நிகழ் காலம்
“இப்போ எதுக்கு.. என்னை காப்பாற்றினீங்க…”என காப்பாற்றிய இருவரிடம் அனு எரிந்து விழுந்தாள்.
“அனு ஒரு நிமிசம் நான் சொல்றதை கேளுங்க…”ஆராதனா சொல்ல
“என் பேரு உங்களுக்கு எப்படி தெரியும்..!நீங்க யாரு..?
“என் பேரு ஆராதனா,நான் ஒரு நியூஸ் ரிப்போர்ட்டர்..”
“நீங்க யாராவது இருங்க..என் பிரச்சினையை புரியாம என்னை நீங்க காப்பாற்றி இருக்கீங்க..இப்போ எனக்கு இருக்கும் பிரச்சினையில் நான் விடுபட வேண்டுமென்றால் எனக்கு சாவதை தவிர வேறு வழி இல்லை..நான் போறேன்..”
“காத்தவராயன்” என்று ஆராதனா சொன்னவுடன் அனு நின்றாள்..
திரும்பி பார்த்து மீண்டும் அவளிடம் வந்து “காத்தவராயனை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?”என அனு கேட்க,
“எனக்கு எல்லாம் தெரியும் அனு..இந்த பிரச்சினையில் இருந்து வெளிவர என்னால் உங்களுக்கு உதவ முடியும்.. கொஞ்சம் உட்கார்ந்து விரிவா பேசலாமா…!”
“சரி வாங்க …”
எல்லோரும் ஒரு ரெஸ்டாரன்ட் ஃபேமிலி ரூமில் உட்கார்ந்தனர்..
மாறன் புட் மட்டும் ஆர்டர் செய்து, பேரர் சென்ற உடன் பேச ஆரம்பித்தான்.
“அனு இப்போ உங்க பிரச்சினையை எளிதாக தீர்க்க முடியும்.மேலும் உங்க கையால தான் காத்தவராயன் ஆவியை அழிக்க முடியும்.”
“என்ன சொல்றீங்க மிஸ்டர்..காத்தவராயனை எதுக்கு நான் அழிக்கணும்..!அதுவும் அவன் எனக்கு இதுவரை நன்மை தான் செய்து இருக்கான்.அப்படிப்பட்ட ஒருத்தனுக்கு நான் எப்படி தீமை செய்ய முடியும்…”
“அப்போ எதுக்கு தற்கொலைக்கு போனீங்க.. அனு”
“அதுவந்து நான் என் புருஷனுக்கு துரோகம் செய்த மாதிரி என் மனசாட்சி என்னை உறுத்துச்சு.மேலும் ..”
பேரர் வரும் சத்தம் கேட்டு மாறன் உடனே அமைதியாக இருக்கும் படி அனுவிடம் செய்கை செய்தான்.
பேரர் வந்து உணவை வைத்து விட்டு போன உடன்..”இப்போ சொல்லுங்க அனு..அப்படி என்ன உங்க புருஷனுக்கு துரோகத்தை செய்தீங்க..காத்தவராயன் அப்படி என்ன உங்களுக்கு நல்லது செய்தான்..”
“இல்லை அதை என்னால சொல்ல முடியாது.அது என்னோட பெர்சனல்..நான் போறேன்”என்று அனு எழுந்தாள்.
ஆராதனா உடனே,”காத்தவராயனிடம் நான் எப்படி பாதிக்கபட்டேனோ அது போல தான் நீங்களும் அவனிடம் பாதிக்கப்பட்டு இருக்கீங்க…”என்று அவள் சொன்ன உடன் அனு புரியாமல் பார்த்தாள்.
“நீ என்ன சொல்றே ஆராதனா புரியல..”
“அவனிடம் மயங்கி நான் உடலுறவு வைத்துக் கொண்டதை போல தான் நீங்களும் அவனிடம் உடலுறவு வைத்து கொண்டு உள்ளீர்கள் என்று சொன்னேன்”
அனு திடுக்கிட்டு அமர்ந்தாள்..
