அசுரன் Part 21 42

அப்பொழுது தீடீரென அபாய சங்கு முழங்கியது..கோட்டை கதவுகள் படாரென்று இழுத்து மூடப்பட்டன..

கோட்டை வாசல்வீரர்கள் தளபதியை நோக்கி ஓடி வந்தனர்..”தளபதி குந்தவை நாட்டு சேனையும்,விதர்பா நாட்டு சேனையும் நம் நாட்டை முற்றுகை இட்டு உள்ளன.”

தளபதி திகைப்புடன் “எப்படி அவர்கள் அடர்ந்த காட்டை தாண்டி முன்னேறி வந்தார்கள்?மாயமலையை முற்றுகையிடும் தைரியம் அவர்களுக்கு எப்படி வந்தது.?”

காவலர்களோ..”தளபதி யோசிக்க நேரம் இல்லை..அவர்கள் நாட்டை ஏற்கனவே பிடித்து விட்டார்கள்.இன்றிரவே கோட்டை கதவை தகர்க்க முயற்சி செய்து கொண்டு உள்ளார்கள்.அதற்காக அகழி மேல் தற்காலிக பாலம் அமைத்து கொண்டு உள்ளார்கள்..”

இன்றிரவே பதில் தாக்குதல் தொடங்க வேண்டுமே..வியூகம் அமைக்க மன்னர் வேறு இல்லையே என தளபதி கவலையில் ஆழ்ந்தான்.அவனுக்கு என்ன செய்வதென புரியவில்லை..நாட்டை காப்பாற்ற மதிவதனியை தவிர அவனுக்கு வேறு வழியில்லை என்று தோன்றியது..

“தேவி தாங்கள் தான் இப்போது எங்கள் நாட்டை காப்பாற்ற வேண்டும்”என அவள் காலில் விழுந்தான்.

மதிவதனி கைகளை கட்டி கொண்டு”எங்கள் நாட்டு விதியின் படி நான் நடந்து கொள்ள வேண்டுமெனில் நான் இருக்கும் நாட்டுக்கு சாதகமாக செயல்படுவது தான் தருமம்..ஆனால் என் நாட்டு சட்ட திட்டங்கள் தான் இங்கே செல்லுபடி ஆகாதே…!உங்கள் நாட்டு சட்டதிட்டபடி நடந்து கொள்ள வேண்டுமெனில் நான் இப்போ உங்களுக்கு உதவவே கூடாது..!நான் இப்போ எந்த நாட்டு சட்ட திட்டத்தை பின்பற்ற வேண்டும் என நீங்களே கூறுங்கள் தளபதி..”

“தேவி கண்டிப்பா உங்கள் நாட்டு சட்டதிட்டம் தான் இப்போ சரியானது.அதையே தாங்கள் பின்பற்ற வேண்டும்.நாங்களும் அந்த சட்டங்களையே ஏற்று கொள்கிறோம்..”

“அப்படியென்றால் என் நாட்டு சட்டதிட்டபடி எந்த பெண்களையும் துன்புறுத்த கூடாது.இவர்களை உடனே விடுவிக்க வேண்டும் .”,

“உத்தரவு தேவி…”

பெண்களின் கைகட்டுக்கள் உடனே அவிழ்க்கபட்டன.அவர்கள் அனைவரும் மதிவதனியை பார்த்து கைகூப்பினர்.

மதிவதனி உடனே அவர்களை பார்த்து,”நீங்கள் என்னை பார்த்து கைத்தொழ வேண்டும் என அவசியமில்லை..உங்கள் கணவர்களை கொன்றவள் நான்.இப்பவும் உங்கள் நாட்டை காக்க நான் எதிரி நாட்டு வீரர்களை கொல்ல தான் வேண்டும்.இது தான் சத்ரிய தருமம்..நான் செய்தது தவறாக பட்டால் என்னை மன்னியுங்கள்”என கை கூப்பினாள்.

மந்திர ஆலோசனை கூட்டம் உடனே நடைபெற்றது..

“மொத்தம் எத்தனை வீரர்கள் உள்ளனர் தளபதி” என மதிவதனி கேட்டாள்.

“மொத்தம் 2 லட்சம் வீரர்கள் உள்ளனர் தேவி.”

“எதிரி நாட்டு படையில் மொத்தம் பத்து லட்சம் வீரர்களுக்கு மேல் உள்ளனர்..யானை படை கூட நம்மை காட்டிலும் இரண்டு மடங்கு,கண்டிப்பா நேரே எதிர்த்து போர் செய்ய இயலாது.கோட்டையில் இருந்து வெளியேற வழி ஏதேனும் உள்ளதா..!தளபதி,”

சுரங்கப்பாதை ஒன்று உண்டு தேவி,அது காட்டில் இருக்கும் காமக்யா தேவி கோவில் வாசலில் முடிவடைகிறது..ஆனால் அதன் வழியே குதிரைகளை மட்டுமே கொண்டு செல்ல முடியும்…”

“இங்கே பாருங்கள் தளபதி,நேரம் குறைவாக உள்ளது.விடிந்து விட்டால் அவர்களுக்கு தான் சாதகம்..நான் சுரங்கப்பாதை வழியே பத்தாயிரம் வீரர்களைக் கூட்டி சென்று உடனே பின்பக்கமாக போர் தொடுக்கிறேன்.தாங்கள் இங்கு இருக்கும் மீதி வீரர்களை வைத்து கொண்டே கோட்டை மதில் சுவர் மீது இருந்து அவர்களை முன்னேற விடாமல் தடுத்து கொண்டே இருங்கள்.நான் பின்பக்கமாக அவர்களை தாக்க தொடங்கியதும் நீங்களும் கோட்டை கதவை திறந்து தாக்க தொடங்க வேண்டும்.சரியா…!”

“தேவி,உங்களுக்கு பத்தாயிரம் வீரர்கள் போதுமா…!”

1 Comment

  1. Dei thayavu senji intha story ah stop pannu da.. kevalama iruku..itha vera ivlo episode potutu iruka

Comments are closed.