மறுபடியும் மறுபடியும்! 106

“டே வெங்கடேசா உன் போன் அடிக்குறது கொஞ்சம் என்னானு பாருடா” சொல்ல

“அய்யோ அத்திம்பேர் நீங்களே எடுத்து யாரு பாருங்கோ” சொல்ல அவளும் காலை அட்டன் செய்ய

மறுமுனையில் இருந்து,

“டே பேமாணி நா சுபா பேசுறேன்டா. உனக்கு எத்தினி தடவடா கால் பண்றது. ஒரு தரம் கூட போன் பிக் பண்ணாம என்ன தான் புடுங்கிட்டு இருந்தியோ அப்படி தெரியல.. உன்னால ஒரு பொண்ண இருந்து இழுத்திட்டு வர முடியல.. நீ எப்படி கட்டிக்கிற பொண்ண காலம் முழுக்க கை பிடிச்சு இழுத்திட்டு போவ கசுமாலம். உன் கல்யாணத்துக்கு போய் வந்தேன் பாரு. உனக்குலா கல்யாணம் ஒரு கேடா.. எங்கடா இருக்க.. உன் வீட்டாண்ட வரனும்னா எப்படி வரது.. வழிய சொல்லு மடபயலே” என விடாமல் பேச

“பேசி முடிச்சிட்டியாமா.. நீ என்னம்மா.. இப்படி கால் அட்டன் பண்ணதும் படபடனு பொறிஞ்சு தள்ற” இங்கிருந்து கேட்க

“வெங்கட் நம்பர் தான..”

“ஆமா.. அவன் நம்பர் தான். அவன் அத்தை தான் பேசுறேன்.”

“நா சுபா.. சுப மித்ரா.. சென்னையில இருந்து வெங்கட் மேரேஜ்க்காக வரேன்.. என் டாடியும் அவன் டாடியும் பிரண்ட்ஸ்.. சோ மேரேஜ் அட்டன் பண்றதுக்காக வந்தேன். சென்னை ஏர்போர்ட், கோயம்புத்தூர் ஏர்போர்ட் கால் பண்ணேன்.. அட்டன் பண்ணவே இல்ல.. அதான் கொஞ்சம் கடுப்புல ஹார்ஸ்ஸா பேசிட்டேன்..”

“கொஞ்சம் இல்ல.. ஜாஸ்தியாவே பேசிட்ட. சரி நீ எங்க நின்னுண்டு இருக்க?”

“இங்க ரமா பிரபா அபார்மெண்ட் பக்கம் நிக்கிறேன்..”

“அங்கேயே நில்லு.. ஆள் அனுப்புறேன்..” சொல்ல

“சரிங்க” என்றாள் மித்ரா..

“டே வெங்கடேசா உன் கூட சுபா ஒரு பொண்ணு வரனுமாம்ல” அவன் அத்தை கேட்க வெங்கட்க்கு அவன் அம்மா சொன்னது இப்போது தான் நியாபகம் வந்தது.

“ஆமா அத்திம்பேர்.. அம்மா சொன்னா ஆனா நா தான் டென்சன்ல மொபைல சைலைண்ட் போட்டுட்டேன்.. இப்ப என்ன ஆயிடுத்து..”

“இப்ப அவ தான் கால் பண்ணா. கால் அட்டன் பண்ணதும் சேரியில பேசுற பாஷையில என்ன என்னமோ உன்ன திட்டினா.. நேக்கு ஒன்னும் புரியல.. அவள ஆள் அனுப்பி கூப்பிட்டு வர சொல்லியிருக்கேன்.. வந்தானா பாத்து என்னானு நீயே பேசிக்கோ” என சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு போனாள் பரிமளா.

போகும் போது “என் அண்ணாக்கு இப்படி ஒரு சிநேகிதனா?” என ஆச்சரியபட்டு முனங்கி கொண்டே சென்றாள்..