பிச்சி பிச்சி போட்டு விடும் என்று சொல்கிறான்..வேற வழி இல்லாம மனசை கல்லாக்கி கொண்டு அவன் காதலை நிராகரிச்சிட்டு வந்தேன்.இப்போ சொல்லுடி நான் செய்தது தப்பா..!”
“ஓ…இதில் இவ்வளவு விசயம் இருக்கா..!நீ அவன் காதலை நிராகரிச்சப்ப அதே நேரத்தில் நானும் அங்கே வந்தேன்டி..!சரி அவன் காதலை தான் நீ ஏற்றுகொள்ளவில்லையே,என் ரூட் கிளியர் என கொஞ்ச நாள் கழித்து நான் அவன்கிட்ட பொறுமையா என் காதலை சொன்னேன்..ஆனால் அவன் என் காதலை ஏற்று கொள்ள மறுத்து விட்டான்.அதனால் அவன் மேல இருந்த கோபம் உன்மேல திரும்பிடுச்சி….!
“சரிடி லிக்கி,நான் வேணுமின்னா உன் காதலை ஏற்றுகொள்ள சொல்லி அவன்கிட்ட பேசட்டும்மா..’
“என்னடி …நான் என்ன அவ்வளவு கேவலமா போய்ட்டேனா..ஒருத்தர் சிபாரிசால் வரக்கூடிய காதல் ஒன்னும் எனக்கு வேணாம்.எப்போ அவன் என் காதலை ஏற்றுகொள்ள வில்லையோ அப்பவே அவனை என் மனசில் இருந்து தூக்கி எறிஞ்சிட்டேன்.”
“சரிடி லிக்கி விஷயத்துக்கு வா, என்னிக்கும் இல்லாத அதிசயமா இன்னிக்கு ஏன் ஃபோன் பண்ணே..!”
“அதுவா பிரியா..!நானும் ஆஸ்திரேலியா வர போறேன்..
“அப்படியா..எப்போ..!
“ஆமான்டி..பிரியா..இன்னும் ஒரு வாரத்தில் கிளம்பி வர வேண்டி இருக்கும்..”
“சரிடி..வா..நான் ஏர்போர்ட் வந்து உன்னை பிக்கப் பண்ணிக்கிறேன்..இந்தியாவின் மரகத மங்கையை ஆஸ்திரேலியா வரவேற்கிறது..”
“Mmmmmmm..இந்தியாவின் தங்க மங்கையை தான் ஆஸ்திரேலியா ஏற்கனவே வரவேற்று விட்டதே..”என சிரித்து கொண்டே போனை வைத்தாள்.
“என்னடி ரெடியா..! சகுந்தலா தேவி வந்து கேட்க..
“நான் ரெடி ஆன்டி..இப்போ எங்கே போறோம்..”
“எல்லாம் அங்கே போன பிறகு தெரியும்..கிளம்பலாம் வா..”என காத்திருந்த டாக்ஸியில் கிளம்பினார்கள்..
டாக்ஸி வெளியேறிய ஐந்தாவது நிமிடம் கஜாவின் கார் ஹாஸ்டலுக்குள் நுழைந்தது..
கால் டாக்சி நுழைந்த ஏரியாவை பார்த்து லிகிதா அதிர்ச்சி அடைந்தாள்..

டேய் போதும் டா, எப்போதான் இந்த கதை முடியும்?