அசுரன் Part 21 42

“சரிங்க தேவி,வாங்க வெளியில் போகலாம்..அப்பொழுது வெளியே செல்லும் பொழுது அழகிய வேலைப்பாடு மிகுந்த பெட்டி ஒன்று கண்ணில் பட்டது.அதை பார்த்து மதிவதனி நின்று”என்ன அது என கேட்க..”

“தேவி,அதை தயவு செய்து தொட வேண்டாம்..அதை திறக்க கூடாது என மன்னரின் ஆணை”

“ஏன் இதில் என்ன பரமரகசியம் அடங்கி இருக்கு..”

“தேவி,நாங்கள் அரக்கர் வம்சம்..எங்கள் வம்ச அரசர் கும்பகர்ணனை அழிக்க ஶ்ரீராமர் பயன்படுத்திய அக்னி அஸ்திரம் தான் அது..அதை பிரயோகிக்க சரியான வில் வேண்டும்.மேலும் இதை சரியான இலக்கு மீது தான் பிரயோகிக்க வேண்டும்..சாதாரண நபர்கள் மீது பிரயோகிக்க கூடாது அப்படி பிரயோகித்தால் அது நமக்கு தான் அழிவை தரும்..இதை பிரயோகிக்கும் வில் எங்கள் மன்னரிடம் கிடையாது..அதனால் மன்னர் அதை தொடுவதே இல்லை..”

“ம்ம்..அக்னி அஸ்திரம் பற்றி எனக்கும் தெரியும் காவலாளி.இந்த மாதிரி தெய்வீக அஸ்திரங்களை வலிமை மிகுந்த நபர்கள் மீது தான் உபயோகிக்க வேண்டும்..மேலும் இந்த அஸ்திரத்தை என் வில்லில் இருந்து எய்ய முடியும்..இதை எப்படி பிரயோகிக்க வேண்டும் என்று மட்டும் தான் எனக்கு தெரியாது..ஆமாம் உங்களிடம் இந்த அஸ்திரம் எப்படி கிடைத்தது..?”

“தேவி நான் தான் சொன்னேனே..!இது ஶ்ரீராமரின் அஸ்திரம்,அவர் விபிஷணனுக்கு கொடுத்து,பின்பு அவர் வம்சாவளியான எங்கள் கையில் வந்தது..”

மதிவதனி அடுத்த நாள் உப்பரிகையில் காற்றாட நடந்து கொண்டு இருக்கும் பொழுது,கீழே பெண்களின் கூக்குரல் கேட்டது..அங்கு நடந்த நிகழ்ச்சியை பார்த்து முற்றிலும் அதிர்ந்து விட்டாள்..எப்பொழுதும் எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் பெண்ணான அவளுக்கே அது உள்ளூர நடுக்கத்தை கொடுத்து விட்டது.

நூற்றுக்கணக்கான பெண்கள் ஒரு பெரிய திடலில் ஒரு பெரிய குழியை சுற்றி வட்டமாக நிற்க வைக்கப்பட்டு இருந்தனர்..அவர்கள் அனைவரும் பயத்தில் கதறி அழுது கொண்டு இருந்தனர்.அந்த குழி முழுக்க நிறைய மரக்கட்டைகள் போட்டு எரியூட்டி இருந்தனர்.

மதிவதனிக்கு உடனே புரிந்து விட்டது..அதை தடுக்க உடனே கீழே பாய்ந்து ஓடினாள்…

மதிவதனி தளபதியிடம் கோபத்துடன் “தளபதி இங்க என்ன நடக்குது…ஏன் இத்தனை பெண்களை குழியை சுற்றி நிக்க வச்சி இருக்கீங்க…”

