“அந்த கஜாவிடம் நான் தப்பித்து வந்த ஏரியா அல்லவா இது” என நினைத்தாள்.
“வா லிகிதா”என்று சகுந்தலா தேவி அழைக்க லிகிதா தயங்கி தயங்கி அந்த வீட்டுக்குள் நுழைந்தாள்.
காத்தவராயன் அடுத்து மன்னர் மற்றும் நிகழ்காலத்தில் ஒருசேர தோல்வியை சந்திக்க போகிறான்…மன்னர் காலத்தில் மதிவதனியிடம். நிகழ் காலத்தில் யாரிடம்..?
நிகழ் காலம்
காத்தவராயன் தோல்வி
காலங்கள் வேகமாக சுழன்றது..மதிவதனியை அவ்வப்பொழுது அவன் அவமானப்படுத்தி சுவைத்து இருந்தாலும்,உள்ளூர அவனுக்கு மனசு அரித்து கொண்டே இருந்தது.
எப்படியாவது அவளை ஒருமுறை வில்வித்தை போட்டியில் தோற்கடிக்க வேண்டும் என அவன் மனம் துடித்து கொண்டு இருந்தது..
கர்ணன் பரசுராமரிடம் இருந்து விஜயவில் வரமாக பெற்று இருந்தான்..ஆனால் அதை அவன் எந்த போரிலும் உபயோகிக்கவே இல்லை.குருஷேத்திர போரில் அவன் தலைமையேற்று நடந்த 2 நாள் போரில் மட்டும் தான் அந்த வில்லை உபயோகித்தான்.அந்த விஜயவில் சிவனால் பரசுராமருக்கு கொடுக்கப்பட்டு பின் கர்ணனுக்கு கிடைத்தது..அந்த வில் கையில் இருக்கும் வரை அவனை யாரும் வெல்ல முடியாது என கண்ணனுக்கு நன்றாக தெரியும்..அதனால் தான் தேர் கால் இடறி அவன் நிராயுதபாணியாக இருக்கும் பொழுது தான் கண்ணன் அர்ஜுனனை வைத்து அவனை கொல்ல வைத்தது..கர்ணன் ஏன் மற்ற போர்களில் விஜயதனுஷை உபயோகிக்கவில்லை என்றால் அவன் பெரும்பாலும் தன் வில் வித்தையை தான் நம்பி இருந்தான்..என்ன தான் விஜயதனுசு பயன்படுத்தவில்லை என்றாலும் மற்ற போர்களில் கூட கர்ணன் தனது வில்திறமை மூலம் ஜராசந்தன் போன்ற பெரிய வீரர்களை அனாசாயமாக தோற்கடித்து உள்ளான்..விஜயவில் இல்லையென்றாலும் கர்ணன் சிறந்த வீரன் தான்.அதே போல் மதிவதனியிடம் தெய்வீக வில் இல்லையென்றாலும் அவள் வில் வித்தையில் கொஞ்சம் கூட சளைத்தவள் இல்லை..அதை காத்தவராயன் கொஞ்சம் கூட புரிந்து கொள்ளவில்லை.
ஒரு இனிய காலை வேளையில் காத்தவராயன் மதிவதனியிடம்,”என்னை நீ தோற்கடித்ததில் இருந்து என் மனம் உள்ளுக்குள் குமைந்து கொண்டே இருக்கிறது மதி..!நமக்குள் மீண்டும் ஒரு போட்டி வைத்து கொள்ளலாமா..!என்று அவன் கேட்க,
மதிவதனி தோள்களும் திணவு எடுத்தது..நானும் போரிட்டு நாளாகி விட்டதே..! ஒரு பயிற்சிக்காவது போரிட வேண்டும் என தோன்றியது..
“சரி எங்கு போரிடலாம்.நீயே கூறு..!”
“தக்சீலா சென்று போரிடலாம் மதிவதனி..”
“தக்சீலாவா..” அது என்ன இடம்..?
தக்சீலா என்பது தென்னகத்தில் உள்ள ஒரேயொரு எரிமலை.அந்த எரிமலையின் பெயரே அந்த இடத்தின் பெயராகி விட்டது. எரிமலை பக்கத்தில் யாரும் அங்கே வசிப்பது இல்லை..அங்கே நாம் போட்டியிட வசதியான இடம் அது..”
இருவரும் போர்க்கோலம் பூண்டு தத்தம் ரதங்களில் அமர்ந்து குதிரையை முடுக்கி தக்சீலாவை நோக்கி விரைந்தார்கள்.
