சுரங்கப்பாதையில் அவ்வளவு தான் கொண்டு செல்ல முடியும் தளபதி..அதிகமான வீரர்களை கொண்டு சென்றால் நெரிசல் ஏற்பட்டு வீண் தாமதம் ஆகி அதுவே எதிரிகளின் வெற்றிக்கு வழி வகுத்து விடும்…நான் சொன்னபடி செய்யுங்கள்..நான் இதுவரை பயன்படுத்தாத ஆயுதத்தை இன்று போரில் பயன்படுத்த போகிறேன்..வெற்றி நமதே…! “என தன் வில்லை எடுத்து கொண்டு கிளம்பினாள்..
மாயமலை வீரர்கள் முடிந்த வரை எதிரிகள் பாலம் அமைக்கவிடாமல் கோட்டை சுவர் மீது இருந்து தடுத்து கொண்டு இருந்தனர்..இரண்டு பக்கமும் வீரர்கள் பலியாகி கொண்டே இருந்தனர்..அவர்கள் பக்கம் வீரர்கள் அதிகமாக இருந்ததால் கணைகள் அதிகமாக மாயமலை வீரர்கள் மீது வந்து விழுந்தன..அதில் மாயமலை வீரர்கள் அதிகமாக பலியாகினர்…
மதிவதனி,சுரங்கப்பாதையில் நுழைந்து வெளிவருவதற்குள் ஒரு நாழிகை ஆகி விட்டது..
“தேவி விடிவதற்கு ஒரு நாழிகைக்கும் குறைவான நேரமே உள்ளது..”என மதிவதனி கூட இருந்த உபதளபதி கூறினான்..
“நமக்கு அது போதும்.”மதிவதனி கூறினாள்..
போர் முரசை மதிவதனி ஒலிக்க படையின் பின்பக்கம் வந்து ஓசை வந்ததை கண்டு எதிரி நாட்டு மன்னன் அதிர்ந்தான்..
பின்னாடி திரும்பி பார்க்க சொற்ப வீரர்கள் மட்டும் இருப்பதை பார்த்து,உடனே குந்தவை நாட்டு மன்னன் விதர்ப நாட்டு சேனையிடம் அவர்களை நோக்கி போரிட சொன்னான்..
பாதி படைபிரிவு பிரிந்து மதிவதனி படை பிரிவை நோக்கி ஓடி வந்தது..பெரிய சுறா வாயை திறந்து இரையை விழுங்க வருவது போல் எதிரி படைப்பிரிவு மதிவதனி படையை நெருங்கியது.
மதிவதனி பக்கம் இருந்தவர்கள்,அவ்வளவு தான் தொலைந்தோம் என நினைத்தார்கள்.
மதிவதனி தன் வில்லை எடுத்து அரண்யா அஸ்திரத்தை ஏவினாள்.அது அப்படியே சில அடிகள் பாய்ந்து பல்லாயிரம் அம்புகளாக மாறி ஒன்றாக பிணைந்து அம்புகளால் சுவர் போன்ற ஒரு தடுப்பை உருவாக்கியது…கையில் உள்ள ஆயுதங்களை கொண்டு எதிரி நாட்டு வீரர்கள் அதை உடைக்க முயன்றனர்.ஆனால் அவர்களால் கிஞ்சித்தும் உடைக்க முடியவில்லை.மீண்டும் ஒரு அரண்யா அஸ்திரத்தை மதிவதனி ஏவினாள்.அது அவர்கள் படை பிரிவில் நடுவில் விழுந்து தடுப்பு உருவாகி படைப்பிரிவை இரண்டாக பிரித்தது.அதே போன்று இன்னும் ஐந்து அரண்யா அஸ்திரங்களை ஏவ,மூன்று லட்சம் வீரர்கள் சிறு சிறு பிரிவாக பிரிக்கபட்டனர்..இதை மாயமலை வீரர்கள் ஆச்சரியமாக பார்த்தனர்..