“என்ன சொல்றே ஆராதனா..காத்தவராயன் உன்னிடமும் உடலுறவு வைத்து கொண்டானா…நீ சொல்வதை என்னால நம்பவே முடியல”
“அவன் வரலாறை கேட்டால் உனக்கு திகைப்பா இருக்காது அனு.அவன் மலருக்கு மலர் தாவும் வண்டு..அவன் உயிரோடு இருந்த காலத்திலேயே சரியான பெண் பித்தன்.அழகான பெண்களுக்காகவே ஒவ்வொரு நாட்டின் மீது போர் தொடுப்பான்.அப்படி அவன் கையில் சிக்கியவள் தான் மதிவதனி..அவளை மனைவியாக அடைந்து அவள் மூலம் பிறந்த அவன் குழந்தையே கொன்று விட்டான்..அதனால் தான் மதிவதனி அவனை கொன்று விட்டாள்..ஆனால் அவன் ஆவியான பிறகும் அவன் காம வேட்கை அடங்கவில்லை..வேறு வேறு உடல்களில் புகுந்து கண்ணில் கண்ட பெண்களை எல்லாம் அனுபவித்தான்..அவனோட அட்டகாசங்கள் எல்லை மீறி கடைசியில் ஒரு முனிவரின் மகளையே வேட்டையாடி விட்டான்..அதனால் அந்த முனிவர் அவனுக்கு உடல் கிடைத்தால் தானே அவன் உடலுறவு கொள்ள முடியும் என நினைத்து, உடலுக்கு சொந்தக்காரன் சம்மதமில்லாமல் நீ யார் உடலிலும் நுழைய முடியாது என சபித்து விட்டு அவனை ஒரு குடுவையில் அடைத்து விட்டார்..நான் தான் தெரியாமல் அந்த குடுவையில் இருந்த அவனை விடுவித்து முதல்பலி நானே ஆகிவிட்டேன்.
இதைக்கேட்டு அனு,”நீ சொல்வது எல்லாம் ஏதோ ஒரு விட்டலாச்சார்யா படம் பார்ப்பது போல இருக்கு.எதுக்கு ஒருவர் அனுமதி கொடுத்தால் மட்டும் உடலில் புக முடியும் என அவனுக்கு சாபம் கொடுக்கணும்.அவனை சபித்த முனிவர் யார் உடலிலும் நுழைய முடியாது என சாபம் கொடுத்து இருந்தால் நமக்கு இந்த நிலைமையே வந்து இருக்காதே ஆராதனா”
மாறன் அவளிடம் “நம்மோட முன்னோர்கள் நம்மை விட புத்திசாலிகள் அனு..காத்தவராயன் நீ நினைப்பதை போல சாதாரண ஆவி எல்லாம் கிடையாது.அதர்வண வேதம் தெரிந்தவன்.. காளி உபாசகன் வேறு.அவனை அழிப்பது அவ்வளவு சாதாரண விசயம் இல்லை.அவனை அழிக்க அவன் உடலுறவு கொண்ட நான்கு பெண்களால் தான் முடியும்.அந்த நாலு பெண்களில் இருவர்,நீ மற்றும் ஆராதனா.உங்களோடு உறவு கொள்ள அவனுக்கு உடல் தேவை.அதை அறிந்து தான் அவர் அந்த மாதிரி சாபம் கொடுத்து இருப்பார்.அவன் வரும் அமாவாசை அன்று தன் உடலை பெற ஒரு யாகம் நடத்த உள்ளான்.அப்படி அவன் உடலை பெற்று விட்டால் முனிவர் கொடுத்த சாபம் பலன் அற்று போய்விடும்.அவன் வேறு உடலில் நுழைய அனுமதி தேவையே இல்லை.ஏனெனில் அவன் உடலை வைத்தே எந்த பெண்ணையும் மயக்கி அவளுடன் உடலுறவு கொள்ள முடியும்.அவன் பெற போவது வெறும் உடலை மட்டுமல்ல அனு,கூடவே ஏகப்பட்ட சக்திகளை..அதற்கு பிறகு அவனை அழிக்கவே முடியாது..இந்த உலகில் அவனால் நடக்க போகும் அழிவுகளை கற்பனை கூட பண்ணி பார்க்க முடியாது. ”
அனு அவனிடம்”நீ சொல்வதை பார்த்தால் அவன் மிகவும் சக்திமிக்கவன் என்று சொல்றே.ஆவியா வேற இருக்கான்.சாதாரண பெண்களான நாங்கள் எப்படி அவனை கொல்ல முடியும்…”
மாறன் அவளிடம்”காத்தவராயன் விதி,அமாவாசை அன்று தான் முடியும் என விதிக்கப்பட்டு இருக்கு..அவன் பூமியில் இருந்து அமாவாசை அன்று தான் வெளியேற வேண்டும் என்பது போல் வரம் வாங்கி உள்ளான்.அமாவாசை அன்று என்ற தெய்வ சக்தியும் வேலை செய்யாது..அவன் உங்களிடம் உறவு கொண்டதால் அவனின் சக்தி உங்களிடம் பரிமாற்றம் அடைந்து உள்ளது..அதை கொண்டு தான் அவனை வீழ்த்த முடியும்..”..

Dei thayavu senji intha story ah stop pannu da.. kevalama iruku..itha vera ivlo episode potutu iruka