தளபதி அவளிடம்,”தேவி, உங்கள் நாடு மீது படையெடுத்த போது உங்களால் கொல்லப்பட்ட வீரர்களின் மனைவிகள் இவர்கள்…எங்கள் நாட்டு வழக்கப்படி கணவனை இழந்த மனைவிகள் வேறொரு ஆடவனை திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்று கொள்ள வேண்டும்..அப்பொழுது தான் நாட்டின் மக்கள் தொகை உயரும்.சேனைக்கும் ஆட்கள் கிடைப்பார்கள்,அப்பொழுது தான் நாட்டை பாதுகாக்க முடியும்.ஆனால் இவர்கள் உயிர் இழந்த தங்கள் கணவனை தவிர வேறொரு ஆடவனை மணக்க மாட்டேன் என்று சொல்லி விட்டார்கள்.ஏற்கனவே போரில் நிறைய வீரர்களை நாங்கள் இழந்து விட்டதால் பாதிக்கு பாதி ஆட்கள் குறைந்து விட்டார்கள்..எனவே குழந்தை பிறப்பை அதிகப்படுத்த வேண்டிய முக்கியமான தருணத்தில் இவர்கள் முடியாது என்று சொல்வது நியாயமா..?இது இவர்கள் நாட்டுக்கு செய்யும் துரோகம் அல்லவா..!தண்டமாக இவர்களுக்கு ஏன் உணவளிக்க வேண்டும் என மன்னர் இவர்கள் அனைவரையும் உடன்கட்டை ஏற்ற சொல்லி விட்டார்.அதை தான் நாங்கள் செய்து கொண்டு இருக்கிறோம்..”

“இது அக்கிரமம்…முட்டாள்தனமான தீர்ப்பு இது..!இவர்களை உடனே விடுவியுங்கள்”என்று மதிவதனி கூற…

“தயவுகூர்ந்து மன்னியுங்கள் தேவி,ராஜாங்க விசயங்களில் பெண்கள் தலையிட கூடாது என்பது மாயமலையின் சாசனம்..தாங்கள் இதில் விலகி இருப்பது உங்களுக்கு தான் நல்லது..மன்னர் தீர்ப்பை யாராலும் தடுக்க முடியாது…”

“சரி மன்னர் எங்கே.?சொல்லுங்கள் நான் அவரிடம் சொல்லி விடுவிக்க சொல்கிறேன்..”

“மீண்டும் மன்னிக்கவும் தேவி,இன்று மகா சிவராத்திரி,அவர் மாயமலையின் இன்னொரு கோடியில் உள்ள தக்ஷின கைலாயம் சென்று உள்ளார்.அவர் நாளை இரவு தான் நாடு திரும்புவார்.அதுவரை நீங்கள் அவரை பார்க்க இயலாது..”

“அதுவரையாவது தயவு செய்து இந்த தண்டனையை நிறுத்தி வையுங்கள்.”

தளபதி சிரித்தான்..

“இவர்களின் கணவர்களை கொன்றதே தாங்கள் தான்..தாங்கள் இவர்கள் மீது பரிவு காட்டுவதை நினைத்து எங்களுக்கு சிரிப்பு தான் வருகிறது..”

மதிவதனி விடாமல்”படையெடுத்து செல்லும் பொழுது எதிரிநாட்டு வீரர்களை கொல்வது என்பது ஷத்ரிய தருமம்..அதிலும் பெண்களை,பசுக்களை கொல்ல கூடாது என்பது உங்களுக்கு தெரியாதா..!இப்படி அநியாயமாக பெண்களை கொல்வது ஏன்?அதுவும் உங்க நாட்டு பெண்களையே கொல்வது முறை தானா?

“உங்கள் நாட்டு சட்ட திட்டங்கள் இங்கே செல்லுபடியாகாது தேவி.. மாயமலையின் போர் விதிகளே வேறு..”

“சீக்கிரம் வேலைகள் ஆரம்பம் ஆகட்டும் ..”என தளபதி கத்தினான்..

1 Comment

  1. Dei thayavu senji intha story ah stop pannu da.. kevalama iruku..itha vera ivlo episode potutu iruka

Comments are closed.