அப்பொழுது மாடத்தின் மீது புறா ஒன்று வந்து அமர்ந்தது..அதன் இறக்கையில் செருகி வைக்கப்பட்டு இருந்த ஒலையை ஆவலோடு பிரித்து படித்தான்.
அதில் இருந்த செய்தியை பாத்து மிக்க மகிழ்ச்சி அடைந்து உடனே அமைச்சரை வரவைத்தான்.
அமைச்சரும் விரைந்தோடி வந்து “சொல்லுங்கள் மன்னா,இந்த நடுநிசியில் என்னை அழைத்த காரணம் என்ன..!? என கேட்டார்.
“மந்திரியாரே ,ஒற்றனிடம் இருந்து ஒரு நல்ல தகவல் வந்துள்ளது.. மதிவதனி, காத்தவராயனிடம் இருந்து தப்பி விட்டாளாம்.இப்பொழுது மாயமலை காட்டுக்குள் தான் அவள் இருக்ககூடும்.நம் படைகளை அனுப்பினால் உடனே அவளை மீட்டு கொண்டு வந்து விட முடியும்..”என ஆவலாக சொன்னார்.
அமைச்சர் யோசித்து”மன்னர் மன்னவா,ஆனால் மாயமலை காட்டுக்குள் போவது ஒன்றும் அவ்வளவு எளிது அல்லவே..!மேலும் இளவரசி அங்கிருந்து தப்பி இருப்பதை அறிந்து காத்தவராயன் ஆட்கள் அவளை தேடி பின் தொடர்ந்து வருவார்கள்.அப்பொழுது நாமும் இளவரசியை தேடி சென்றால் நாம் அவர்களை எதிர்கொள்ள நேரிட்டால் பெரும் சிக்கலாகி விடுமே..ஏற்கனவே காத்தவராயன் இளவரசியை தேடி யாராவது வந்தால் உங்கள் நாட்டையே உருக்குலைத்து விடுவேன் என எச்சரித்து இருப்பதை மறந்து வீட்டர்களா..!”என பயந்து கொண்டே கூறினார்.
“என்ன மந்திரியாரே..!அதற்காக என் கண்மணியை அப்படியே விட்டு விடுவதா..!மேலும் காத்தவராயனை அவன் கோட்டைக்குள் சென்று தாக்குவதை காட்டிலும் காட்டில் தாக்குவது நமக்கு பாதுகாப்பு தானே..!மேலும் நம் வரவை எதிர்பார்த்து இருக்க மாட்டான்.அதுவும் நமக்கு சாதகமே…!மதிவதனியை அவன் தேடும் பொழுது தீடீரென அவன் முன் தோன்றி போர் செய்தால் நம் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்..?
ஆனால் அமைச்சரோ தயங்கினார்.இருப்பது கொஞ்சம் வீரர்கள் தான்.இவர்களை கொண்டு படை எடுத்து சென்றால் தோல்வி நிச்சயம் என்று அவருக்கு தெரிந்தது.மேலும் இருக்கும் வீரர்களை மாயமலைக்கு அனுப்பி விட்டால் இங்கு கோட்டையை காக்க வீரர்களே இல்லாமல் போய் விடும்.அந்த நேரம் பார்த்து வேறு நாட்டு மன்னன் படை எடுத்து வந்தால் இருக்கும் நாடும் கைவிட்டு போய் விடும்
என்பதை பொறுமையாக எடுத்துரைத்தார்.
“மந்திரியாரே..!தக்க சமயம் வந்துள்ளது..இதை விட்டால் நமக்கு சரியான சந்தர்ப்பம் மீண்டும் கிடைக்காது..”என மீண்டும் வலியுறுத்தினார்.
அமைச்சர் வேறு வழியில்லாமல்”மன்னா..!இப்படி வேண்டுமானால் செய்யலாம்..!மதிவதனி வாழ்க்கையை கணித்த ஜோசியரை வரவழைத்து இளவரசியின் தற்போதைய நிலையை குறித்து கேட்கலாம்..பிறகு நாம் படை எடுத்து செல்வதே உசிதம்..”
மகேந்திரவர்மனும் ஏற்று கொண்டு உடனே காவலாளியை அனுப்பி ஜோசியரை அழைத்து வர சொன்னான்.
ஆனால் ஜோசியர் வந்து கூறப்போகும் செய்தியானது அவர்களுக்கு அதிர்ச்சியை தரபோகிறது.. ஏனெனில்…?
