அவளின் சத்துக்கொடியும் பூனை மயிரும் 45

”ட்ரிங்…. ட்ரிங். . ”
சைக்கிள் மணிச்சத்தம் கேட்டதும் ஒரு சேரப் பின்னால் திரும்பிப் பார்த்தார்கள்… மலருதாவும் .. யுகநிதாவும் !!!
மணியடித்த…சுதனைப் பார்த்ததும். . உடனே மலர்ந்தது மலருதாவின் முகம். அவளின் சிவந்த அதரங்களில் .. புண்ணகை அரும்பியது !

அதை கவனிக்காதவன் போல மருபடி மணியடித்தான் சுதன்!
” ட்ரிங். … ட்ரிங். .. ”
” ஏய் ஓரமாவாடி… சைக்கிள் பெல் அடிக்கறாங்க இல்ல. . ? ” என தன் தோழியின் கையைப் பிடித்து இழுத்தாள் யுகநிதா !
ஒதுங்காத மலருதா..
” ஆ… ! போகட்டும் மெதுவா .. இப்ப என்ன அவசரம்… சாருக்கு” என அவன் காதுபடவே சொன்னாள் … !
அவள் சொன்னதைக் காதில் வாங்கிய சுதன்
” அலோ… மேடம் வழிவிடுங்க” என்றான். கிணாடலாக.!
உடனே சொன்னாள் மலருதா.
” நா… ஒண்ணும் மேடம் இல்ல யங்கேர்ள் … ! கால் மி… மலருதா .. ”
” ஓகே. . யங்கேர்ள் மலருதா. . கொஞ்சம் வழி விடறீங்களா ப்ளீஸ். .. ” என இன்னும் கிண்டல் தொணிக்கக் கேட்டான்
” ஆ… அது. .. ” எனச் சிரித்தவாறு ஒதுங்கி. . வழிவிட்டாள்.
அவர்கள் வீட்டுக்குச் செல்லும் வழி அது. . சின்ன வீதிதான் ! அவன் குடியிருப்பது மலருதாவீன் வீட்டுமாடியில் !
அவன் சிரித்தவாறு நகர. ..
” அப்றம் எங்க உங்க ஃபிரெண்டக்காணம்….” எனக் கேட்டாள் !
” வீட்லருக்கான் ” என்று விட்டுப்போனான் !
அவன் போனதும் யுகநிதா…
” ஆனாலும் நீ ரொம்பத்தாண்டி.. ஓட்ற.. ” என்றாள் !
உதட்டில் புண்ணகை அரும்ப..
” எல்லாம் ஒரு ஜாலிதாண்டி ஆனாலும் பாரு நா என்ன பேசினாலும். . சிரிச்சிகிட்டேதான் போவான் ” என்றாள் !
” ம் … ! புதுசா குடிவந்துருக்காங்க இல்ல. . நீ வேற வீட்டு ஓனர் மக…! உன்ன பகச்சுக்கவா முடியும் ? ”
” அதுமட்டுமில்லடி … நம்மள மாதிரி ஒரு சூப்பர் ஃபிகர் ஃபிரெண்ஷிப் கெடைக்கறதுனா யாருதான் வேண்டாம்பாங்க.. ?”
” இவங்க ரெண்டு பேரையும் பாத்தா… ரொம்ப டீஸண்டா தெரியராங்களே… ”
” ஆமாடி … அதும் இவன் இருக்கானே.. நா வழிய வழியப் போய் பேசினாலும். .. கண்டுக்கவே மாட்டேங்கறான். அதான் எனக்கு ரொம்பக் கவலையாருக்கு. .. ” என்றாள்.
” கவலையாருக்கா…. ? ”
” ம் … ம் ! ஒரொரு சமயத்தில என்னப் புடிக்கலையோனு கூட நெனைக்கத் தோணுது.. ”
” என்னடி சொல்ற… அப்படின்னா ? ” யுகநிதா திகைப்புடன் கேட்க. ..
முகத்தில் … பெண்மையின் நாணம் பொங்கச் சிரித்தாள் மலருதா !
” யா… ஐ.. திங்க் … ”
” யூ… திங்க … ? ”
” ஐ’ ம் .. இன் .. வித் … ”
” லவ்… வா … ? ”
” ம்… ! ”
” எப்பருந்துடி… ? ”
”அவன பாத்ததுலேர்ந்தே .. ”
” ஏய். .. என்னடி சொல்ற… ? ”
” இன்னுமா… புரியால உனக்கு?”
” உனக்குத்தான்டி புரியல.. ”
” என்ன புரியலன்ற.. ? ”
” அவங்கல்லாம் வயசுல பெரியவங்கடி… காலேஜ்லாம் கூட முடிக்கப் போறாங்க.. ஆனா நாம… இப்பதான்…செவந்த் படிக்கறோம்.. ”
” அதனால என்னடி.. நாமதான் ஏஜ் அட்டன் பண்ணிட்டோம்ல.. அது ஒண்ணு போதுமே…. அவ அவ ஏழு எட்டு வயசுலயே லவ் பண்ண ஆரம்பிச்சிர்றாளுக… ”
” ஐயோ லூசு… எந்த வயசுல பண்றோம்ன்றது முக்கியமில்ல..!
அந்தந்த வயசுக்கு தகுந்த ஆளுகள பண்ணணும் அதான் ரொம்ப முக்கியம்.. இவங்கள்ளாம் நம்ம ஏஜ்க்கு ரொம்ப… ஓவர்.. ”