“என்ன அப்படி பார்க்கறீங்க..போரிட தயாராகுங்கள்..”என கட்டளையிட்டாள்.
முதலில் விட்ட அரண்யா அஸ்திரத்திற்கான மாற்று அஸ்திரத்தை மதிவதனி ஏவ,அது உடைந்து முதல் படைப்பிரிவு வெளியே வந்தனர்… மாயமலை வீரர்கள் முன்னேற, தன் குதிரையில் அமர்ந்து இருந்த மதிவதனி கிருபாக்னீ என்ற அஸ்திரத்தை எய்தாள்.அவள் வில்லில் இருந்து புறப்படும் பொழுது ஒன்றாக புறப்பட்ட அஸ்திரம் ஆயிரக்கணக்கான அம்புகளாக மாறி பல்லாயிரம் வீரர்களை கொன்று குவித்து விட்டது…அதாவது மாயமலை வீரர்கள் படைபிரிவை நெருங்கும் முன்பே…அவர்கள் போரிட அவசியம் ஏற்படவே இல்லை.அடுத்து ஆக்னேயா அஸ்திரத்தை ஏவ பல பெரிய பெரிய பாறைகள் குந்தவை நாட்டு வீரர்கள் மீது விழுந்து இறந்தனர்.
அப்படியே ஒவ்வொரு அரண்யா அஸ்திரமாக உடைத்து,ஒவ்வொரு படைப்பிரிவாக கிருபாக்னீ அஸ்திரம், ஆக்நேயா அஸ்திரம் மூலம் கொன்று கொண்டே வந்தாள்…சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
எதிரி நாட்டு வீரர்களை தளபதியும் முன்னோக்கி தாக்கி கொண்டே வர,பின்பக்கமாய் மதிவதனி தாக்க,பின்வாங்க முடியாமல் குந்தவை நாட்டு மன்னன் நடுவில் சிக்கி தவித்தான்..கடைசியில் மதிவதனி மோகனாஸ்திரத்தை ஏவினாள்..அது அங்கு இருக்கும் யானைகளை மதம் பிடிக்க செய்து தங்கள் வீரர்களையே கொன்றது..
தன் படையில் பெரும்பகுதி, மடிவதை கண்டு காப்பாற்ற முடியாமல் குந்தவை நாட்டு மன்னன் திணறினான்..அவன் விட்ட அம்புகளுக்கு அனாசயமாக பதில் அம்புகளால் வெட்டி தள்ளி அவன் வில்லை ஒடித்தாள்.அவன் கீரிடத்தை குறிவைத்து இடித்து தள்ளினாள்.. ரதத்தில் இருந்த குதிரை ஒட்டியை அம்பை விட்டு கொன்றாள்.ரத சக்கரத்தை ஒடித்து அவனை தரையில் தள்ளி,அவன் கழுத்துக்கு அம்பை குறிவைக்க,குந்தவை மன்னன் தரையில் விழுந்து மன்னிப்பு கேட்டு கதறினான்..
“தேவி,சரணம் சரணம்…என்னை விட்டு விடுங்கள்…தங்கள் சக்தி அறியாமல் உங்களிடம் சமர் புரிய வந்தது எனது மாபெரும் தவறு தான்.அடியேனை மன்னியுங்கள்..நான் வெறும் அம்பு தான்..என்னை எய்தவர் வேறு ஒருவர்…என்னை விட்டு விடுங்கள்..நானும் என் வீரர்களும் இப்பவே சரணடைந்து விடுகிறோம்…”என கீழே விழுந்து மன்றாடினான்..
அதை கேட்டு உடனே அவன் வீரர்கள் உடனே கையில் இருந்த ஆயுதத்தை போட்டு சரணடைந்து விட்டனர்..
“சொல் யார் உன்னை இங்கே அனுப்பியது?எப்படி உனக்கு மாயமலையை முற்றுகை இடும் தைரியம் வந்தது..?என தளபதி அவன் கழுத்தில் கத்தி வைத்து கேட்டான்…
அவன் மதிவதனியை பார்த்து,”தேவி தங்கள் தந்தை தான் இங்கே அனுப்பி வைத்தார்..அவர் உங்களை கொல்ல சொல்லி ஆணை..”