தக்சீலா, மாயமலையின் இயற்கை அழகை காட்டிலும் இன்னும் அழகாக இருந்தது.தக்சீலாவின் எரிமலை குழம்பில் இருந்து வெளிவந்த தாதுக்கள்,மற்றும் சத்துக்களால் செடி,கொடிகள் மிக மிக செழிப்பாக இருந்தது..இன்னும் சொல்ல போனால் இங்கு இருக்கும் தாதுக்கள் மற்றும் சத்துக்கள் உயிரினங்கள் வழியே இயற்கையாக மாயமலைக்கு கடத்தப்பட்டதால் தான் அந்த மாயமலையே செழிப்பாகவும்,அடர்த்தியாகவும் இருந்தது.ஆனால் எரிமலை அருகே மட்டும் உண்டான வெப்பத்தில் வெட்ட வெளியாக இருந்தது..அங்கு ரதத்தை காத்தவராயன் நிறுத்தினான்.
மதிவதனி முதலில் வில்லை தொட்டு வணங்கி விட்டு எடுத்து பார்த்தாள்.அதன் நடுப்பகுதியில் கை வைத்து அழுத்தி அதன் கெட்டி தன்மையை ஆராய்ந்தாள்.அதற்கேற்றவாறு தனது நாணின் அழுத்தத்தை சரி செய்து கொண்டாள். நாணிணை பின்பக்கமாக இழுத்து அதன் இழுவிசையை சரிபார்த்து கொண்டு “தயார் “என்றாள்.
காத்தவராயன் இதை எதையும் செய்யவில்லை..ஆரம்பத்திலேயே மூர்க்கத்தனமாக பாணங்களை விட ஆரம்பித்தான்..ஆனால் மதிவதனி எளிதாக அவன் அம்புகளை வெட்டி வீழ்த்தி கொண்டு இருந்தாள்.ஆனால் அவள் விட்ட பாணங்கள் அவன் வில்லின் நாணை அறுத்ததே ஒழிய,அவன் உடலை துளைக்கவில்லை..ஆனால் அவன் விட்ட பாணங்கள் மதிவதனி மேனியை கூட நெருங்கவில்லை.அந்த அளவு திறமையாக அவன் அம்புகளை தடுத்து கொண்டே இருந்தாள்.சாதாரண வில் அவள் கையில் இருக்கும் பொழுதே காத்தவராயனால் அவளை கொஞ்சம் கூட வெல்ல முடியவில்லை..நேரம் ஆக ஆக அவளை வீழ்த்த முடியவில்லை என்று வெறி வந்தவனாய் அம்புகளை கன்னாபின்னாவென்று விட ஆரம்பித்தான்..அப்படி விட்ட பாணங்கள் இம்சை அரசன் 23 ம் புலிகேசி வடிவேலு விட்ட அம்புகள் போல் இலக்கு தவறி எங்கெங்கோ போய் விழுந்தது.அதில் ஒன்று தக்சீலா என்ற எரிமலை வாய் மீது இருந்த பாறை மீது போய் விழுந்தது..அந்த எரிமலை அடிக்கடி பொங்கும் மலை,அதனால் சேதம் அதிகமாகிறது என ஒரு முனிவர் எரிமலையின் வாயை ஒரு பாறை கொண்டு கச்சிதமாக மூடி இருந்தார்..
மதிவதனிக்கு அவள் குரு சொன்ன வார்த்தைகள் காதில் ஒலித்தது..இப்பவும் நான் அவனை வெற்றி கொண்டால் காத்தவராயனுக்கு என் மீது வன்மம் தான் அதிகம் ஆகும் என அவள் உணர்ந்தாள்..அவன் விட்ட அம்பு அவள் வில்லை தாக்க வருவதை உணர்ந்து கொண்ட மதிவதனி அதற்கு பதில் அம்பு விடாமல் விட்டுகொடுக்க அது அவள் வில்லின் நாணை அறுத்தெரிந்தது..
காத்தவராயன் வெற்றியில் துள்ளி குதித்தான்.ஆனால் அவன் மகிழ்ச்சி சில நொடிகள் கூட நிலைக்கவில்லை..அவன் தவற விட்டு இருந்த அம்பால் எரிமலை வாய் மீது இருந்த பாறை தள்ளாடி கொண்டு இருந்தது..அவன் துள்ளி குதித்த நொடியில் அது உருண்டு கீழே உருண்டு வர ஆரம்பித்தது..கூடவே இத்தனை வருடம் பாறையால் அடங்கி இருந்த எரிமலை குழம்பும் பொங்கி வழிந்து கீழே ஒடி வந்தது…

டேய் போதும் டா, எப்போதான் இந்த கதை முடியும்?