கஜா வியர்வை பொங்க எழுந்து, தட்டு தடுமாறி கழட்டி வீசி எறிந்து இருந்த ஆடைகளை அணிந்து கொண்டு,”இங்கே பாரு கண்ணு,நமக்குள்ள ஏதோ அவசர அவசரமா எல்லாம் நடந்து முடிஞ்சுடுச்சு..இதுக்கு மேல ஆற அமர ரசிச்சு உன்னை சுவைக்கணும்..என் கெஸ்ட் ஹவுஸ் உனக்கு தெரியும்..ஒழுங்கா ஒரு வாரம் வந்து உன் நினைவை எனக்கு கொடுத்துட்டு போ..அப்புறம் நான் உன்னை தொந்தரவு பண்ணவே மாட்டேன்..”என கிளம்பினான்.
பொழுது புலர்ந்தது.சகுந்தலா கண் விழித்தாள்.. அய்யயோ லிகிதா வந்து பார்த்தால் என்ன ஆவது?என அவசர அவசரமாக குளியலறையில் புகுந்து குளிக்க,கஜா ஏற்படுத்திய காயங்களுக்கு அது இதமாக இருந்தது..அடுத்து என்னென்ன செய்ய வேண்டும் மனதில் திட்டம் போட்டாள்.
லிகிதா கண்விழிக்க,அவள் சகுந்தலா அறையில் இருப்பதை பார்த்து திடுக்கிட்டாள்.
“நான் எப்படி இங்கே வந்தேன்..?”என கண்ணை கசக்கி கொண்டு சகுந்தலா அறைக்கு வர,அங்கே சகுந்தலா ரெடியா இருந்தாள்..
“ஆன்டி…நீங்க எப்படி இங்கே..?”
“இங்க பாரு சொல்றதுக்கு எதுவும் நேரமில்லை..குளிச்சி ரெடியாகி உன் திங்ஸ் எல்லாம் பேக் பண்ணு..நாம உடனே கிளம்பணும்..”
“ஏன் ஆன்டி?என்ன ஆச்சு..!நான் எப்படி உங்க ரூமுக்கு போனேன்..!”
“நான் எல்லாம் சொல்றேன்..நீ அடுத்த வாரம் ஆஸ்திரேலியா கிளம்புற..உன் அம்மாகிட்ட எல்லாம் பேசியாச்சு..இங்கே இருக்கிற டிரெய்னிங் உனக்கு அங்கே மாத்த சொல்லிட்டேன்..அதுவரை மட்டும் நான் சொல்ற இடத்தில் மட்டும் போய் தங்கு..”
“ஆன்டி நீங்க சொல்றது ஒண்ணுமே புரியல..நான் ஏன் ஆஸ்திரேலியா போகனும்”
“நான் சொல்றது எல்லாம் உன் நல்லதுக்கு தான்..நீ ஆஸ்திரேலியா போவதற்கு,இங்கே இருந்து உன்னோட படிப்பை அங்கே தொடர்வது சம்பந்தமா எனக்கு நிறைய வேலை இருக்கு..நீ உடனே ரெடியாகு..உன் ஹாஸ்பிடல் கூட நடுவுல போக வேணாம்.போ..போ..”என விரட்டினாள்.
காத்தவராயன் ஆவி,அனுவிடம் போகலாம் என நினைத்தது..ஆனால் லிகிதா இன்னும் ஒருவாரம் தான் இங்கே இருக்க போகிறாள்..இவளை முதலில் மடக்க வேண்டும் என கஜாவிடம் சென்றது..
கஜாவின் முன்பு காத்தவராயன் ஆவி தோன்றியது..
“வாயா வா…என்னவோ என்னால் அவளை தொட முடியாது என்று சொன்னாயே…!நேற்று இரவு நான் அவளை ஆசை தீர அனுபவித்து விட்டேன் .”
காத்தவராயன் ஆவி கடகடவென சிரிக்க,கஜா புரியாமல் விழித்தான் .
“முட்டாளே..!இப்போ கூட நீ தொட்டது லிகிதாவை அல்ல..அங்கு இருக்கும் ஹாஸ்டல் வார்டனை..”
“என்ன உளறுகிறாய் காத்தவராயா..”
“நான் சொல்றது 100% நிஜம்..நீ இப்போ ஹாஸ்டல் போனால் உனக்கு உண்மை புரியும்..”
“அப்பவே எனக்கு சந்தேகம் தோணுச்சு..இருட்டில் ஒன்னும் தெரியல.. ச்சே இப்படி சறுக்கிட்டேனே..”
கஜா உடனே ஹாஸ்டலுக்கு ஓடினான்..
லிகிதா குளித்து விட்டு வந்த உடன் செய்த முதல் ஃபோன் கால் பிரியங்காவிற்கு..
“ஹாய் பிரியங்கா எப்படி இருக்கே…”
“வாடி வா..லிக்கி..! இப்போ தான் என்கிட்ட பேச தோணுதா..எத்தனை முறை நான் உனக்கு ஃபோன் பண்ணி இருப்பேன்.ஒரு தடவையாவது என் போனை எடுத்து பேசி இருப்பியாடி …அப்படி என்னடி என்மேல கோபம்..?
“எல்லாம் சக்களத்தி மேல இருக்கிற கோபம் தான் ..”

டேய் போதும் டா, எப்போதான் இந்த கதை முடியும்?