இதை கேட்டு மதிவதனி தலையில் இடி விழுந்தது…
“என் தந்தையார் கண்டிப்பா அவ்வாறு சொல்லி இருக்க மாட்டார்.நீ பொய் சொல்கிறாய்”என கத்தினாள்..
“ஈசன் மேல் சத்தியமாக சொல்கிறேன்.நான் சொல்வது முற்றிலும் உண்மை.காத்தவராயனின் கரு உங்களுக்குள் உருவாகி இருக்கிறதாம்.ஒரு அரக்கனின் வாரிசை எப்படி தன் வம்சத்தில் உருவாகலாம் என்று உங்களை கொன்று வரச்சொன்னார்..”
மதிவதனி தலைகுனிந்தாள்.
பின் தளபதியிடம்,”இவரை சிறைப்பிடித்து அழைத்து செல்லுங்கள்..”என்று தளுதளுத்த குரலில் கூறினாள்.
மனதளவில் மதிவதனி நொறுங்கி போய் இருந்தாள்..
“தளபதி,நான் உடனே மகேந்திரபுரி சென்று என் தந்தையை காண வேண்டும்..சில வீரர்கள் மட்டும் நான் உடன் அழைத்து செல்கிறேன்..”
“தேவி,இதுவரை தாங்கள் பயன்படுத்திய போர் முறையை நாங்கள் கண்டதே இல்லை.சில மணிபொழுதில் ஒரு படையை ஒற்றை ஆளாக வீழ்த்தி விட்டீர்களே..!எப்படி..?”என தளபதி கேட்டான்.
“இந்த போர்முறை எனக்கு என் குரு அஸ்வத்தாமனால் பயிற்றுவிக்கப்பட்டது.இந்த தெய்வீக அஸ்திரங்கள் யாவும் அவர் சொல்லி கொடுத்தது…ஆனால் இன்னும் இதைவிட பல வியத்தகு அஸ்திரங்களை உங்கள் முன்னோர்கள் வைத்து இருந்தனர்.அதில் ஒருவன் இராவணன் மகன் இந்திரஜித்..நான் விட்ட அஸ்திரங்களை அவன் நொடிப்பொழுதில் பஸ்மம் ஆக்க கூடியவன்.நான் வியந்து பார்க்கும் அஸ்திரம் ஒன்று உள்ளது.அது மகாமாயா அஸ்திரம்..அந்த அஸ்திரத்தை அறிந்தவர்கள் இந்த பிரபஞ்சத்தில் இருவர் மட்டுமே..ஒருவர் சிவன்..இன்னொருவர் ராமர்..அந்த அஸ்திரத்தை ஏவினால் எத்தனை லட்சம் வீரர்கள் உள்ளனரோ,அத்தனை பேர் முன்னாடி நம் உருவம் தோன்றி போரிட்டு அவர்களை அழிக்கும்.அதை ராமர் தான் முதன்முதலில் இராவணன் போரின் போது பயன்படுத்தி கோடிக்கணக்கான அரக்கர்களை கொன்றார்.சரி நேரமாகி விட்டது நான் வருகிறேன்”
“தேவி,மன்னர் வந்து உங்களை கேட்டால் நாங்கள் என்ன பதில் சொல்வது..?
“உங்களுக்கு அந்த சிரமம் இருக்காது தளபதி..காத்தவராயன் வருவதற்குள் நான் திரும்பி விடுவேன்..வருகிறேன் என குதிரையை முடுக்கினாள்.”
அது மகேந்திரபுரியை நோக்கி பறந்தது…அவளுடன் சில வீரர்களும் சென்றனர்.

Dei thayavu senji intha story ah stop pannu da.. kevalama iruku..itha vera ivlo episode potutu iruka